என்னிடம்
சிறிய
நீலவானமொன்று இருந்தது.
ஆக்கிரமிப்பாளர்கள்
அதை என் மீது விழுத்தினர்.

சிறிய
இருண்டநிறக் குருதியாறு ஒன்றும்
தேன்கனவுப் பொதியொன்றும்
என்னிடமிருந்தன.
அவர்கள்
அதையெல்லாம்
கொள்ளையடித்தனர்.

ஆயினும்
அவர்கள் என் தோலை மாற்றி
என் முகத்தைச்
சிதைக்க வந்தபோது
நான்
வெண்பனியும்
இடியொலியும் பூண்டு
என் தாயகத்தைத்
தோளிற் சுமந்து…

துப்பாக்கியின் தெருவில்
இறங்கினேன்.

-றபீக் ஸபி
*துருக்கிய குர்திஸ்தான் கவிஞர்

ஈழத்து எழுத்தாளர் சி.சிவசேகரம் ஆங்கில வழி தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதை அவரது “போரின் முகங்கள்” கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. – புதிய கலாச்சாரம், ஜனவரி’2002

http://www.vinavu.com/2009/10/03/saturday-poems-7/