Language Selection

சுதேகு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம்.

 

அரசில் இருக்கும் மகிந்தா பக்கம் சுளையாக யுத்த வெற்றியை கையில் வைத்திருக்கிறது. இதைத் தமது பக்கம் இலேசாகச் சாய்பதற்கு சரத்பொன்சேகாவை நாடுகிறது ரணிலின் பக்கம். இப்படி படு உசாரான தேர்தலாக இது களைகட்டுமாப்போல் தெரிகிறது.

இதன் பிறிதொரு அங்கமாக வன்னிமக்களின் முகாம் பிரச்சனை நிலுவையாக இருக்கிறது. பிரிட்டனில் இருந்து வன்னிக்கு வந்துபோன பிரதிநிதிகள்: பருவ மழைக்குள்ளும் இம் முகாம்கள் இப்படியே இருந்தால், பாரதூரமான தொற்று நோய்களும் மனித அவலங்களும் நிகழுமென அது எச்சரித்தது. மழைகாலம் வரும் முன்னே வடிகால்களை அமைத்து நிலைமையைச் சரிக்கட்டி விடுவோம் என தலையைச் சொறிஞ்சு கொண்டு அரசும் சொல்லிப் பாத்துது. ஆனால் அவங்கள் மசியவில்லை. 

அவங்கள் ஒரு முடிவோடை இருப்பதை நாடுதிரும்பியதும் வெளிப்படுத்தினாங்கள். அகதிகளுக்கான நிதிகளைத் தவிர, இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் தாம் நிறுத்தப் போவதாக பிரிட்டன் அறிவித்தது. இதை அடுத்து ஐரோப்பிய ஓன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நிறுத்தப் போவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது. வன்னியுத்தத்தை 'காசா'போல விசாரிக்க வேண்டுமென்று ஒரு தகட்டையும் அது செருகியுள்ளது.

மேற்குலகம் எறிந்த இந்தச் சீட்டுக்களை, தாம் எடுத்தாட முடியுமென பிராந்திய வல்லரசுகள் முயலுகின்றது. இப்படியாக மேற்கும், கிழக்கும் நேரடியாக மோதும் அரசியற்களமாக இலங்கை மாறியுள்ளது. மகிந்தா அரசுக்குத் தலையிடி கொடுக்கும் இந்த விடயத்துக்கு தையிலம் பூசுவதாக: இந்தியாவில் இருந்து (தமிழ்நாடு) அரசு சார்பற்ற குழுவை அது வன்னிக்கு அனுப்பியது.


அவர்களின் வாய்முறைப்பாட்டை ஒரு வசதியாகக் காட்டிக் கொண்டு, துரித குடியேற்றத்தை நடைமுறைப் படுத்தியது மகிந்தா அரசு.

வன்னி முகாம்களிலுள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும், அவ் மாவட்டங்களுக்கு அனுப்புகிறது மகிந்தா அரசு. இவர்களை, பொறுப்பேற்கும் சொந்தங்களிடம் கையளித்து விடுகிறது, அரசு. இவ்வாறு வடக்கு, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னாரில் உள்ள மக்கள் வாழும் பகுதிகளில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது.

யுத்தப் பிரதேசமான கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவில் கொஞ்சப்பேரைக் கொண்டுபோய், பள்ளிக்கூடத்தில் தங்கவைத்து தமது நிலங்களை இவர்கள் பகலில் சுத்தம் செய்து வருவதாக அரசு சொல்லுகிறது. இவ்வாறு ஆட்டத்தைத் தொடர்கிறது தென்கிழக்கு ஆசியா.

அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கையைத் தொடர்ந்து, வன்னி முகாமிலிருக்கும் 58ஆயிரம் பேரை ஒரு வாரத்துக்குள் விடுதலை செய்வதாக, தமிழ் நாட்டிலிருந்து வந்த குழுவிடம் மகிந்தா சூழுரைத்தார்.


12095 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 41 ஆயிரத்து 685 பேரை தமது சொந்த மாவட்டத்தில் குடியேற்றுவதை அரசு துரித கதியில் முன்னெடுத்தது. இந்த நேரத்தில் இலங்கைக்கு வந்து 'எந்த ஒரு முறைப்பாட்டையும்  தமது சொந்த சட்டத்தின் ஊடாக எதிர் கொள்ளும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது' என ரசியா சொல்லிவிடுட்டுப் போனது. மனித உரிமைகள் தொடர்பாக இவைகள் தமக்குள் கைச்சாட்திட்டும் கொண்டுள்ளது.

இவ்வாறு நகரும் இலங்கை நிலவரங்கள்..


சரணடைந்த புலிககளின் சிறுவர்களுக்கான தீபாவளி சிறப்பு வெளியீட்டின் ஊடாக மகிந்தா அரசு தன்னை வெளிப்படுத்தி இருந்தது. தமது பங்காக இந்திய அரசு மேலதிகமான 500 கோடி ரூபாவை இலங்கைக்குக் கொடுப்பதாகக் கூறியது. இடம் பெயந்த அகதிகளை மீள் குடியேற்றம் செய்வதுக்கு யப்பான் முழு ஆதரவை அளிப்பதாக செய்திகளை வெளியிட்டது.


அமெரிக்க போர்க் குற்றத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு வியட்னாம், நேப்பாள் ஈடாக இராயதந்திரத்தை விரிவுபடுத்தியது. வியட்னாம் உடன் 5 அம்சத்திதில் கைதாதிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு இறுதியாகச் சென்ற 76 பேரைக் கொண்ட கப்பலை இந்துனேசியா ரியோ தீவு மறுத்தது. ''ஏனைய நாடுகளின் குப்பைகளைத் தமது நாடுகளில் கொட்ட அனுமதிக்க முடியாது'' என இந்துனேசியா தமது கடற்படைக்கு உத்தரவிட்டது.


  இந்துனேசியாவிவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவைகள் நடந்தேறின.

இவைபோக, இலங்கை நாட்டின் வறட்சி காரணமாக, 8 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. மொனராகரல மற்றும் அம்பாறை மாவட்டங்களே தெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.  மொனராகலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 290 குடும்பங்களைச் சேர்ந்த  5 இலட்சத்து 77ஆயிரத்து 341பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 792 குடம்பங்களைச் சேர்ந்த  ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இவர்கள் சரிவர குடிநீர் இன்றி தவிக்கின்றார்கள். இவ் வறட்சி காரணமாக பொலனறுவை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, புத்தளம், மத்தளை, குருணாகல், போன்ற மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வறட்சி காரணமாக திண்டாடிய கிழக்கிலும், வன்னி முகமில் இருந்த கிழக்கு மக்களைக் கொண்டுவந்து குடியேற்றியுள்ளார்கள். அங்கே மழைவரப்போகுது எண்டதுக்காக குடிதண்ணீரே இல்லாத இடத்திலை மக்களைக் குடியேற்றுகிறார்கள் என்றால், அவங்களிண்டை கருசனையைப் பாருங்கள். மொத்தத்தில் இவங்களுக்கு மக்களைப்பற்றி எந்த வருத்தமும் கிடையாது.

வடக்குக் கிழக்கில் யுத்தம் முடிந்த கையோட இந்தியா 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது. ஒரு பெற்றோல் நிலையத்துக்கு 20 மில்லியன் இலங்கை ரூபாவீதம் 6 பில்லியன்களைச் செலவிடுகிறது. கிழக்கிலே குடிநீர் பிரச்சனையும், குளங்கள் வறண்டுவிட்ட போகப் பிரச்சனையும் இருக்க: 'யோக்கற்' தயாரிக்கும் பால் பண்ணையையும், கைத்தறி ஆலையையும் தொடங்குகிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் போர்க் குற்ற அறிவிப்புக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி அழுத்தங்களுக்கும் வன்னி முகாமிலிருந்து அவசரமாக மக்களை வெளியே பிதுக்கி இருக்கிறது அரசு. இதில் பெரும் தொகையானவர்களை அவர்களின் உறவினர்களிடம் பாரப்படுத்தியுள்ளது. மேற்குலகை சந்தோசப்படுத்தும் கணக்கொன்றை அது அறிவித்துள்ளது. 2 இலட்சத்து 80 ஆயிரம் வன்னி மக்களைக் கொண்ட நிவாரண முகாம், இப்பொழ���து 1 இலட்சத்து 95 ஆயிரம் பேராகக் குறைக்கப்பட்டு விட்டதாக அரசு காட்டுகிறது.


(2)


ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்ட கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து, பங்களாதேஷின் அன்றைய இராணுவ ஜனாதிபதியாக இருந்த ஸியா - உர் ரகுமானின் முன் ஆலோசனையைத் தொடர்ந்து, டாக்காவில் முதலாவது 'சார்க்' அங்குரார்பணம் நடந்தது. கடந்த 14 மாநாடுகளையும் ஒட்டி 'தெற்காசிய கொள்கை ஆய்வு மையம்' இதை ஒரு இயங்கு சக்தியற்ற, திண்ணைப் பேச்சுக் கூட்டம் என்று சாடியிருந்தது. 

2007ம் ஆண்டு புதுடில்லியில் நடந்த 14வது 'சார்க்' மாநாட்டில்,  ' பிரகடனங்களைச் செய்யும் கட்டத்திலிருந்து அமுல்படுத்தும் கட்டத்துக்கு சார்க் அமைப்பை இட்டுச் செல்ல வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது' என அது தனது முரண்பாட்டை உலகத்துக்குப் பிரகடனமாக வெளிப்படுத்தியது. 2008ம் ஆண்டு மே மாதம் 'சார்க்' கின் 15 வது அமர்வு கொழும்பில் நடந்தது. 

'பயங்கரவாத ஒழிப்பு', 'வறுமை ஒழிப்பு', 'பொது நிதியம்', 'உணவுப் பாதுகாப்பு' போன்ற 4ன்கு முக்கிய அம்சக் கோரிக்கையோடு, 22 அம்சப் பிரகடனத்தை அது வெளியிட்டது. 1976ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட அணிசேரா இயக்க உச்சி மாநாட்டில், பாலஸ்தீன யசீர் அரபாத்தின் போராட்டத்தை அங்கீகரித்ததும், அம் மாநாட்டின் காலகட்டத்தில்: புத்தளம் பள்ளிவாசலில் இனக்கலவரமும், இனப்படுகொலையும் நடந்தது.


  புத்தளம் ஜிம்மா பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த  7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 271 வீடுகளும், 44 கடைகளும், 2 கயிற்றுத் தொழிச்சாலையும் ஏரிந்து சாம்பராகின. இரண்டு மசூதிகள் எரிந்து விழுந்தன. அதற்குள் இருவர் எரிந்து கருகினர். மொத்தமாக 9 பேர் பலியாகினர். 


அணிசேரா மாநாட்டின் போது தமிழீழப் பிரச்சனையை துண்டுப்பிரசுரமாக இளைஞர் வெளியிட்னர்.(வெளிநாடுகளுக்கு தெரியும் வகையில்)  அதில் ஆத்திரமைந்த ராணுவம் சுட்டதில் பரராசன் அல்லது பரராசசேகரம் என்ற ஒரு எழுது வினைஞர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அன்று மரணமானார்.


இவ்வாறு நெருக்கடிக்குள் நடந்த அணிசேரா மாநாட்டுக்குப் பின், 'சார்க்' கின் 15வது மாநாடு முதன் முதலாக கொழும்பில் நடந்தது.

இம் மாநாடு நடந்தபோது: வன்னியை நாலு திசையிலும் இராணுவம் சூழ்ந்து கிளிநொச்சியை நோக்கிய தாக்குதல் கட்டத்துக்கான உடைப்புக் கட்டத்தை எட்டியிருந்தது. இந்தச் சந்தர்பத்தில் இந்தியாவில் கைது செய்ப்பட்ட சூசையின் இரண்டு நெருங்கிய உறவினரின் கைதை அடுத்து: இலங்கையின் பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பாக விலாவரியான சகல தகவல்களும் ஒரு வார காலத்துக்குள்ளேயே, கொழும்பிலு்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கக்கூடியதாக இருந்தது. உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்டதும், சீனாவினால் இலங்கைக்குப் பயிற்றப்பட்டதுமான 'முச்சக்கர வண்டியினரின் உளவுப்பிரிவு' இதில் காத்திரமான பங்கை வழங்கக் கூடியதாக இருந்தது.

கொழும்பில் கூடிய 'சார்க்' மாநாடு: சார்க் பிராந்தியத்தில் சமாதானம், அதன் ஸ்திரத் தன்மை, பாதுகாப்பு ஆகிய வற்றுக்கு பயங்கரவாத சக்திகள் பலத்த அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும், பயங்கரவாத எதிர்ப்புக்குத் தேவையான  சகல சர்வதேச சமவாயங்களையும் அமுல் படுத்துவதற்கு இவ் 15ஆவது 'சார்க்' அமர்வு மையில் கல்லாக தீர்மானத்தை எடுத்தது. அதாவது பயங்கரவாத்தை ஒடுக்குவதற்கு சார்க் பிராந்திய சமவாயம், இச்சமவாயத்துக்குச்  செய்து கொள்ளப்பட்ட  மேலதிக ஒப்பந்தம் ஆகியவற்றையும் சரிவர அமுல்படுத்த சார்க் உறுப்புநாடுகள் பூரணமாக உறுதிபூண்டன. 


இம் மாநாட்டில் உரையாற்றிய மகிந்தா: பயங்கரவாத்தோடு தொடர்புடைய  சகல குற்றச் செயல்களையும் கண்டறிய, நிதியை முடக்க, பறிமுதல் செய்ய இந்த ஒப்பந்தங்கள் வழி வகுப்பதாகவும், பயங்கரவாத்துக்கு எல்லைகள் தெரிவதில்லை என்று இந்தியப் பிரதமரும், பயங்கரவாதிகளுக்கு இன, மத, மொழி எதுவும் கிடையாது என மகிந்தாவும் முழக்கமிட்டனர். 

உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத்தை எதிர்கொள்ளும் முதல் 5 நாடுகளுக்குள், இரண்டு சார்க் பிராந்தியத்தில் உள்ளன. பயங்கரவாத்துக்கு அதிகளவில் தேசத் தலைவர்களை காவு கொடுத்துவிட்ட பிராந்தியமாக தெற்காசியா இருக்கிறது. சார்க் மாநாடு எதையாவது சாதிக்குமா? என்ற கேள்விக்கு சரியாக ஒரு வருடத்துக்குள் உலகத்துக்கு தனது விடையை நடமுறையில் நிரூபித்து வைத்துள்ளது தென்கிழக்கு ஆசியா.

புலிகளின் தலைமையை அழித்தொழித்த 3ம் உலக நாடுகள், புலிகளின் ஒரு பகுதியினர் இந்திய மாவோ ஸ்டுகளுக்குள் ஊடுருவி இருப்பதாக புதுக்கதையை அவிட்டுவிட்டுள்ளனர். வன்னி யுத்த முடிவில் மக்களோடு மக்காளக வெளியேறிய 50 முக்கிய இந்திய உளவாளிகளை, தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பட்டியலிட்டு இலங்கையிடம் ஒப்படைத்தது. இவர்கள் கடல் வழியாக புலிகாளகவே வெளியேறி இருந்தனர். 


(இவர்களுடன் சில புலிகளும் வெளியேறினர்) இன்று மாவோட்டுக்களுக்குள் ஊடுருவியது புலியா? அல்லது இந்திய உளவா? என்பதற்கான பதிலை எதிர்காலம்  விரைவில் பதிலாக அளிக்கும்.

(3)

இன்று உலகிலேயே தோன்றியிருக்கும் மிகப் பிரதானமான நிலம், நீர், மின்சாரம் சொல்ல முடியாத பிரச்சனையாக வளர்ந்துள்ளது. நிலம் மற்றும் நீர் பிரச்சனைக்கான தீர்வை மேற்குலகம், கிழக்குலகு நோக்கி எதிர்பார்க்கின்ற போதும்: மின்சாரம் அதற்கு சவாலாகவே அமைகிறது. இதற்கு ஒரு சிறிய செய்தியை நாம் பார்க்க முடியும். இவ்வளவு வளர்ந்த அமெரிக்காவில் 40 இஞ்சி எல்.சி.டி மற்றும் 'பால்சம்' ரீவிப் பாவனையை ரத்துச் செய்ய அமெரிக்கா முயல்கிறது.


இன்று மேற்குலக உற்பத்திகளின் பெரும் பகுதி கிழக்கு நோக்கியும், மத்திய கிழக்கு நோக்கியும் நகர்த்தப்பட்ட நிலையில், மேற்குலக மின்சார தேவை அபாயத்தை எட்டியுள்ளது. உலகிலுள்ள 1.6 மில்லியாடர் மக்கள் மிக்சாரம் பெறமுடியாத நிலையில் உள்ளனர். இதில் 400 மில்லியன் மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர். 

2005களில் 440 அணுமின் உற்றத்தியைக் கொண்டிருந்த, 31 உலக நாடுகளில் 16 வீதம் பலவீனமான மின் உற்பத்திகளைக் கொண்டுள்ளது. இதில் 200 அணு உற்பத்தி மின் நிலையங்கள் இன்று மூடப்படவேண்டிய சூழலில் உள்ளன. இன்று மின் உற்பத்தியால் 29 மில்லியாடர் தொன் காபனீர் ஒட்சயிட் வளிமண்டலத்துக்குத் தளப்படுகிறது. இது இன்னும் 20 வருடத்தில் 40 மில்லியாடர் தொன்னாக அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

இலங்கையிலுள்ள 85 வீதமான மக்களுக்கு மின்சாரத்தை  உற்பத்திசெய்யும் வலுவை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. மகாவலியை வடக்குவரையும் கொண்டு செல்லின் இந்தியாவின் தென்பகுதி ஆலை உற்பத்தி தேவைகளை ஒரளவு நிறைவு செய்யக் கூ டிய மின்சாரத்தை இலங்கையால் வளங்கவும் முடியும். இலங்கையில் அனுராதபுரத்திலிருந்து  தலைமன்னாரை ஊடறுத்து, கடல் வழியாக தனுஷ்கோடி ஊடக மதுரைக்கு மின்சாரத்தை வளங்கும் ஒரு திட்டம் ஆராயப்படுகிறது. 

இன்று காற்றழுத்த மின் உற்பத்தி, அணைக்கட்டு மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி, அலை மின் உற்பத்தி என்பன பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் இலங்கை தராளமாகவே கொண்டுள்ளன. இவற்றின் அனைத்துத் தளமும் முன்னெடுக்கப்படின் இலங்கையின் மின் உற்பத்தி, இலங்கைக்கு மிதம் மிஞ்சியதாக அமையும்.

இன்று உலகம் மேலதிகமான அணு மின் உற்பத்தி நிலையங்களைக் கோருகிறது.  இதன்படி 44 ன்கு புதிய வகையான இராட்சத அணு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அது திட்டமிடுகிறது. அத்துடன் ஐரோப்பாவுக்கான 'பசுமைநிற இணையத்' திட்டத்தை அது முன்வைக்கிறது. அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கிலிருந்து, வடக்கு ஐரோப்பாவுக்கு மின் வழங்கும் திட்டத்தை இது பரிந்துரைக்கிறது.

சூரியன் சகாரப் பாலைவனத்தை நோக்கி விரைவில் திரும்ப இருப்பதால்: பூகோளத்தின் வடக்குக் கடல் குளிரை எட்டுகிறது. இதனால் காற்றழுத்தம் குளிரின் பாரத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஐரோப்பாவின் மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். ஆனால் இதை 'ஸ்கொட்லான்ட்'  இவ் மின் உற்பத்தியை  'மீள் நிரப்பு' செய்ய முடியுமென இவர்கள் கணக்கிடுகின்றனர்.

ஆனால் சகாரப் பாலைவனத்தை நோக்கித் திரும்பும் சூரியனை வைத்து, சீனா முதல் தடவையாக 2000 கிலோ மீற்றருக்காகான இணைய மின்சாரத்தை முயல்கிறது. 5 தொடக்கம் 10 வீதத்தை தாம் இ ழந் தாலும் , வடக்கு ஆபிரிக்கா மற்றும், மத்திய கிழக்கு ஈரோப்பாவுக்கான மின்சாரத்தை தாம் வழங்க முடியுமென அது கூறுகிறது.


தொடரும்...-.


சுதேகு 
011109