09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

புரட்சிகர மணவிழாவை : பார்ப்பன‌ பாசிச‌ வெறி நாய்கள் சும்மா இருக்குமா ?

ஜனநாயகம் பொங்கி வழியும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தனது சொந்த‌ விருப்பப்படி,தனது கொள்கையின் படி தனது திருமணத்தை நடத்திக்கொள்வதற்கு கூட உரிமை இல்லை.பர்ப்பன ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பலின் அடியாள் படையாக‌‌ இந்த நாட்டின் ஜனநாயக நிறுவணங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றன.குறிப்பாக போலீசு கும்பல் இந்துவெறி பயங்கரவாத கும்பலின் சடப்பூர்வமான,ஒழுங்கமைக்கப்பட்ட ரவுடி கூட்டமாக மாறி வருகிறது.

தருமபுரி மவட்டம் ஓசூரில் இயங்கி வரும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகர அமைப்பின் தோழர்கள் பர்ப்பனிய சடங்கு முறைகளை மறுத்து ஒரு திருமணத்தையும்,ஏற்கெனவே பார்ப்பனீய முறைப்படி திருமணம் செய்து அதன் பிறகு அமைப்புக்கு அறிமுகமாகி தோழர்களான பிறகு தற்போது பார்ப்பன அடையளங்களை அகற்ற விரும்பிய‌ பெண் தோழர்கள் தமது தாலிகளை அறுக்கும் ஒரு விழாவிற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்படு செய்திருந்தனர்.இந்த விழாவை தெருவில் நடத்துவதன் மூலம் பார்ப்பனீய சடங்கு முறைகளை புறகணித்த ஒரு புரட்சிகர மணவிழாவை மக்களுக்கு அறிமுகம் செய தோழர்கள் திடமிட்டிருந்தனர்.


இதற்காக மக்க‌ள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் செய்தார்கள்,திருமணத்திற்கு அனைவரையும் அழைத்திருந்தனர்.
தமது முச்சையே நிறுத்தும் வேலைகளை செய்தால் பார்ப்பன‌ பாசிச‌ வெறி நாய்கள் சும்மா இருக்குமா ?

தனது அடியாள் படையான போலீசை ஏவி விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு
செய்திருந்த பு.ஜ.தொ.மு ஒசூர் பகுதி அமைப்பாளர் தோழர் பரசுராமனையும் தோழரின் துனைவியாரையும் கைது செய்துள்ளது.

பார்ப்பன யங்கரவாத பாசிச கும்பலை அடியோடு ஒழித்துக்கட்டாவிட்டால்
அனைத்து ஜனநாயக உரிமைகளும் புதைக்கப்படும்.

இது மாபெரும் ஜனநாயக நாடு என்று புளங்காகிதமடைபவர்கள்
இதற்கு என்ன விளகமளிப்பார்கள் ?

எதற்கும் வாயை திறக்காத ஒரு வர்க்கம் இருகிறது,
அவர்கள் இனி மேலும் கண்களையும்,வாயையும் திறக்காவிட்டால்
நாளை தனது பிரச்சனைகளை,தனது விருப்பப்படி,தனது வயால் கூட‌ புலம்ப
முடியாதபடி இந்திய‌ ஜனநாயகம் மேலும் பல மடங்கு அதிகமாகியிருக்கும் !


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்