தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இயங்கும் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிலை படுமோசமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.
பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறை படிப்புகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய கமிஷன் சட்டவிதிகளின் படி, இந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உரிய அம்சங்களுடன் இவை இயங்குகின்றனவா என்பதை, கமிஷன் அவ்வப்போது கண்காணித்து வருகிறது.
சில பல்கலைக்கழகங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், மாணவர்களிடம் பலவகையில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. சமீபத்தில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40 பல்கலைக்கழகங்கள் தனது நிகர் நிலை அந்தஸ்தை தக்கவைக்க முடியாத சூழ்நிலையில் இயங்குகின்றன என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 பல்கலைகள், தனது அந்தஸ்தை திரும்ப பெறமுடியாத நிலையில் உள்ளன.
இந்த 40ல் அரியானாவில் மூன்றும், உத்தரகாண்ட், உ.பி.,யில் தலா இரண்டும் இயங்கி வருகின்றன. பெரும்பாலானவை தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இயங்குகின்றன.
இவற்றில் சில பல்கலைக்கழகங்களில் அரசியல் பிரபலங்கள் தொடர்பு உள்ளது அதனால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.எனினும், மூன்றாண்டு வரை இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு கெடுவிதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது (தினமலர், 2/11/2009)
———————————————————————————————– நடுநிலைமையாக பார்த்தால், கல்லாப் பெட்டியை நிரப்புவதில் மட்டுமே வேகமாக இருக்கும் அனைத்துத் தனியார் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இக்கமிட்டி பரிந்துரைத்திருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை?
இன்று இந்த தனியாரின் பகற்கொள்ளை குறித்து எழுதாத பத்திரிகைகளில்லை. இதனை கவரேஜ் பண்ணாத தொலைக்காட்சிகளில்லை என்று கூறுமளவுக்கு எல்லாம் பட்டவர்த்தனமான பின்பும், “புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கத் தயார்” என வசனம் பேசுகிறது, அரசு! “கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்” என்கிறார், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல்.
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக கல்வி வியாபாரிகள் சாராய வியாபாரி ஜேப்பியார், சாராய உடையார் மட்டும் அல்ல, ‘மக்களின் பிரதிநிதிகளான தி.மு.க.வின் ஜெகத் ரட்சகன், ரகுபதி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, நீதிக்கட்சி ஏ.சி.எஸ். தே.மு.தி.க. விசயகாந்த், காங்கிரசு தங்கபாலு போன்றோர்களும் இந்த பிசினஸில் கால் நனைத்துள்ளனர். இவர்கள்தானே மத்திய மாநில அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.
இந்த கொள்ளைக்கார கும்பல்களெல்லாம் கூடிக் குலாவி, கும்மாளமிடும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலிருந்து, இத்தனியார் கொள்ளைக்கு எதிரான “நடவடிக்கை’யை எதிர்பார்க்க முடியுமா என்ன?
தொடர்புடைய பதிவு: கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?
http://rsyf.wordpress.com/2009/11/03/தகுதியில்லாத-40-பல்கலைகளு/