இது பெண்ணியமாகவும் வேஷம் போடுகின்றது. தலித்திய வேஷமும் போடுகின்றது. ஜனநாயக வேஷமும் போடுகின்றது. இப்படி எல்லா வேஷத்தையும் போட்டு, மகிந்த குடும்ப சர்வாதிகாரம் இலங்கையில் நடத்திய, நடத்துகின்ற படுகொலை பாசிச ஆட்சியை பாதுகாத்து அதைப் போற்றுகின்றனர். இதை செத்துப் போன புலியின் பெயரில் நியாயப்படுத்துகின்றனர். அதாவது புலிகளின் பெயரில்தான், மக்களுக்கு எதிராக தாங்கள் சோரம் போகும் அரசியலுக்குரிய நியாயத்தைக் கற்பிக்கின்றனர். இவர்களின் அரசியல் அளவுகோல், புலியெதிர்ப்புத்தான்.

அண்மையில் புகலிட சிந்தனை மையம் சுவிஸ்சில் நடத்திய கூட்டத்தில் கருத்துரைத்த  ஒருவர், புலிகளின் பெயரில் தமிழர்களை கொன்று அவர்களை அடக்கியொடுக்கியதற்கு நன்றி தெரிவித்தார். இதற்கு அங்கிருத்த மகிந்த எடுபிடிகள் கைதட்டி ஆரவாரமாய் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

 

குறித்த கருத்தைக் கூறியவர் ஒரு பெண். இவர் பிரான்சில் வெளியாகிய முன்னாள் மற்றும் பின்னாள் எக்ஸ்சில் ஆசிரியர்களில் ஓருவர். தன்னை பெண்ணிலைவாதியாக காட்டிக்கொண்டவர். இன்று பெண்கள் சந்திப்பு வரை சென்று மகிந்தாவுக்காக குலைக்கின்றார். இவர் ஞானம் என்று அறியப்பட்டவரும், ஸ்ராலின் என்ற பெயரில் எழுதுபவரின் மனைவியாவார்.

 

அவரின் மனைவி என்ற தகுதி, மகிந்தாவின் பாசிசத்தை விதந்துரைக்க வைக்கின்றது. இவர் கணவர் மகிந்த முன்வைத்த 'கிழக்கு உதயத்தில்" பிரதிநிதியான கொலைகாரப் பிள்ளையான் மற்றும் கருணாவின் அரசியல் ஆலோசகர். இன்று பிள்ளையானின் துதிபாடி. இவர் குடும்பமே இன்று தமிழர்களைக் கொன்ற மகிந்தாவின் பெருமைகளைக் பேசுவதால், மக்களுக்கு எதிரான சதிகளை செய்ய அடிக்கடி இலங்கை சென்று வருபவர்கள். மகிந்தாவின் பிளவுவாத அரசியலுக்கு ஏற்ப, வடக்கு மக்களுக்கு எதிராக கிழக்கு மக்களை அணிதிரளக் கோரியவர்கள். 

 

இப்படி பேரினவாத அரசை ஆளும் மகிந்தா குடும்பத்தின் பாசிச சர்வாதிகாரத்தை போற்றுவதால், மனைவியான விஜியும் அரச எடுபிடியாகி மகிந்தப் பாட்டுப்பாடுகின்றார்.

 

"மகிந்தாவுக்கு நன்றி" என்று கூறிய அவர், புலிகளை மகிந்த அழித்ததால் இன்று புலிகளால் மக்கள் கொல்லப்படுவதில்லை என்கின்றார். இதனால் நன்றி என்கின்றார்.

 

மகிந்த அரசு எத்தனை ஆயிரம் பெண்களை விதவையாக்கியது? எத்தனை ஆயிரம் பெண்களை சிறை வைத்துள்ளது. எத்தனை பெண்களை வதை முகாமில் வைத்து வதைக்கின்றது. பல பத்தாயிரம் பெண்களை உளவியல் ரீதியாக கொன்று வருகின்றது. இப்படி பெண்களுக்கு எதிரான "மகிந்தவுக்கு நன்றி" கூறி மகிந்த எடுபிடியாக மாறி பெண்ணியம் பேசுகின்றார்.   

 

இந்த மகிந்த அரசு தமிழ் மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்து வைத்து வதைப்பதையும், படுகொலைகள் செய்வதையும் ஆதரிகின்ற இந்தக் கும்பல்தான், புலத்தில் உள்ள மகிந்த எடுபிடிகள்.

 

மகிந்த அரசு ஊடகவியலையே கருவறுத்து போடும் பாசிச ஆட்டத்தை, இந்தக் கூலிக் கும்பல் ஆதரிக்கின்றது. 

 

கடந்தகால யுத்தத்தில் ஒரு இலட்சம் முதல் 2.5 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் குறைச்தபட்சம் 80 சதவீதத்துக்கு அதிகமான மக்களை கொன்றது, பேரினவாத அரசுதான்.

 

அதன் இன்றைய ஏகப் பிரதிநிதிதான் இந்த மகிந்த கும்பல். அதற்கு "நன்றி" தெரிவித்து மகிழ்பவர்களுக்கு, மகிந்த கும்பலோ எலும்பைப் போடும். இந்த மகிந்த எடுபிடிகளை இட்டு, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். "மகிந்தாவிற்கு நன்றி" சொல்லி நிற்பவர்கள், ஆள் காட்டிகளாக, மக்களுடன் நிற்பவர்களை கருவறுப்பவராக மாறி குழிபறிக்கும் மகிந்த அரசியலையே தங்கள் சொந்த அரசியலாக ஆணையில் வைத்துள்ளனர். இதற்கு புலியெதிர்ப்பு என்பது அளவுகோலாகின்றது. 

 

பெண்ணியம், இலக்கியம் …. என்று மகிந்த எடுபிடிகளுடன் இன்று சேர்ந்து செய்யக் கூடிய எந்த அரசியலும், எதிர்காலத்தில் ஆபத்தானவை. இன்று இதை புரிந்து கொள்வது அவசியம். இதை அரசியல் அடிப்படையில் அணுகி, மக்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புரட்சிகர கும்பலை இனம் காட்டி அம்பலப்படுத்துவதே முதன்மையான மைய அரசியலாகும்.

.

இன்று மகிந்த எடுபிடிகள், பெண்ணியம் தலித்தியம் முதல் மார்க்சியம் வரை பேசித்தான், மகிந்த அரசியலை ஆதரிக்கின்றனர். இந்த அரசியல் சூக்குமத்தை நாம் இன்று வேரறுக்க வேண்டும்.

    

பி.இரயாகரன்
21.10.2009