Language Selection

மூடநம்பிக்கைக்கு எதிராகவும்þ சுயமரியாதைக்காகவும், மனிதகுல மேன்மைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட நாத்திகம் இராமசாமிþ தனது 77வது வயதில் 24.09.2009 அன்று சென்னையில் காலமாகிவிட்டார்.

தனது 17 வயதில் சென்னைக்கு வந்த இராமசாமிþ பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் ÷சர்ந்தார். பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றிருக்கிறார். 1958 செப்டம்பர் 18ஆம்
தேதியன்று பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காக""நாத்திகம்'' பத்திரிகையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தினசரியாகவும் பின்னர் வார இதழாகவும்þ தொடர்ந்து வந்த இவ்விதழ்þ அவர் மரணமடையும் வரை கடந்த 51 ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.

 

இராமாயண கதாபாத்திரங்களின் யோக்கியதைகளை அம்பலப்படுத்தி அவர் எழுதியவை, தமிழக மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாகþ புட்டபர்த்தி சாய்பாபாவின் மோசடிகளை அவர் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி எழுதிய காலத்தில், ""நாத்திகம்'' நாளேடு கடைகளில் கிடைக்காமல் போகுமளவுக்குப் பரபரப்பாக விற்பனையாகியது. பாம்பையும் கற்களையும் வீசிய போதிலும், புட்டபர்த்தி சாய்பாபாவை பகிரங்கமாக மேடைதோறும் சவால் விட்டு அழைத்துþ அம்மோசடிப் பேர்வழியைத் தமிழகமெங்கும் அவர் திரைகிழித்துக் காட்டினார்.

 

பெரியாரின் மறைவுக்குப்பிறகு வீரமணிமணியம்மை கும்பல் திராவிடர் கழகத்தை கைப்பற்றியதையும்,  இக்கும்பலின் முறைகேடுகளையும் ஆதாரப்பூர்வமாக தனது இதழில் இராமசாமி அம்பலப்படுத்தினார்.

 

"நாத்திகச் சிங்கம் பகத்சிங்'', ""ஆர்.எஸ்.எஸ். இந்து பாசிசம்'', "சங்கரமடம் பற்றிய உண்மைகள்'', ""மடாதிபதி லீலை'', டி.ஜி.எஸ். தினகரன் மோசடிகளை அம்பலப்படுத்தும் "இயேசு அழைக்கிறார்''þ பாசிச ஜெயா கும்பலை அம்பலப்படுத்தி "இதுதான் பார்ப்பன ஆட்சி'' முதலான அவருடைய பிரபலமான நூல்கள் மட்டுமின்றி, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களின் பிற்போக்குத்தனத்தையும் மூடத்தனத்தையும் தொடர்ந்து அம்பலப்படுத்துதல், தமிழ்த் திரைப்படம்  தொலைக்காட்சிகளின் பண்பாட்டு சீரழிவுகளைச் சாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது எழுத்துப்பணி அவர் இறக்கும் வரை இடைவெளியில்லாமல் தொடர்ந்தது.

 

தள்ளாத வயதிலும் சமரசமின்றி நாத்திகப் பிரச்சாரத்தைச் செய்வதில் உறுதிப்பாடு கொண்டு இயங்கி வந்த மூத்தபத்திரிகையாளரான நாத்திகம் இராமசாமி அவர்களுக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

 

— ஆசிரியர் குழு