18.07.1988 ல் விமலேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டான். ஏன்?

 

பின்தங்கிய மாவட்டமான கிளிநொச்சியில் பிறந்த விமலேஸ்வரன் மக்களின் துன்ப துயரங்களைக் கண்டு அதற்கெதிராகப் போராட உணர்ந்து P.L.O.T இன் மாணவர் அவையாவன வுநுளுழு வில் இணைந்தான்.

பல்கலைக்கழக வாழ்வும் அதற்கூடான மாணவர் மத்தியில் தீவிரமாக செயற்பட்டான். P.L.O.T மக்கள் விரோத அராஜகத்தை இனம் கண்ட அவன் 84 இறுதிகளில் அவ்வியக்கத்தை விட்டு விலகியது. மட்டுமன்றி, தனது சக TESO நண்பர்களையும் விழிப்புற வைத்து இயக்கத்திலிருந்து விலகினார். விலகிய அவன் P.L.O.T  இன் அராஜகத்திற்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்தான். அத்துடன் விடுதலையின்    பெயரால் இயங்கிய அனைத்து இயக்க அராஜகம், மக்கள் விரோத அரசியலை விமர்சித்தான்.

 

இக்காலத்தில் பல்கலைக்கழகம் ஊடாக வன்னயில் குடியேறிய இந்திய வம்சாவழி மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்விடங்களில் நின்று அங்கு தங்கி உதவிகளைச் செய்ததுடன் தானும் செயற்பட்டான்.

 

பல்கலைக்கழக மாணவர்கள் மீது புலிகள் காலம் காலமாக நடத்திய வன்முறைகளை எதிர்த்து நின்றுஈ இறுதியில் அவர்களுக்கான ஒரு புதிய தலைமையை நிறுவுதல் ஈடுபட்டும் பின் அதன் செயலாளர் ஆனான்.  மாணவர்களின் நலன்களை  விட்டுக் கொடுக்காது உறுதியான தலைவன் என்பதை மீள மீள நிறுவினான். விஜிதரன் போராட்டம் எழுந்த போது அதை முன்நின்று நடத்தியதுடன் மட்டுமன்றி தானும் பங்கேற்று செயற்பாட்டான். சாகும் வரை போராட்ட வடிவத்தை ஆரம்பம் முதலே எதிர்த்த அவன், மாறாக மக்களிடம் சென்று முறையிட்டு அவர்களை ஒன்றிணைத்து நகர் போராட்ட வழிமுறைகளைப் பிரேரித்ததான். இருந்த போதும் பெரும்பான்மை சாகும் வரை போராட்ட வடிவத்தை ஆரம்பம் முதலே எதிர்த்த அவன், மாறாக மக்களிடம் சென்று முறையிட்டு அவர்களை ஒன்றிணைத்து நகர்போராட்ட வழிமுறைகளைப் பிரேரித்தான். இருந்த போதும் பெரும்பான்மை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை  கோரிய போது, மாணவர்களின் இயல்பான பூர்சுவா ஊசலாட்டத்தை உணர்ந்து அது பற்றி சிலருடன் கதைத்ததுடன் இறுதி வரை சாகும் வரை இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் தானே சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தான். இக்காலத்தில் உண்ணா விரதம் இருந்தவர்கள் தலைமைத் தாங்கியோர். மாணவர்கள் ஊசாலடிய பொது உண்ணாவிரதம் இருந்தபடியே தனது உரத்த குரலை உயர்த்தி அவர்களை போராட்டத்தின் பால் வென்றெடுத்தான். போராட்டத்தை தொடர்வதில் பல்வேறு ஊசலாட்டத்தையும் மீறி நடத்திய விமலேசின் பங்கு தனித்துவமானது.

  

அத்துடன் சிவத்தம்பி முதல் பல்வேறு மாக்சிச வேசமிட்ட ரோசிரியர்களின் சதியை முறியடிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டான்.

 

இக்காலத்தில் NLFT யின் மாணவர்கள் அமைப்பான புதிய ஜனநாயக மாணவர் சங்கத்தில் இணைந்திருந்த போதும் அவரால் தொடர்ந்து இயங்க முடியாத வகையில் தலைமறைவு வாழ்க்கைத் தாழ்த்தப்பட்ட பின்தங்கிய ஒரு கிராமத்தில் தொடங்கினான். அங்கு அவன் அவர்களுள் ஒருவராகிய பின் அவர்களுடன் கல்தோண்டச் சென்றது முதல் அவர்களின் எல்லா விதமான சாதியத்துக்கு உட்பட்ட வேலைகளிலும் ஈடுபட்டதுடன், கூலிக்கும் வேலை செய்தான். அந்த மக்களின் பிள்ளைகளின் நலன்களில் அக்கறை கொண்டு பாடம் சொல்லிக் கொடுத்து ஒரு “ கண்ணாடி மாஸ்ரர்” ஆனான்.


இந்திய இராணுவம் தனது ஆக்கிரமிப்பை நடத்திய காலத்தில் தனது இரண்டு வருட தலைமுறையை விட்டு நான் இந்திய இராணுவத்திற்கு எதிராவன என்பதால் புலிகள் தனது அரசியல் நிலையில் படுகொலை செய்யமாட்டார் என நம்பி வெளி வந்தான். நான் மக்களின் நண்பன். எதிரிகளின் எதிரி எனப் பறைசாற்றி புலிகள் அதை அனுமதிப்பர் என நம்பி வெளிவந்தான். ஆனால் புலிகள் எதிரியின் எதிரிகளைக் கூட விட்டுவிடாத, அரசியல் அநாதைகள் ஆகிவிட்ட புலிகள், படுகொலையின் மூலம் விமலேஸ்வரனை கொன்றனர். விமலேஸ்வரன் வாழ்வு, செயல்கள், எம்மண்ணின் புரட்சிகர வாழ்வின் ஒரு நினைவுக்கு உட்பட்ட ஒரு வழிகாட்டியாகவும் எம்முன் உள்ளது.