Language Selection

புதிய ஜனநாயகம் 2009

வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.

அவர் குடும்பத்தினர்þ சலீமை உடனே பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மருத்துவமனை, ஆரம்ப பரிசோதனை செய்துவிட்டு சலீமை உள்நேõயாளியாகச் சேர்த்தது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக இரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு முன் "முன்னெச்சரிக்கை'' நடவடிக்கை என்ற பெயரில் பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே நோய் பரவாமலிருக்க கிருமி நாசினிகள்þ முகமூடிகள், சோப்புகள், துப்புரவுக் கைக்குட்டைகள் மற்றும் வைட்டமின் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவமனை பரிந்துரைத்தது.

 

இறுதியாகþ நான்காவது நாளில் பன்றிக் காய்ச்சல் இல்லை; சாதாரண காய்ச்சல்தான் என்று பரிசோதனை ஆய்வகம் கூறியது. சலீம் குடும்பத்தினர் இதை கேட்டு "அப்பாடா'' என்று பெருமூச்சு விடுவதற்குள்þ நான்கு நாளுக்கான படுக்கை மற்றும்சிகிச்சை செலவிற்கு 15þ000 ரூபாய் பில்லை நீட்டி அம்மருத்துவமனை "அதிர்ச்சி'' வைத்தியம் கொடுத்தது. சவூதியிலிருந்து சலீம் கொண்டு வந்த சேமிப்பை பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளும் மருத்துவமனையும் ருசி பார்த்தன.

 

இது ஏதோ சலீமுக்கு மட்டுமே நடந்ததாகக் கருதவேண்டாம். கடந்த 3 மாதங்களாக செய்தி ஊடகங்கள்þ பொதுமக்கள் மத்தியில் பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாறாகþ ஒவ்வொரு ஊடகமும் பன்றிக் காய்ச்சல் பற்றிய பீதியை உருவாக்கிக் கொண்டு வருகின்றன. கிரிக்கெட் ஸ்கோர் போல் உடனுக்குடன் தொடர்ச்சியாக இறப்புகளை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்துதல்; ஒவ்வொரு நோயாளியயும் நோயாளி குடும்பத்தினரையும் பின் தொடர்ந்து நேரடியாக செய்தி வெளியிடுவது; நேர்காணல்கள்; விவாதம் முதலான பெயர்களில் பயத்தையும் பீதியையும் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கின.

 

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் கைப்பாவையான உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைகள் அடித்தளமாக இருந்தன. உலகில் 391 கொடிய தொற்று நோய்கள் உள்ளன என்றும்þ இவற்றில் 247
தொற்று நோய்கள் மரணத்தை விளைவிக்கும் என்றும் 2008இல் இந்நிறுவனத்தின் அறிக்கை எச்சரித்தது. இதன் விளைவாக, இந்தியா மற்றும் உலக அரங்கில் மக்களிடையே பன்றிக் காய்ச்சல் பற்றிய பயபீதி நிலைகொண்டு வினை ஆற்ற ஆரம்பித்தது.

பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒன்றான டாமிபுளுவைþ ரோஷ் என்ற பன்னாட்டு நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மற்றொரு மருந்தான ரிலின்ஜாவைþ கிளாக்சோ நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பன்றிக் காய்ச்சல் பீதியைத் தொடர்ந்து, இவ்விரு நிறுவனங்களின் மருந்து விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது. ரோஷ் நிறுவனத்தின் டாமிபுளு விற்பனைþ கடந்த ஜனவரி முதல் ஜூன் 2009க்குள் 200 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 4685 கோடி ரூபாய்க்கு இம்மாத்திரை விற்பனையாகி
யுள்ளது. இது, இந்த ஆண்டு இறுதிக்குள் 10þ000 கோடி ரூபாயை எட்டி விடும் என்று வணிக இதழ்கள் கூறுகின்றன. மேலும், 2006இல் பறவைக் காய்ச்சல் நோய் பரவி கொண்டிருக்கும் போதுþ டாமிபுளு விற்பனை மூலம் 2005ஆம் ஆண்டில் பெற்ற இலாபத்தை விட, இந்நிறுவனம் 17 சதம் கூடுதல் இலாபம் (900 கோடி ஸ்விஸ்ஃபிராங்க்) பெற்றது. இம்முறை இது பன்மடங்கு கூடும் என்று வணிக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

இன்னொரு பக்கம்þ கிளாக்சோவின் ரிலின்ஜா மருந்து விற்பனை 1900 சதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 2009க்குள் அந்நிறுவனம் 492 கோடி ரூபாயைக் கல்லா"கட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தித்திறனை மூன்று மடங்காக உயர்த்தி, 60 நாடுகளுக்கு 19கோடி விழுங்களவு (Doses) மருந்துகளை விற்பனை செய்ய உள்ளது.

 

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட 25 நிறுவனங்கள் ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளன. இதில் சநோபிபாஸ்டர், அஸ்டராஜெனிக்கா, கிளாக்சோþ பேக்டர்,  நோவாத்திரிஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை சந்தைப்படுத்தி 80 சதவீத தேவையை நிறைவு செய்யும் என கூறப்படுகிறது. கிளாக்சோ நிறுவனம் 16 நாடுகளில் 19.5 கோடி தடுப்பூசி மருந்துக் குடுவைக்கு முன்பதிவு (ஆர்டர்) பெற்றுள்ளது. மேலும் 50 நாடுகளிலில் முன் பதிவைப் பெற அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம்þ ரிலின்ஜா மாத்திரை மற்றும் தடுப்பூசி விற்பனை மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 24,000 கோடி ரூபாயை ஈட்ட உள்ளது. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, திவால் நோட்டீசு கொடுக்கப் போன புரோட்டின் சயின்ஸ் கார்ப்ப÷ரஷன் என்ற தடுப்பூசி மருந்து நிறுவனம்þ இப்போது அமெரிக்க அரசிடமிருந்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்துக்கான ஆர்டர்களைப் பெற்று மீண்டெழுந்துள்ளது.

 

உலக மக்கள் பன்றிக் காய்ச்சல் பயபீதியில் உள்ள பின்னணியில், மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட இலாபம் கிடைப்பதோடு, அது
பலமடங்கு பெருகத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களின் பங்குகள்þ பங்கு சந்தையில் விரைவான ஏற்றத்தைக் கண்டு வருகின்றன. உதாரணமாக, நோவாவெக்ஸ் என்ற மருந்து கம்பெனியின் பங்கு விலை 79 சதம் உயர்ந்துள்ளது.

 

பயபீதியும் அதன் மூலம் அடைந்த கொள்ளை லாபமும் மருந்து கம்பெனிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சோப்பு, கிருமிநாசினி, டானிக்குகள், லேகியங்கள், துப்புரவுக்கான கைக்குட்டைகள், முகமூடிகள்þ வைட்டமின் மாத்திரைகள் மற்றும் வெப்பமானி உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கோடிகோ டியாய் கல்லா கட்டி வருகின்றன. மேற்குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும்þ தங்களுடைய பொருட்களின் விளம்பரத்தில் பன்றிக் காய்ச்சலை மையப்படுத்தி புதிய விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, யூனிலிவர் நிறுவனம் லைப்பாய் சோப்புக்கு ""பன்றிக் காய்ச்சல் கிருமியை அப்புறப்படுத்தும்'' என்ற வாசகத்துடன் மோசடியாக விளம்பரம் செய்கிறது.

 

நாள் ஒன்றுக்குþ ஒரு மருந்து கடையில் 10 வரை விற்றுக் கொண்டிருந்த "டெட்டால்'' என்ற கிருமி நாசினி, இப்பொழுது 100þ 200 என்ற அளவில் விற்பனை ஆகிறது. இந்த பன்றிக் காய்ச்சல் பயபீதியால், டெட்டால் மருந்தின் இந்திய சந்தை 1000 கோடி ரூபாயாகப் பெருகியுள்ளது. ஜான்சன் நிறுவனத்தின் ""ப்யூர்ல்'' என்ற கிருமி நாசினியின் விற்பனையோ, 210 கோடி ரூபாயிலிருந்து 452 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஹிமாலயா மருந்து கம்பெனியினால் அறிமுகப்படுத்தப்பட்டு, அவ்வளவாக எடுபடாமல் போன "ஃப்யூர் ஹேண்ட்ஸ்'' என்ற கை சுத்தம் செய்யும் கிருமி நாசினியின் விற்பனை தற்போது 5 மடங்காக அதிகரித்துள்ளது. முகமூடி கம்பெனியான ரெலிகேர் பல கோடிகளை இலாபமாக அள்ளியுள்ளது. இன்னொரு பக்கம் சில்லரை மருந்து விற்பனையில் ஈடுபடும் பெரும் வர்த்தகர்கள், மருந்துகள் மற்றும் முகமூடிகளை பதுக்கியும் விலை யேற்றியும் விற்று கணிசமாக சம்பாதித்துள்ளனர். இப்படி தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களான யூனிலிவர், டாபர், ஜான்சன், ரிலிகேர், ஐடிசி, கோத்÷ரஜ், ஹிமா லயா போன்றவை பன்றிக் காய்ச்சல் பீதியை பயன்படுத்தி நடுத்தர மக்களை மொட்டையடித்து வருகின்றன. ஏறத்தாழ 200 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு மனித இனம் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலுக்கான மருந்துமாத்திரை மற்றும் சிகிச்சைகளுக்குச் செலவிட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது.

 

மருந்துகளைப் பயன்படுத்தியோ அல்லது கிருமி நாசினிகள், முகமூடிகள் மட்டுமே கொண்டு பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியுமா? இது நுனிப்புல் மேய்ந்த கதையாகத்தான் இருக்கும். பறவை மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற புதிய நோய்களின் ஊற்றுக் கண்களை அடையாளம் கண்டு களையவேண்டும். இந்நோய்களுக்கு ஊற்றுக் கண்ணாய் இருப்பது, மேலைநாடுகளில் நிலவும் முதலாளித்துவ விவசாயகால்நடைஉற்பத்தி முறையே ஆகும்.

 

பரவலாக இருந்த பல ஆயிரக்கணக்கான சிறு கால்நடை விவசாயிகளை ஒழித்துகட்டி, ஒரு குறிப்பிட்ட புவியமைப்பு பகுதிகளில் குவிமையமாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இலட்சக்கணக்கான கால்நடைகளை அதிதீவிர முறையில் தொழிற்சாலை போல் வளர்ப்பதே முதலாளித்துவப் பாணியிலான கால்நடைப் பண்ணை உற்பத்தி முறையாகும். இப்படிப்பட்ட உற்பத்தி முறையினால்தான் பன்றிகள், பறவைகள் மற்றும் இதர கால்நடைகளுக்கும் மனிதர்களும் இடையில் நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. மேலும்þ இப்பண்ணைகள், நோய் கிருமிகள் தன்னை மரபுரீதியாக மாற்றியமைத்து கொள்ள ஏற்ற இடமாகவும் உள்ளது. ஆகையால், முதலாளிகளின் இலாபவெறியும் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களும் ஒன்றுக்கொன்று நேரடியாகத் தொடர்பு உள்ளதாகும். இலாபவெறி பெருகப் பெருக பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களும் பெருகுகின்றன. இப்படி ஒரு பிரிவு முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நோயைþ மற்றொரு பிரிவு முதலாளித்துவம் பயன்படுத்திþ பீதியூட்டி மேலும் கொழித்துக் கொண்டிருக்கிறது.

 

இன்னொரு பக்கம்þ பன்னாட்டு மற்றும் தரகு முதலாளித்துவ மருந்து கம்பெனிகள் ஏகபோகமாக மக்களை சுரண்ட, சுகாதார துறையானது எந்த ஒரு விதிவிலக்கும் இன்றி தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுþ சுகாதாரதுறைக்கு என்று ஒதுக்கும் நிதி மிக அற்பமானது. கடந்த பல ஆண்டுகளாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.12 சதமே சுகாதார துறைக்கு ஒதுக்கப்படுகிறது. (தற்சமயம் சீனஅரசு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதத்தை ஒதுக்கியது. இதை 6 சதமாகவும் உயர்த்தத் தீர்மானித்துள்ளது). மேலும், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விதிப்படிப்பார்த்தால், 6 லட்சம் மருத்துவர்கள் நம் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளனர். இதற்கு மேல் செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையும் உள்ளது. பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை ஆய்வு செய்து உறுதி செய்யக் கூடிய அரசு ஆய்வகங்கள் வெறும் 18 மட்டுமே உள்ளது.

 

பொது மருத்துவச் சேவையை வலுப்படுத்துவதற்கு மாறாக, இருக்கும் அற்ப சேவைகளையும் தனியார்மயமாக்கப்பட்டு வருவதன் விளைவாகþ ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் காசநோயால் இறக்க நேரிடுகிறது; 30 முதல் 40 லட்சம் பேர் மலேரியா நோய்க்கு ஆளாகிறார்கள். 80 சதத்திற்கும் மேலான மருத்துவசேவையை பெறþ தனியாரிடம் கைகட்டி நிற்க வேண்டிய அவலம் நேரிடுகிறது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக பலமணி நேரம் காக்க வேண்டி இருக்கிறது. அல்லது தனியார் ஆய்வகத்திடம் 1500 முதல் 4000 ரூபாய் வரை அழ வேண்டியுள்ளது. பன்றிக் காய்ச்சலைப் பயன்படுத்தி பீதியூட்டிþ தனி யார் மருந்து கம்பெனிகள் முதல் மருத்துவமனைகள் வரைகொள்ளையடிக்க இவை மேலும் வாய்ப்பளிக்கின்றன. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மூலக்காரணமாக இருந்து, பன்றிக் காய்ச்சலைப் பயன்படுத்திச் சுரண்டும் முதலாளித்துவத்தை ஒழிக்காமல், மருத்துவ  சுகாதாரத் துறையைத் தனியார்மயமாக்கி நாட்டு மக்களின் உயிரையே காவு கொண்டு வரும் இன்றைய ஆட்சியாளர்களை வீழ்த்தாமல், நோய் நொடியற்ற சமுதாயத்தைக் கட்டியமைக்கவே முடியாது.


· சுடர்