10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மாவோயிஸ்டுகளெல்லாம் இடது சாரிகள் கிடையாது. அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், நக்சல்பாரி அமைப்புக்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்படவேண்டியவை, அரசின் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். 

இப்படிப்பட்ட கருத்துக்களை அள்ளிவீசுபவர்கள் மத்திய அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ அல்ல, இந்த இந்திய திருநாட்டை  நக்சல்பாரி அபாயத்திலிருந்து காப்பாற்ற முடிவெடுத்து களத்திலும் இறங்கிவிட்டார்கள் நம்ம ப்யூர் கொம்யூனிஸ்டுகளான சிபீஎம் கட்சியினர்.

 

நாட்டின் முக்கிய சிவப்பு அபாயமான நக்சல்பாரிகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் சீதாராம் எச்சுஊறி. “நாங்கள் தான் இடதுசாரிகள் நாங்கள் மட்டும்தான்,   மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்கி வெறியாட்டம் போடுகிறனர் துணைராணுவப்படையினர் அவர்களுக்கு மொத்தமாய் ஆதரவளிக்கிறார் புத்ததேவ்.அவர்கள் அழிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு என்கிறார்.

 

“இன்று சட்டீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகளும், பீகாரில் 2 மாவோயிஸ்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” இந்த, இப்படிப்பட்ட செய்திகளை ஊடகங்கள் நாள்தோறும் வெளியிடுகின்றன புழங்காகிதமடைகின்றன.

 

தொலைக்காட்சி ஊடகங்களோ இன்று கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையை அறிவிப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, செய்தி வாசிக்கும் அந்த தொகுப்பாளரைப்பாருங்கள் அப்படி ஒரு பெருமிதம் அவர் முகத்தில். விரைவில் இந்தியா வல்லரசாகிவிடுமாம் அதற்கு தடையாயிருக்கும் மாவோயிஸ்டு/ நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழித்துக்கட்டப்படவேண்டியதின் அவசியத்தை பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதிகிழிக்கின்றன.

 

கடந்த செவ்வாய் அன்று ரயிலினை மறித்த பழங்குடியினமக்களை தீவிரவாதிகளாக அறிவிக்கிறது அரசு. ஆயுதந்தாங்கிய தீவிரவாதிகள் வண்டியை மறித்து ஓட்டுனர்களை கடத்தியதாகவும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்து தாக்கியவுடன் ரயிலை விட்டு விட்டு ஓடியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் பாதிக்கப்பட்டதாக கூறும் நபர் ஒருவர் ஆங்கிலத்தொலைக்காட்சியில் யாரும் எங்களைத்தாக்கவில்லை என்கிறார்.

 

அரசபயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு குழுவினை மக்கள் உருவாக்கினார்கள் அதன் தலைவர் மகோட்டவை விடுதலை செய்யக்கோரி மக்களால் நடத்தப்பட்ட போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டமாக சித்தரிக்கப்படுகின்றது.

 

மாவோயிஸ்டுகளை/மாவோயிஸ்ட் அமைப்பையும்/ நக்சல்பாரி அமைப்புக்களையும் பத்திரிக்கைகள் இப்போதெல்லாம் குறிப்பிடும் போது தீவிரவாதிகள்/தீவிரவாத அமைப்பான’ என்றே குறிக்கின்றன. இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றபோதும் திட்டமிட்டே இந்திய அரசால் மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் தீவிரவாதிகளாக்கப்பட்டுவிட்டனர். மக்களிடம் ஏதோ கொள்ளையர்களைப்போல மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

 

கடந்த மாதம் மத்திய அரசு நடத்திய சிறப்புக்கூட்டத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். அப்போதிருந்து அடிக்கடி உள்துறை அமைச்சர் சிதம்பரமாகட்டும் மத்திய அரசாகட்டும் மாவோயிஸ்டுகளைப்பற்றிய பொய் புரளிகளை பரப்பிவருகின்றனர், சென்ற மாதம் மாவோயிஸ்டுகள் ஒரு கிராமத்தில் புகுந்து மக்களை சுட்டுக்கொன்றதாக அரசு செய்தி வெளியிட அதை அப்படியே எல்லா செய்தி ஊடகங்களும் தனக்கேற்றவாறு பில்டப் செய்து வெளியிட்டன.

 

சல்வார்ஜுடூம் போன்ற அரசபயங்கரவாதப்படைகளும், மத்தியப்படைகளும், போலீசும் மக்களை கொன்று வெறியாட்டம் போட்டு மக்களை துவம்சம் செய்கின்றன. மக்களை கொன்று விட்டு மாவோயிஸ்டுகள் மீது பழியினை தூவுகின்றன, அச்செய்தி அப்படியே இந்தியா ஏன் உலகம் முழுக்க பரப்பப்படுகின்றது. மாவோயிஸ்டுகளுக்கு பல மனித உரிமை அமைப்புக்கள் உதவுவதாக / ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களின் நோக்கம் என்னவெனில் தன்னுடைய அரச பயங்கரவாதத்துக்கு தடையாக உள்ள யாரும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

 

மேற்குவங்கத்தில் டாடாவுக்கு நிலம் கொடுத்த விவகாரத்திலும் சரி மற்ற பிரச்சினைகள் மூலமாகவும் நந்திகிராம், சிங்கூர்,  மிதுனாப்பூர் என மக்கள் சீபீஎம்க்கு செருப்படி கொடுத்து அரசை புறக்கணித்தார்கள். சீபீஎம் நாறிப்போனது. தனது அணிகளிடம் கூட நிலையை விளக்குவதற்கு திணறி வேறு வழியின்றி பயங்கரவாதம் , தீவிரவாதம் என்றபடி கூச்சல் போட ஆரம்பித்தது. சீபீஎம் காங்கிரசு கட்சியப்போன்று சிறந்த கேப்புமாறிகட்சியாக மாறிவருவதற்கு அவர்களின் கூற்றுக்களே தக்க உதாரணம். முன்பு மாவோயிஸ்டுகள் அரசியல் ரீதியில் மட்டுமே அகற்றப்பட வேண்டுமென்ற சீபீஎம் தற்போது கடுமையான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று அறிவிக்கிறதெனில் என்ன வகையாக மாற்றம் கட்சியில் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

இதுவரை நாம் கம்யூனிஸ்டு கட்சி என்று தன் கட்சியினரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமிருந்தது. ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லை. புரட்சியா அது எப்படி இருக்கும் ஸ்வீட்டா இல்லை காரமா என்று கேட்ககூடிய அளவுக்கு சீபீஎம் தொண்டர்கள் வந்து விட்டதால் மொத்தமாய் அவிழ்த்துப்போட்டுவிட்டு அம்மணமாய் நாங்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் என்று திமிராய் சொல்லுகிறார்கள். இந்திய நாட்டையே அடிமையாக்கிய காட் ஒப்பந்தம் முதல் தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் வரை எதை நாடாளுமன்ற முறை மூலம் போராடி தடுத்தார்கள். நாடாளுமன்றத்தை பயன்படுத்த லெனின் சொன்னார் என்று உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். எப்படி என்றால் லெனின் சொன்னார் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி அதை அம்பலப்படுத்தவேண்டும் என்று அதைத்தான் செய்து வருகின்றோம் என்கிறார்கள்

 

தயவு செய்தி பேரண்புமிக்க பொறுக்கிகளே அந்த சின்னத்தை பயன்படுத்தாதீர்கள். அது உங்களைப்போன்ற ஆளும் வர்க்கத்திற்கெதிராக உழைக்கும் மக்களால் உருவானது. நீங்கள் “நம்ம” தேசியக்கொடியையே பயன் படுத்திக்கொல்ளலாம்,  அரசு கூட அப்ஜெக்சன் தெரிவிக்காது என நம்புவோம். நாங்கள் இனி போலிகள் என்று கூட அழைக்கமாட்டோம். ஒரு வேளையும் மிச்சம்.

 

கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இந்திய தேசத்தில் காசுமீர், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் மக்களால் நடத்தப்படும் சுயநிர்ணய போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ன? அவ்விசயங்களில் இந்திய அரசின் வாலாக செயல்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒன்று சேலையை துவைப்பது அல்லது வேட்டியை துவைப்பது என்று வேறுவேலை இன்றி மாமாவேலை செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள இந்த சீபீஎம் எங்கத்த புரட்சி பண்ணப்போகிறது?  நாங்கள் இல்லாமல் எம்ஜிஆர் இல்லை, ஜெயா இல்லை, கருணாநிதியும் இல்லை, விட்டால் ஒபாமா கூட நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாதென்று முழங்கிக்கொண்டே போவார்கள்.

 

கேரளாவில் முல்லைப்பெரியார் அணை விசயத்தையே எடுத்துக்கொள்வோம். சீபீஎம் கட்சித்தலைமை ஏதாவது வாய் பேசியதா என்ன? பெங்களூருவில் மாநாடுகூட்டி தீவிரவாதத்துக்கெதிராக பேச முடிகிறது ஆனால் பெரியாறு பிரச்சினையைப்பற்றி ஏன் பேச முடியவில்லை ? ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தலைமை எதனால் பாதிக்கப்படுகிறதோ அதற்கு எதிராக, யாருக்காக , யாருடைய தேவைக்காக அதற்காகத்தானே போராடும். அதன் படி தன் வளர்ச்சிக்கு தடையாயிருக்கும் மாவோயிஸ / நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும்  தான் போராடுகிறது. தன்னுடைய சேக்காளிகளான டாடா, பிர்லா, அம்பானிமற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும்தான் போரிடுகிறது.

 

சீபீஎம்முக்கும் ஏனைய ஓட்டுப்பொறுக்கிகட்சிகளுக்கும் ஏதேனும் வித்யாசமிருக்கிறதா? முன்னராவது மற்றவர்கள் சிரச்சேதம் செய்யச்சொன்னால் சீபீஎம் கட்சி பாலிடால் கொடுக்கசொல்லும் (அவ்வளவு மனித நேயமாம்). மொத்தத்தில் மக்கள் ஒடுக்கப்பட வேண்டும் அவ்வளவுதான்.

 

இந்த உலகமயம்-தனியார்மயம் – தாராளமயம் சூழலில் சீபீஎம்-ல் தனது போலி வேசத்தைக்கூட நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை. கொள்ளையடித்தே தீரவேண்டும் , எல்லோரும் கொல்ளையடிக்க வந்துவிட்டார்கள், சும்மா வெறும்கையை முழம் போட சீபீஎம் கேனப்பயலா என்ன?  நம் முகமுடியை மக்கள் அறிந்துவிட்டார்களென்ற பின்னே இனி பாசிஸ்டாக பரிணமிப்பதைத்தவிர வேறு என்ன வழி?

 

இந்த நாட்டின் எதிரி மாவோயிசமா அல்லது ஏகாதிபத்தியமா?

நீர் நிலம் காற்று என அனைத்தும் மக்கள் ஒப்புதலின்றியே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுவிட்டன. அம்பானி, மிட்டல், டாடா என தரகு முதலாளிகள் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். சீபீஎம், காங்,பீஜேபீ உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மாமா வேலை பார்ப்பதையே முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டு விட்டன. உலகமயம்-தனியார்மயம் – தாராளமயத்தால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்துவிட்டார்கள், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் துரத்தப்படுகிறாகள். விவசாயத்தை லாபமற்ற தொழிலாக திட்டமிட்டு மாற்றி, உரங்கள் மூலமாகவும் பன்னாட்டு விதைகள் மூலமாகவும் விளை நிலத்தை நாசம் செய்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் நாடெங்கிலும் இதற்கெதிராக போராடி வருகிறார்கள், இந்த அரசும் அதன் தாங்கிகளான ஓட்டுப்பொறுக்கிகளையும் பாசிசத்தின் கருவிகளாகியிருப்பதை உணர்கிறார்கள்.

 

தன்னெழுச்சியாகவும் மாவோயிஸ்டு / நக்சல்பாரி அமைப்புக்கள் மூலமாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கெதிராக அரசு தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது, போராடும் மக்களை ஒழித்துக்கட்ட முயல்கிறது. தன்னுடைய அமெரிக்க எஜமானனுக்கும் ஏனைய பன்னாட்டு எஜமானர்களுக்கும் சேவை செய்வதை தடுக்கும் யாரையும் முறியடிக்கிறது. கிராமங்கள் சூறையாடப்படுகின்றன.

 

மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் போராடி குரல் கொடுக்கின்றன. ஆயுத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆங்காங்கே மக்களே ஆயுதந்தரிக்க வேண்டியதன் கட்டாயம் ஏற்படுகிறது. தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோமோ அவர்களுக்கு மக்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறர்கள்.சீபீஎம்ற்கு ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியாக, பாஸிஸ்டுக்கு பாதந்தாங்கியாக இருந்ததன் அவசியம் இனியும் தேவையில்லை. போலிகம்யூனிச முகமுடியினை தூக்கிபோட்டுவிட்டு மக்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் டாடாவுக்கு உழைக்கும் மக்களின் நிலத்தை அபகரித்துத்தருவது  மறுபக்கம் மக்களுக்காக பரிந்து பேசுவதென்ற வாய்ஜாலமும் இனி தேவைஇல்லை.

 

நாட்டையே கூறு போட்டு தூக்கிச்செல்ல காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் அல்ல, மதத்தால்பிளவுபடுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஆர் எஸ் எஸ் பார்ப்பனபாசிசம் அதுவும் பயங்கரவாதமல்ல, தொழிலாளர்களை சுரண்டி சக்கையாய் தூக்கியெறிந்து தன் லாபத்திற்காக தொழில்களையே ஒழிக்கும் முதலாளித்துவம் பயங்கரவாதம் அல்ல, இந்த அரசும் சீபீஎம்மும் கூறுவது போல நாட்டை மீண்டும் மறுகாலனியாக்குவதற்கு எதிராக போராடும் மக்கள் தான் பயங்கரவாதிகள். வேறு வழியே இல்லை பயங்கரவாதிகளாகிய உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் இந்த யோக்கிய சிகாமணிகளுக்கு சாவுமணி அடிப்போம்.


இணைப்புக்கள்

1.விடுதலையின்  அரசியல் கருத்துப்படங்கள்
போலிகளை வீழ்த்தும் ஆயுதங்கள்

2மார்க்சிஸ்டுகளின் பரிணாம வள்ர்ச்சி

3.சாயம் வெளுத்துப்போன போலிகள்

4.வாடா வாடா வாடா  தோழா – ஒரு காம்ரேடு  ரசிகன் ஆன கதை

5.மாவோயிஸ்டுகள் மீதான தடை
டெர்ரர்ரிஸ்டுகளின் சாதனை

http://kalagam.wordpress.com/2009/11/03/தீவிரவாதத்தை-வேரறுப்போம/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்