“மொழி ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதன் தனித்தன்மைகளின் குறியீடாக விளங்குகிறது”  (1)

“எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்துகாலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி  வாழும் மொழியாக (Living language) கருதப்படும்”  (2)

மொழி பற்றிய இவை போன்ற குறிப்புகள் நெடுங்காலமாக இருக்கின்றன. ஆனால் மொழியின் அதிகாரம் / அதிகாரத்தின் மொழி என்ற விவாதங்கள் அண்மைக்காலங்களில்தான் முனைப்புப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தலித்தியம், பெண்ணிய தளங்களில் மொழி உடைக்கப்பட்டு அதிகாரங்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த அதிகாரங்களை நோக்கி எதிர்ப்புக்குரல்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படும் தேவை இன்னமுproudம் இருந்து கொண்டிருப்பது யதார்த்தம்.

மொழி ஆண்களினதாய் இருந்ததும் இன்னும் அதன் எச்ச/சொச்சங்கள் இருப்பதும் தெரிந்ததே. செய்தி ஊடகங்களிலிருந்து புனைவுகள்வரை ஆண்மொழி பரவியிருக்கிறது. ஆணின் அல்லது ஆண் சிந்தனையின் அதிகாரத்திலிருந்து மொழி இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

பத்திரிகை/சஞ்சிகை/இலக்கியம் என்று அச்சு ஊடகங்கள், திரைப்படம்/நாடகம்/வானொலி என்று ஒலி/ஒளி ஊடகங்கள் மட்டுமே பால் சார்ந்த மொழியால் பீடிக்கப்பட்டிருக்கவில்லை. எமது அன்றாட சாதாரண உரையாடல் கூட இதில் விதிவிலக்காக இல்லை.

உரையாடல்/கதைத்தலில் குறிப்பாக தூசண வார்த்தைப் பிரயோகங்களின்போது ஆண் வீச்சம் மிக அதிகமாகவேயுள்ளது. இதற்கு பொதுப்புத்தி மட்டத்தில் இது யதார்த்தம் என்று ஒரு அங்கீகாரம் வேறு கிடைத்து விடுகிறது.

உதாரணமாக “புண்டை”யை எடுப்போம். இந்தச் சொல் ஒரு ஆண் இன்னொரு ஆணை ஏசுவதற்காக, அவமானப்படுத்துவதற்காக அதிகமாகப் பயன்படுத்தும் தூசணமாகும்.  அதாவது “புண்டை” என்று திட்டுவதன் மூலம் அடுத்தவனை தான் இழிவுபடுத்துவதாக குறித்த ஆண் நினைத்துக் கொள்கிறான்.

இதன் பின்னாலிருக்கும் ஆணின் சிந்தனைதான் என்ன?

iwfposterபாலியல் வசைச் சொற்கள்

“பாலியல் உறுப்புக்களைக் குறிக்கும் சொற்கள் மற்றும் பாலியல் தொடர்பான சொற்கள் பலவும் பன்மொழிகளிலும் இழிசொற்களாகவும் வசைச்சொற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்பத்தில் இழிசொற்களாகக் கருதப்படாத சொற்களும் கால ஓட்டத்தில் இழிசொற்களாகப் பயன்பாட்டு மாற்றம் பெற்றமைக்கு பாலியல் தொடர்பான குற்ற உணர்ச்சி காரணமாக இருக்கலாம்”

தமிழில் பாலியல் வசைச் சொற்கள்

புண்டை: இது பெண் பிறப்புறுப்பினை குறிக்க பயன்படும் ஒரு சொல்லாகும். இச்சொல்லின் மூலச்சொல் லத்தீனமாகவோ, தமிழாகவோ, தென் ஆப்பிரிக்க மொழிகளில் ஒன்றாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத வார்த்தையாக இது இருப்பதுடன், இச்சொல்லின் பிரயோகம் அநாகரிகமானதென்ற கற்பிதம் கலாசார சூழலில் காணப்படுகிறது.

மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மரபுவழி இலக்கியங்களில் இச்சொல் காணப்படவில்லையாயினும், தற்கால தமிழ் இலக்கியச்சூழலில் இச்சொல் பரவலாக பயன்பாட்டிலிருக்கிறது. தலித் இலக்கியங்களில் இச்சொல்லும், இதற்கு சமமான சொற்களும் பெருமளவில் இன்று பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மரபுவழி இலக்கியங்களில் புண்டரீகம் என்ற சொல் தாமரை மலரை குறிக்க பயன்பட்டுள்ளது. பெண் பிறப்புறுப்பு தோற்றம் குவிந்து இதழ்களுடன் இருப்பதாலும், புனிதமானதாக கருதப்பட்டதாலும் (தாமரை மலர் இந்து மதத்தில் சிறப்பம்சம் பெற்றது), புண்டரீகம் என்ற சொல் மருவி புண்டை என்று வழக்கத்திற்கு வந்திருக்கலாம். (3)

எனக்குத் தெரிந்தவரை எந்தப் பெண்ணினதும் பிரதிகள் ஆண்கள் பயன்படுத்தும் தூசணங்களுடன் எழுதப்பட்டதாக இல்லை. ஒரு எழுத்தின் மீதான கோபத்தைக் கூட அவர்கள் தூசண மொழியில் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை.  இதை வெறும் பண்பாட்டுடன் சம்பந்தப்பட்டதாக மட்டும் குறுக்கிவிட முடியாது. பாலியல் ரீதியாக ஒடுக்குகின்ற கலாச்சாரம்/ஒழுக்க விதிகளுடன் முரண்படுகின்ற/முறித்துக் கொள்கின்ற பெண்களும் தூசண மொழி குறித்த விமர்சனதைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். இது குறித்த புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் எழுத்துகளை நாம் தேடி வாசிக்க வேண்டும். அப்படிப் பார்க்கக் கிடைத்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அன்றாட பயன்பட்டு மொழி குறித்த எமது அறிதலில் இவை கேள்விகளை ஏற்படுத்துவதுகூட ஒரு முன்னேற்றமே !

# # # # #

vmlogoT.I is a PUNDAI [vagina]  (4)

April 20, 2009 at 3:54 am · Filed under Diaspora(m)-being tamil, change, family

a commenter have left t.i.’s song for one of ma post abt ma feelings, due to Current SL Tamil situation. The last time i get to know abt mister T.I., its thru a facebook group

by tamil boiz called: T.I. is a pundai. and tharsh boii, i know u joined it ;-)

The Background story of that particular Group Name is quite relevant. our boiz just got envious abt this T.I. Guy who is a favorite for their Gurl Friends, decided to show

their anger in a damn facebook and in a  masculine way.

but, as a dark lover (lover of dark men who are tar black, nah usher u are not black enuf ;-) , wud i ever loved  T.I.’s image, if i hve pass him thru ordinary times? naaa.

after the face book group though, howeva, i came to this thougth. this T.I. dude, he must be FABULOUS. he must me SEXIII. he must be wayyyy Angelic. he must be

soooooo fuckin’ CREATIVE.

C 0 S

T.I. is a pundai.

and

pundai is anything, but insulting. pundai is nothing but  fabulous, sexiiest, angelic, beautiful and creative. it is beatiful coz it creates. creating is incomparable to destroying.

creation (vagina) Vs. Destruction (*****)- this is where all the beginnings. a mother tongue, lips, earth.

and these boiz who created this group are craaaaaazyy abt it, lovinnnnn it. if not, little remainder: they all came thru it. there is no other way ;-)

************************************************************

From: Facebook <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Date: Sat, Sep 22, 2007 at 8:57 PM
Subject: Tharsh invited you to join the group T.I is a PUNDAI

Tharsh invited you to join the Facebook group T.I is a PUNDAI.

To see more details and confirm this group invitation, follow the link below:
http://www.facebook.com/n/?group.php&gid=24993620256

Thanks,
The Facebook Team

# # # # #

எம்.ஜி.ஆர். கொலைவழக்கு - ஷோபாசக்தி (5)

Sumathy Rupen
April 28th, 2009

அருமையாகக் கதை சொல்கின்றீர்கள். இருந்தும் //எம்.ஜி.ஆரும் புண்டையும்\\ இது தேவைதானா? இனிமேல் கோவித்துக் கொள்வதற்கு ஆண் குறிகளை உபயோகப்படுத்துங்கள். வழக்கம் இதுதானே என்ற சாட்டுக்கள் வேண்டாம். மாற்றங்கள் அனைத்திலும் வேண்டும்.

#####

மூக்குள்ளவரை - பார்த்திபன் (6)

Thirumakal
July 19, 2009

கதையில பல பேர் சம்பந்தமான உங்களுக்கு இருக்கிற பயத்தில அதுகள எல்லாம் தொடாம கதைய எழுதி முடிச்சிட்டிங்க. பெண்உரிமைப் போராளிகள் தாக்குவார்கள் என்ற பயம் வந்தால் தான், பெண்கள் தொடர்பாக புனையப்படும் இழி சொற்களைத் தவிர்ப்பீர்களோ.

(திருமகள் எந்த ஒரு சொல்லையும்/வரியையும் குறித்துக் காட்டாவிட்டாலும் அந்தக் கதையில் வரும் கீழ்கண்ட வரிகள் காரணமாயிருக்கலாம் என்று கருதுகிறேன்)

“பொத்தடா வாயைப் புண்டையாண்டி. எங்களுக்கு மண்டேக்கை ஒண்டுமில்லையேண்டு நினைச்சியே நாயே”

தொடர்புள்ள சில பதிவுகள்:


படித்தவை:
  • (1) - http://suyamaai.com/?q=node/12
  • (2) - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
  • (3) - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%88% E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
  • (4) - http://teardroplander.wordpress.com/2009/04/20/ti-is-a-pundai-vagina/
  • (5) - http://www.shobasakthi.com/?p=258&cpage=1#comment-43
  • (6) - http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4263:2008-10-21-20-30-22&catid=202:2008-09-26-19-54-01&Itemid=50
  • http://books.google.co.uk/books?id=7-NdKhaWQfUC&pg=PA101&lpg=PA101&dq=anti+women+language&source=bl&ots=bH3tdjDZVE&sig=mHxmh645a1W- fuOp5mX7Dre2ER4&hl=en&ei=huF_SvikD4bSjAeAts3wAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5
  • http://books.google.co.uk/books?hl=en&lr=&id=KUYOAAAAQAAJ&oi=fnd&pg=PA111&dq=Man+made+language&ots=eifqNtheFf&sig=Qri1oWzo4IIeAxroTG00tvHCjRY

-----

கருத்து vs கருத்து

மு. மயூரன்August 11th, 2009 at 01:52

1.

/ஆணின் அல்லது ஆண் சிந்தனையின் அதிகாரத்திலிருந்து மொழி இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை./

அப்படி விடுவித்துவிட முடியும் என்று நம்புவதைப்போன்ற அறியாமையும் நம்பவைப்பதைப்போன்ற அயோக்கியத்தனமும் இருக்கமுடியுமா?

ஏதோ ஒரு பிரக்ஞை இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவும், நாகரிகம் கருதியும் சொல்லும் மொழியில் கொஞ்சம் கவனமெடுத்துக்கொள்ளலாம் அவ்வளவே.

2.

தூசணங்களும் தடுக்கப்பட்ட ஆபாசச்சொற்களும் ‘அல்ககோலைக்’காட்டிலும் இனிமையாயிருப்பது எப்போதென்று தெரியுமா?
காதருகில் வாயருகில் கிசுகிசுக்கும் நெருக்கத்தில் ஆணும் பெண்ணும் தமக்கிடையே பகிர்ந்துகொள்ளும் பொழுதுதான்.
எவ்வளத்துக்கெவ்வளவு தடை அதிகமாயிருக்குமோ, ஆபாசம் அதிகமாயிருக்குமோ அவ்வளத்துக்கவ்வளவு இனிமை…
தடைகள் நீங்குவதில் சின்ன வருத்தம்..

3.

ஏ எல் படிக்கும்போது ரெண்டு பொடியன்களுக்கிடையில் சண்டை வந்துவிட்டது.
மிக மூர்க்கமான சண்டை..

கோபத்தின் உச்சத்தில் ஒருத்தன் மற்றவனை நாயே.. பண்டி … என்று ஏசத்தொடங்கினான்.

புண்டை என்ற வார்த்தையே வரக்காணோம்..
வகுப்பில் புண்டை போன்ற சொற்கள் மலிந்து சாயமிழந்து சாதாரண மொழியாக மாறிப்போனதால் ஏசும் சொல்லாக இருக்கும் தகுதியை அது இழந்துவிட்டிருந்தது.

கோபம் மாறாமல் அவன் “ஏசிறதுக்குக் கூட ஒரு சொல்லை விட்டு வைக்கிறாங்கள் இல்லடா வகுப்பில″ என்று சொல்லிவிட்டுப்போனான்.

4.

இங்கே கொழும்பில் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த பெண் ஒருத்தி நான் நன்கறிந்த ஆணிடம் தன்னை “புண்டை” என்று பேசுமாறு தொலைபேசியில் வற்புறுத்திக்கொண்டிருந்தாள். பிறகது ஏதாவது தூசணம் கதை என்றவாறாக பேரமாய் நீண்டது. இவன், அவள் அதை தொலைபேசியில் பதிவு செய்து வைத்து பிறகு மிரட்டப்போறாளோ என்ற பயத்தில் கவனமாய் வார்த்தைகளை அளந்து பேசி மறுத்துக்கொண்டிருந்தான்.

5.

பூலல்/பூளல்/பூழல் எது சரி? அதுக்கு என்ன அர்த்தம்?

6.

காமம்/உடல் உறவு/இனப்பெருக்கம் இவற்றை ஒழுங்குபடுத்த இந்த கலாசாரமும், பொருளாதார அமைப்பும், மதங்களும், அனைத்தும் படுற பாடு சொல்லி மாளாதது. புண்டைக்கு ஆண்டியானால் ஆணுக்கு இழிவு. ஆட்டக்கார வேசையானால் பெண்ணுக்கு இழிவு.. மொத்தத்தில “குடும்பம்” கொஞ்சமும் குலையிறமாதிரி எது நடத்நாலும் அது இழிவுதான். அதிகார ஆணும் அதிகார ஆணும் “சூத்தடிச்சால்” கூட .