பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில்தான், பாசிசம் தன்னை தற்காத்துக் கொள்கின்றது, நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதற்கமைய நடிப்பது, பாசிசத்திற்கு கைவந்த கலை. ஆணாய், பெண்ணாய், எதுவுமறியாத அப்பாவியாய் என்று தொடங்கி அழுவது, ஒப்பாரி வைப்பது என்று அதற்கு தெரியாத பாசிசக் கலை கிடையாது. பொய்யில் புரண்டு, புழுப்பதுதான் பாசிசம்.

அது எப்போதும் தன் சொந்த பாசிச வரலாற்றை, தனக்கு எதுவும் தெரியாத ஒன்றாகவே ஊர் உலகத்துக்கு  காட்டும். அதைப் பற்றி எதையும் பேச மறுக்கும். தனது பாசிசத்தால் மக்கள் சந்தித்த எந்த மனித அவலத்தையும் பேசமறுத்து, எதிரி மக்களுக்கு செய்த கொடுமையை மட்டும் எடுத்து வைத்து பேசும். 

  

இப்படி பாசிசம் தன்னையும் தன் பாசிச வரலாற்றையும் எதுவுமற்றதாகக் காட்டித்தான், சமூகத்துக்குள் தன்னை புகுத்திக் கொள்கின்றது. வினவு தளத்தில் புலிப்பாசிசம் இந்த வகையில்தான், மூடிமறைத்தபடி ஊடுருவியுள்ளது. சர்வதேசியத் தோழர்களோ, இதற்கு எதிர்வினை செய்ய முடியாதளவுக்கு,

 

1.தோழர்களுக்கு கடந்தகால புலிப்பாசிசம் பற்றிய வரலாற்று தொடர்ச்சியை கற்றும் தெரிந்து கொண்டும் இருக்கவில்லை.

 

2. புலி பாசிச பிரச்சாரம் எது?, பொது மக்கள் கருத்து எது?, என்று பிரிக்கின்ற அந்த அரசியல் இடைவெளியை இன காணமுடியாதுள்ளனர்.

 

3. பாசிசம் இதற்கமைய மிகநுட்பமாக களத்தில் தன்னை மூடிமறைத்துக்கொண்டு நிற்கும் என்பதை, கொள்கையளவில் கூட அவர்களால் இனம் காணமுடியவில்லை.

 

தமிழ் மக்களின் பொது அவலத்தை, பாசிசம் தன் சொந்த அவலமாக பொதுவுடமை தளத்தில் நின்று கூற முனைகின்றது. இதன் மூலம் பொதுவுடமை அரசியல் அடித்தளத்தில், தமிழ் பாசிசம் கைவைத்து விறாண்டுகின்றது. தமிழ்மக்களின் பொது அவலத்தை தனது அவலமாகச் சொல்லி, சர்வதேசியத்தை ஈழத்து பொதுவுடமைக்கு எதிராக மிகவும் சூக்குமாகவே முன் நிறுத்துகின்றது.

 

மக்களின் மற்றொரு எதிரி பொதுவான அவலத்தை சொல்லும் போது, அதற்கு வர்க்க நோக்கம் உண்டு என்பதையும், பாசிசம் சார்ந்து அது இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர் தோழர்கள். அத்துடன் எதிரிகள் வெளிப்படையாகத்தான் இருப்பார்கள் என்று நம்பும் அப்பாவித்தனம்,  தோழர்களுக்கு.

 

தமிழ்மக்கள் அவல வாழ்க்கையையும், அதன் துயரங்களையும், அதன் பொது அனுபவத்தையும், யாரும் தமக்கு ஏற்ப, தம் நோக்கத்துக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மக்களை, இந்தப் பேரினவாதம் கடந்த 25 வருடத்தில் கொன்று குவித்துள்ளது. (இதைப் பார்க்க இங்கே அழுத்தவும்.-

 

தமிழினப் படுகொலைகள் பாகம் 01 1956-2001

 

இதைச் சுற்றிய கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், வாழ்வியல் சிதைவுகள் எல்லாம் எம் மக்களின் பொது அவலமாகும். இதற்குள் குறிப்பான அனுபவங்களோ, தனித்துவமானவை. இவை மேலும் ஆழமானவையும், துன்பமானவையும் கூட.

 

இவை எம்மக்கள் பேரினவாதத்திடம் சந்தித்த, சந்திக்கின்ற பொதுவான ஒடுக்குமுறைகள். இந்த பொதுவான அரசியல் உண்மையைத் தான், அரசியல் தளத்தில் ஒவ்வொருவரும் தம்கையில் எடுத்து கையாளுகின்றனர். இதை கையாளுகின்ற போது தமிழன் என்ற பொது அடிப்படையில், தனக்குள் எந்த ஒடுக்குமுறையையும் செய்யாது ஒன்றுபடுவது கிடையாது. அதாவது  தன்னை முரணற்ற வகையில், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒருங்கிணைவதும் கிடையாது. அதைக் கோருவதும் கிடையாது. தமிழனை தமிழன் ஒடுக்காது, தமக்குள் ஒன்றுபட்டு போராட மறுப்பது பொதுத் தன்மையாகி விடுகின்றது. தமிழனை தமிழன் ஒடுக்கியபடி, ஒடுக்கும் உரிமையை கோரியபடி, பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடக் கோருகின்றனர். இந்த அடிப்படையில், எம்மக்களை ஒடுக்கியபடி எம்மைச் சுற்றி தமிழ் பாசிசம் வளர்ச்சியுற்றது. இப்படி தமிழனை தமிழன் ஒடுக்கியபடி, பேரினவாதத்தை  எதிரியாக காட்டிய பாசிச வரலாற்றைத்தான், வினவு தளத்தின் மூலம் பொதுவுடமைக்கு கற்றுக் கொடுக்க முனைகின்றனர் தமிழ் பாசிட்டுகள். தமிழனை தமிழன் ஒடுக்கிய பக்கம் என்று ஒன்று, பேரினவாதத்துக்கு எதிரான தமிழனின் வரலாற்றில் கிடையாது என்பதை வினவு தளத்தின் ஊடாக சொல்லமுனைகின்றனர்.                 

 

மறுதளத்தில் தமிழனை தமிழன் ஒடுக்கும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடாத எதுவும், தமிழனுக்கே எதிராகியது. தமிழனால் ஒடுக்கப்படும் தமிழனுக்கு விடிவில்லை என்ற உண்மை, தமிழனின் ஜக்கியத்துக்கு எதிரானதாக மாறி நின்றது. இப்படி தமிழனை தமிழன் ஒடுக்குவது தான், பேரினவாத்துக்கு எதிரான பொதுவான ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் மறுதலித்து நின்றது. இதை தமிழ்மக்கள் போராட்ட வரலாறாக, வினவு தளத்தின் ஊடாக பொதுவுடமைக்கு கூற முனைகின்றது பாசிசம்.

 

எம்மண்ணில் தமிழனை தமிழன் ஒடுக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தவர்களை பாசிசப் படுகொலை மூலம் கொன்று, தமிழ் பாசிசம் தோற்றம் பெற்றது. 1980 களில் தொடங்கி 10 ஆண்டுகளில், பல ஆயிரம் பேரை தமிழ் பாசிசம் படுகொலை செய்தது. இந்தப் படுகொலையை சிங்கள பேரினவாதம் செய்யவில்லை. இந்த உண்மையை மூடி மறைப்பதன் மூலம்தான், தமிழ் பாசிசம் தன்னை வரலாற்று நாயகனாக இட்டுக்கட்ட முனைகின்றது.  தமிழனை தமிழன் ஒடுக்குவதை ஆதரித்த அனைத்து இயக்கங்களும், இந்த படுகொலையைச்  செய்தன. முதல் 5 ஆண்டுகளில் பல இயக்கங்களும், பிந்தைய 5 ஆண்டில் புலிகளும் அதை முழுமையாக செய்தனர். இதற்கு பிந்தைய ஆண்டுகளில், அதாவது 1990 களுக்கு பின், பொது ஜனநாயக் கூறுகளையே புலிகள் படுகொலை செய்தனர். இப்படி குறைந்தபட்சம்  20000 ஆயிரம் பேர் பாசிட்டுகளால் கொல்லப்பட்டனர். மார்க்சியவாதிகள், ஜனநாயகவாதிகள், புத்திஜீவிகள், பகுத்தறிவாளர்கள், ஏன் என்று கேள்வி கேட்டவர்கள் முதல் கேட்ட பணத்தை தர மறுத்தவர்கள் வரை அனைவரும் கொல்லப்பட்டனர். இங்கும் இதைச் சுற்றி சித்திரவதைகள் கடத்தல்கள், காணாமல் போதல் முதல் மனித சிதைவுகள் கொண்டதுதான்  எம் வரலாறு. இதை ஒட்டிய தரவுகளையும், ஆதாரங்களையும், புலிப்பாசிசம் தன்னால் முடிந்தவரை அழித்ததுடன், அதை வரலாற்றின் மூலத்தில் இல்லாததாக்கியது.

 

தமிழ்மக்கள் தமக்காக, தம் வாழ்வுக்காக இயக்கங்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். பாசிட்டுகள் அந்த ஆவணங்களை ஒருபுறம் மறைத்தனர். அவை தொடர்பாக எம்மால் சேகரிக்க முனைந்த ஆவணங்கள் பலவற்றை, பொய் வரலாறு சொல்ல முனையும் தமிழ் பாசிசத்துக்கு எதிராக, விரைவில் எமது ஆவணப்பகுதியில் இணைக்க உள்ளோம். இன்று தன் சொந்த நெருக்கடியில் உள்ள பாசிசம், தமழ் மக்களின் வரலாற்றை திரித்து புனைந்து காட்டுவதுதான், பாசிசத்தின் இன்றைய அணுகுமுறை. அதாவது மீள தன்னை ஒருங்கிணைக்க, மனித அவலம் சார்ந்த வரலாற்றை ஒரு பக்கமாக திரித்துக் காட்ட முனைகின்றது. இதன் மூலம் பாசிசம் மீள தன்னை ஒருங்கிணைக்கும் உத்திகளில் இதுவும் ஒன்றாகியுள்ளது. இதைத்தான் வினவு தளம் மூலம், பாசிட்டுகள் செய்கின்றனர். புலிப் பாசிசத்தின் சொந்தக் பக்கத்தை மூடி மறைத்து, பேரினவாத பாசிசத்தை தமிழனின் எதிர் வரலாறாக சொல்வது தான் தமிழ் பாசிசத்தின் பிரச்சார உத்தி.

 

இப்படி பாசிசம் பொதுவுடைமைக்குள் புகுந்து வேலை செய்யும் போது, தன்னை பொது மகனாகவும் அப்பாவியாகவும் காட்டிக்கொண்டு, திரிபுபட்ட வரலாற்றை வரலாறாக காட்ட முனைகின்றது.

 

இதை நாம் முறியடிக்கவேண்டிய வரலாற்று தேவை, எம்முன் சுமத்தப்படுகின்றது. மாணவர்கள் சந்தித்த பொது நெருக்கடி பற்றி, ஒரு புலிப் பாசிட் வினவு தளத்தில் புலிக்கு சார்பாக அதை திரித்துக்காட்ட முனைகின்றது. பாசிசத்தை எதிர்த்து அன்று மாணவர்கள் எதிர் கொண்ட நெருக்கடிகள், பிரச்சனைகள் என்ன என்பதை சுயமாக நீங்கள் புரிந்து கொள்ள, தற்போதைக்கு இதில் 11 துண்டுபிரசுரங்களை அவசரமாக இணைத்துள்ளோம். அத்துடன் இதை புரிந்துகொள்ள சில ஒலிநாடாக்களையும், ஒளி நாடாக்களையும் கூட இணைத்துள்ளோம்.

  1.  

  2.  

  3.  

  4.  

  5.  

  6.  

  7.  

  8.  

  9.  

  10.  

  11.  

  12.  

 

1987 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளால் கடத்தப்படட விஜிதரனுக்காக நடந்திய ஊர்வலம் மற்றும் ஆவணங்கள்

 

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

 

1.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)

 

2.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)

 

3.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)

 

4.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)

 

மக்களின் விடுதலையின் பெயரில் போராட முற்பட்ட இயக்கங்கள், மக்களையும் மாணவர்களையும் ஒடுக்கத் தொடங்கியது. இதனால் இயக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள், பரவலாகவே நடந்தன. 1000 கணக்கான துண்டுபிரசுங்கள் வெளிவந்தன. அதில் சில தான் இவை.

 

தொடரும்

 

பி.இரயாகரன்
24.08.2009