Language Selection

புதிய ஜனநாயகம் 2009

கடந்த ஜூலை மாதத்தில்,  தில்லிமாநகரின் கட்டிடம் ஒன்றில், சரியாகக் கட்டி முடிக்கப்படாத எட்டாம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கலவை இயந்திரம் ஒன்று கீழே விழுந்ததில்þ அதே கட்டிடத்தின் அடித்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த சுனில் என்ற தொழிலாளி, இயந்திரத்தின் அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவம், அதே கட்டிடத்தில் நடந்தது. அச்சம்பவத்தில் பொருட்களைக் கட்டிடத்தில் ஏற்ற உதவும் கி÷ரன் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரது உடலைப் பார்க்கக்கூட மற்றதொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசயாரும் முன்வராததால்þ அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார், தொழிலாளர்களை அடித்து விரட்டியதால் அந்தப் பகுதி முழுவதுமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

 

இந்நிலையில் ஜூலை சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்புதான்þ தெற்கு தில்லியின் ஜம்ருத்பூர் பகுதியில் புதிதாகக்கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், பதினைந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு, தில்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்காகக் கட்டப்படும் மிகப் பெரிய கட்டுமானங்களில் நடைபெற்றவை. பொதுவாக கட்டிடங்களைக் கட்டும் போது, சிமெண்ட் கலவை இயந்திரத்தை தரையில் வைத்துக் கொண்டுþ கலவையை மேலே எடுத்துச் செல்வது வழக்கம்.ஆனால் மிகப்பெரிய கட்டிடங்களைக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, வேலையைத் துரிதப்படுத்த கலவை இயந்திரத்தையே ஒவ்வொரு தளமாக எடுத்துச் செல்கின்றனர். அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படாத தால், இது போன்று விபத்துக்களில் உயிரிழக்கும்þ முடமாகிப் போகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

காமன்வெல்த் போட்டிகளுக்கென 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்þ பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சுரங்க ரயில் பாதைகள்þ நகரம் முழுக்க போக்குவரத்து சீரமைப்புþ அகலமான சாலைகள் — என தில்லி நகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நகரின் "அழகைக் கெடுக்கும்' குடிசைகளை, வெளிநாட்டினரின் கண்களிலிருந்து திரை கட்டி மறைப்பதற்காக ஒரு லட்சம் மூங்கில் கழிகளை வாங்கவிருக்கிறார்கள். நகரில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களைப் பிடித்து நகருக்கு வெளியே விடுவதற்கு 12 லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கென சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இது போன்ற பல "புரட்சிகரமான' திட்டங்களுடன்þ உலகத் தரம் வாய்ந்த புதிய விளையாட்டு அரங்கங்கள் கட்டுவது, பழைய விளையாட்டு அரங்கங்களைச் சீரமைப்பது போன்ற கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்குவதற்கென்றுþ 200 கோடி ருபாய் செலவில் காமன்வெல்த் கிராமம் ஒன்றும் உருவாக்கப் படுகின்றது. 118 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த கிராமத்தில், வீரர்கள் தங்குவதற்கென 1168 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அது மட்டுமன்றி குளிரூட்டப்பட்ட அரங்கங்கள், சுகாதார மையங்கள்,  பொழுதுபோக்கு நிலையங்கள், வங்கிகள் — எனசகல விதமான கட்டிடங்களும் கட்டப்படுகின்றன.

 

துபாயைச் சேர்ந்த எம்மார் என்ற கட்டுமான நிறுவனம், இந்தப் பணிகளை முடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. வேலைகளைத் துரிதப்படுத்த, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உ.பி., மே.வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்துþ சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர். இவர்களை முறையாகப் பதிவுசெய்து வேலைக்கு எடுப்பதில்லை. இந்தத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்புக் கருவியாக ஹெல்மெட் ஒன்று வழங்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஏதோ பாதுகாப்புக் கவசம் போலத்தோன்றும் இந்த ஹெல்மெட்டுகள், ஒரு செங்கல் விழுந்தால் கூட உடைந்து நொறுங்கிவிடும் தரத்தில்தான் இருக்கின்றன. உயரமான கட்டிடங்களில் முறையான பாதுகாப்புச்
சாதனங்கள் ஏதுமின்றி உயிரைப் பணையம் வைத்துத்தான் இவர்கள் வேலை செய்தாக வேண்டும்.

 

வேலைநேரத்தில் விபத்து ஏற்பட்டு, யாரேனும் உயிரிழக்க நேரிட்டால், உடனே அவரது உடலை அப்புறப்படுத்தி விடுகின்றனர். விபத்து நடந்த கட்டிடத்தில் சில நாட்களுக்கு வேலை நிறுத்தப்படும்þ இறந்தவரது சக தொழிலாளர்களுக்குச் சிறிது பணம் கொடுத்து அவர்களை அனுப்பிவைத்து விட்டுþ எதுவும நடக்காதது போல,  அப்படி ஒருவர் இங்கு வேலை செய்யவே இல்லை என்பதுபோல, மீண்டும் வேலைகள் நடக்கத் தொடங்கிவிடும். இறந்தவரது உடலே உறவினர்களுக்குக் கிடைக்காத போது,  நிவாரணம் மட்டும் எப்படிக் கிடைக்கும்? நிவாரணத்தைப் பற்றிய பேச்சுக்கே அங்கு இடமில்லை. கட்டிடத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கு ம் 1996ஆம் ஆண்டின் சட்டமானதுþ வாரத்திற்கு 48 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் இங்கோþ வெகு விரைவாகக் கட்டிடங்களைக் கட்டிமுடிப்பதற்காகத் தொழிலாளர்களை நாளொன்றுக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு 72 மணி நேரம் வரை வேலை செய்யச்சொல்லிக் கசக்கிப் பிழிகின்றனர். இதனை நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத் சங்கம் என்ற கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுபாஸ் பட்னாகர் உறுதிசெய்கிறார். இப்படிக் கடுமையாக வேலை வாங்கப்படும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் முறையாகத் தரப்படுவதில்லை. அப்படியே தந்தாலும் அதனை மொத்தமாகத் தராமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துத் தருகிறார்கள். சில சமயங்களில் மூன்று மாதங்கள் வரை கூட சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

 

தொழிலாளர்கள் தங்குவதற்குச் சரியான வீடுகளும்þ கழிப்பிடங்களும் கட்டித்தரப்படுவதில்லை. பெரும்பாலும் பிளாஸ்டிக் தார்ப்பாய்களைக் கூரைகளாகக்
கொண்டோ அல்லது தகரக் கொட்டகையிலோதான் தொழிலாளர்களது வீடுகள் உள்ளன. அவர்களுக்கு குடிநீர் வசதிகூடச் செய்து கொடுப்பதில்லை. இங்கு நிலவும்
சுகாதாரக் கேட்டின் காரணமாக மெனிங்டிஸ் என்ற நோய் தாக்கி இதுவரை நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்கு அருகிலேயே கம்பிவேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற குடியிருப்புகள் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்றே உள்ளன.

 

இந்தக் குடியிருப்புக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUDR) என்ற அமைப்பினர்þ தொழிலாளர்களிடம் அவர்களின் வேலையிடம், வாழ்க்கை முறை போன்றவற்றைக் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தச் சென்ற போதும் கூட, உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதே அமைப்பினர் 1982இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை வெளிக்கொண்டுவந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டுமானக் கம்பெனிகள், தனியாக குண்டர்களை வைத்துக் கொண்டு தொழிலாளர்களை மிரட்டி வருகின்றனர். தொடர்ச்சியான தொழிலாளர்களின் மரணம் குறித்து விசாரிக்கச் சென்ற உண்மை கண்டறியும் குழுவினரை, இந்த நிறுவனத்தினர் இதே குண்டர்களை வைத்து மிரட்டியுள்ளனர்.

 

நாடு முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளர்களை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் அரசு, நாட்டின் தலைநகரிலேயே இப்படிப்பட்ட கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதைக் கண்டும் காணாமல் அனுமதித்துள்ளது. இதனால் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெளியே
தெரியவருவதில்லை. கடந்த ஓராண்டில்þ போலீசின் கணக்குப்படியேn காமன்வெல்த் கிராமத்தில் மட்டும் 48 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 98 பேர் படுகாயமடைந்து முடமாகிப் போயுள்ளனர். தில்லி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 90 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மெட்ரோ நிர்வாகத் தலைவர் சிறீதரன் ஒப்புக் கொள்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்தைக் குறுகிய காலத்திற்குள் முடித்ததற்காக,  முதலாளித்துவ ஊடகங்களால், நாயகனாகப் போற்றப்படும் இதே சிறீதரன் தான், "கட்டுமான வேலை என்றால் உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்யும், வேலை ஒழுங்காக நடக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள்'' எனத் தொழிலாளர்களைப் புழுக்களைவிடக் கேவலமாகக் கருதிப் பேசியிருக்கிறார்.

 

இருக்கிற பிரச்சினைகள் போதாதென்றுþ தற்போது காமன்வெல்த் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பென்னல், கட்டுமானப் பணிகள் சரியான வேகத்தில் நடைபெறவில்லை என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் அவற்றை முடிக்க இந்தியாவால் முடியுமா என்பது சந்தேகம்தான் என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். விரைவாக வேலைகளை முடிப்பது என்ற பெயரால், இன்னும் பல கொடிய விபத்துகள் நடக்கப் போவதையும் தொழிலாளர்களின் உயிர்ப்பலிகள் கேள்விமுறையின்றித் தொடரப் போவதையுமே இது அபாயச் சங்காக எதிரொலிக்கிறது.

 

இந்நிலையில், உலக நாடுகளுக்கு மத்தியில் தனது போலி கவுரவத்தை நிலைநாட்ட, இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பையும் இரத்தத்தையும் உறிஞ்சி, அவர்களில் பலரை நரபலிகொடுத்து, இந்திய அரசு உருவாக்கிவரும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி எனும் பிரம்மாண்டமான கேளிக்கைய நம்மால் இரசிக்க முடியுமா? கட்டுமானத் துறை ஏகபோக முதலாளிகளின் கொழுத்த ஆதாயத்துக்காக, நமது வரிப்பணத்தை வாரியிறைத்து நடத்தப்படும் இந்த வக்கிரமான கூத்தையும், அதற்காக கூலித் தொழிலாளர்கள் பலியிடப்படுவதையும் இனியும் சகித்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?


· அழகு