08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மின்சார சபை வேலை நிறுத்தம் கொழும்பையும் இலங்கையையும் ஈடாடவைத்தள்ளது.

உலகெங்கும் ஒரு குடையின் கீழ் ஆளம் கனவுகளுடன், உலகிலுள்ள அனைத்து உற்பத்தியையும் தனியார் மயப்படுத்த உலக முதலாளிகள் கோரி வருகின்றனர். இதன் தொடர்ச்சியில் உலக முதலாளிகள் தரகு அரசான இலங்கை அரச பீடம் அரசு தொழில் பிரிவுகளை தனியார் மயப்படுத்த முனைப்புப் பெற்றுள்ளனர். இதையடுத்து இலங்கை மின்சார சபையைத் தனியார் மயப்படுத்த உள்ளதாக அரசு அறிவித்தது.

இதனால் எழுந்த வேலை நிறுத்தத்தால் மின்சாரம் இல்லாது போனதால் , நீர் கூட இன்றி இலங்கை முற்றாகச் செயலிழந்தது. யுத்தமும் அதற்கான ஆக்கிரமிப்பிற்கான பெருந் தொகை பணமும் ஒரு புறமும் மறு புறம் எரிந்து சாம்பலாக , இன்னுமொரு புறம் இவ்வேலை நிறுத்தம் அரசைப் பலவீனப்படுத்தியுள்ளது. இவ் வேலை நிறுத்தத்தை தடுக்க அரசு இராணுவ சட்டத்தை அறிவிக்காமல், இராணுவம் பலாத்தகாரமாக ஊழியர்களை கடத்தி வந்து துப்பாக்கி முனையில் மின் உற்பத்தியைத் தொடங்கியது.


துரோக தொழில் சங்கம் தமது  துரோகத்தையும் மீறி இதல் ஈடுபட வேண்டிய அளவுக்கு தொழிலாளர்கள் தொழில் சங்கம் கூட போராட வேண்டிய அளவுக்கு கமினிசம் தோற்றுவிட்டது. மக்கள் அதை வெறுக்கின்றனர் என்று கூறி மக்களின் சில பிரிவுகளிடம் சொத்துக்களைக் கொடுக்கும் தனியார்மயம் தான்  ஜனநாயகம் என எல்லாத் தொடர்புச் சாதனங்களும் மீள மீள ஒப்புவிக்கின்றன. ஆனால் மக்கள் உலகில் எல்லா இடங்களிலும் தனியார்மயத்திற்கு எதிராகப் போராடுவதைக் காணமுடிகிறது.

 

மக்கள் சொத்துக்களை அரசு மயமாக்குவதன் மூலம், அதன் சொந்தக்காராக தாம் மாறவிரும்புகின்றனர் அதற்காகத் தொடர்ந்து போராடுகின்றனர். அதற்காகத் தொடர்ந்து மின்சார, தொலைபேசி தனியார் மயமாக்கப்படல் திட்டம் பலத்த எதிர்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. (உ+ம்) தொலைபேசியில் பத்தாயிரம் கோடி ரூபாய் இலாபம் பெறும் அரசு அதை தனியார் மயமாக்க நினைப்பது ஏனென மக்கள் கேட்கின்றனர்.

 

இன்று இலங்கையில் எழுந்துள்ளது இப் போராட்டம். பல்வேறு போராட்டமும் இலங்கையின் புரட்சிகர நிலைமை கட்டு மீறி செல்வதைக் காட்டுகின்றது. கட்சிகள், தெழிற்சங்கங்கள் துரோகமிழைத்த நிலையிலும் மக்கள் தன்னிச்சையாகப் போராடுவதைக் காண முடிகின்றது. இன்று தேவை ஒரு சரியான கட்சி. தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்த , அதில் ஐக்கியத்தை எந்தளவுக்கு கோருகின்றோமோ அந்தளவுக்கு பிரிவினையும் உண்டென்று எந்த ஒரு கட்சி, முன்னணி சக்திகளின் வெற்றிடம் கட்சி மூலம் தீர்மானிக்கப்படின் ஒரு புரட்சிக்கான நிலைமைக்கள்  இலங்கை நகரும் என்பதை அண்மைய நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

 


பி.இரயாகரன் - சமர்