சோவியத் யூனியன் என்ற ஒரு சோசலிச நாட்டை குருசேவ் பிரசெனவ் கும்பல் முதலாளித்துவமாக மீட்டு தமது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கொப்பச்சேவ் மேலும் அதை பச்சையாகச் செய்த நிலைகளில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளானார் இதைத் தொடர்ந்து ஜெல்சின் அமெரிக்காவின் காலடிகளில் விழுந்தபடி ஆட்சியை கைப்பற்றினர்.

முதலாளித்துவ மீட்சியுடன் தேசிய இனப்பிரச்சனை சோவியத்தில் முன் தள்ளப்பட்டது. முதலாளித்துவ மீட்சியையும் , சுரண்டலையும் வெளித் தெரியாது மறைக்க மக்களைக் கூறுபோட்டு , மோத விட்டு அதில் கொள்ளையடிக்கும் உள்நாட்டு , வெளிநாட்டு கொள்ளைக்கார முதலாளிகள் சோவியத்தை இன மோதலுக்குள் அழைத்துச் சென்றனர்.

 

சோவியத்தில் தேசிய இனங்கள் சமமாக மதிக்கப்பட்டது, சுயநிர்ணய உரிமையையும் , முதலாளித்துவ முற்றாக கைப்பற்றிய போது அத்தேசிய இனங்கள் இலகுவாகப் பயன்படுத்தி பிரிந்து சென்றன.

 

இங்கு தேசிய இனங்கள் சோவியத்தின் வழிகளில் தான் இப் பிரிவினையைப்பெற முடிந்ததே ஒழிய முதலாளித்தவ வழிகளில் அல்ல. இன்று செசன்யா தனிநாடு கோரி பேராடி வருகிறது. இதன் மிது ரஷ்யா இராணுவம் மூர்க்கத்தனமாக தாக்குதiலைத் தொடுத்து செசன்யா மக்களை அழித்து வருகின்றனர்.

 

4 லட்சம் மக்களைக் கொண்ட செசன்யா மீதான ருஷ்ய ஆக்கிரமிப்பை அம்மக்கள் தீரத்ததுடன் எதிர்த்துப் போராடுகின்றனர். ருஷ்ய கம்யூனிஸ்டுக்கள் இத் தாக்குதலை எதிர்த்து தேசிய சுயநிர்ணய அடிப்படையில் சொந்த மக்களுக்குள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மீண்டும் சோவியத்தில் புரட்சி மலரும். செசன்யா சு.நி. உரிமை பற்று சோவியத்தை பாதகாத்துக் கொள்ளும். அதுவரை ஜெல்சின் ஆதிக்க ஆக்கிரமிப்புக்கள் தொடரத்தான் செய்யும். உலகின் ஜனாதிபதி கிளிங்டன் இத் தாக்குதலைத் தொடர்ந்து ஜெல்சினுக்கு தனது அனுதாபத்தை கூறி ஆக்கிரமிப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். வாழ்க ஜனநாயகம்.