புதிய இணையம் அறிமுகம் : புகலிடச் சிந்தனை மையம்

புகலிடச் சிந்தனை மையத்தின் இணையம், www.psminaiyam.com  கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க முன்முனைப்புடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சிங்களம் முதல் பல மொழிகளில் தன்னை ஒருங்கிணைத்து, மக்கள் மத்தியில் செயல்பட அது உறுதி பூண்டுள்ளது. சமகால நிகழ்வுகளை ஓட்டி, ஒரு பொது விவாத அரங்கையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளும், யாரும் இங்கு சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

 

புரட்சிகர மாற்றத்தை நோக்கி முனைப்புடன் கூடிய, உங்கள் செயல்பாட்டை ஒத்துழைப்பையும் இவ்விணையம் கோரி நிற்கின்றது. பல்துறை சார்ந்து நீங்கள் இயங்க முடியும்.

 

தமிழ் மக்களினதும், இலங்கை மக்களினதும், உலக மக்களினதும் முரணற்ற நலன்கள் சார்ந்து, இவ் இணையம் செயலை முன்னிறுத்துகின்றது. சகல ஒடுக்கப்பட்ட மக்களினதும் நலனுக்காக எந்த சமரசமுமின்றி, புரட்சிகரமாக போராட உறுதி பூண்டுள்ளது.

     

பி.இரயாகரன்

26.10.2009

 

பத்திரிகைகள் மற்றும் இணையங்களுக்கான பொது அறிக்கை

 

1980 களில் புரட்சிகர பிரிவுகள் நடத்திய அரசியல் போராட்டத்தினதும், 1990 களில் புலத்தில் உருவான சிறு சஞ்சிகைகளைச் சுற்றி நிலவிய புரட்;சிகர கூறையும், இதன்பின் நிலவிய தனிமனித புரட்;சிகர சிந்தனையினையும் உள்வாங்கி "புகலிடச் சிந்தனை மையம்" என்ற அமைப்பு புலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இது தான் கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில், இதற்கு வெளியில் உள்ளவர்களை ஒருங்கிணைக்க முனைகின்றது. தனக்கான ஒரு இணையத்தை, www.psminaiyam.com உங்கள் முன் அது அறிமுகம் செய்கின்றது.

 

மக்கள் நலனை முன்னிறுத்தி, மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் இனங்காட்டி போராட வேண்டிய தேவையிருக்கிறது. தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையைப் பயன்படுத்தி அல்லது அதற்குள் பலியாகி எழத் தொடங்கியிருக்கும் மக்கள் நலன்சாராத கருத்துநிலைகளுள் தலையீடு செய்யவேண்டிய தேவை இன்னும் அதிகமாகியிருக்கிறது. 

 

அதாவது மக்கள் நலனை முன்னிறுத்திய ஐக்கியத்தையும், மக்கள் விரோதக் கூறுகளுக்கு எதிரான போராட்டத்தையும் "புகலிடச் சிந்தனை மையம்" கோருகின்றது. இதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அது எதிர்பார்க்கிறது.

 

புகலிட சிந்தனை மையம்         
26.10.2009