Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கே.கே நகருக்கு நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தோம். காலையில் வந்த வேலை முடிந்து போகவே அப்படியே டீக்கடையில் ஒதுங்கினோம்.

அப்போது ஒரு குரூப் வந்து கொண்டிருந்தது, ஒரு ஆண் கோமாளி வேசம், மற்ற படி மூன்று பெண்கள். கழைக்கூத்தாடிகள் போல உடையணிந்து கொண்டு வந்திருந்தார்கள். டீக்கடைக்கு முன்தான் பஸ் ஸ்டாப் மற்றும் பெரிய நிழல் தரும் மரமிருந்தது.

 

aids copy

 

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு நாலு டீ ஒரு பால் என்றவாறு ஆர்டர் செய்தோம். நண்பர் கேட்டார் யாருங்க இது? பதில் தரும் வகையில் கோமாளி வேசம் போட்டவர் ஒரு பேனரை விரித்து வைத்தார். அதில் “பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையே சிறந்தது” “வெளியில் போனாலும் சரி யாரிடம் போனாலும் சரி ஆணுறை பயன்படுத்துங்கள்” என்றிருந்தது. கொடுத்த டீயை விட வசனம் சூடாக இருந்ததால் கோதாவில் இறங்கினோம்.

 

முதலில் நான் ஆரம்பித்தேன் கோமாளியிடம் சென்று “எனக்கு ஒண்ணுமே புரியலை அங்க என்ன போட்டு இருக்கு” என்றபடியே பேனரை சுட்டினேன். கோமாளிக்கோ ஒரு சந்தோசம். என்னை வைத்து அரசியல் பண்ண ஆரம்பித்தார். நான் அவரை வைத்து அரசியல் பன்ண வந்திருக்கிறேனென்று தெரியாமல்.

 

“எல்லோரும் இங்க வாங்க அண்ணன் என்னவோ கேள்வி கேக்குறாரு? அண்ணே இன்னொருவாட்டி கேளுங்க” மறுபடியும் கேட்டேன் அவர் சொன்னார்”அதாவதுன்னா உடலுறவு மூலமாத்தான் எய்ட்ஸ் பரவுது, நீங்க யார்கிட்ட போனாலும் சரி ஆணுறைய மட்டும் மறக்காம போடுங்க” பெருமிதத்தோடு, கூட இருந்த பெண்களுக்கும் அப்படி ஒரு சந்தோசம். நான் ஆரம்பித்தேன் “ஏங்க ஆணுறை போட்டுக்கிட்டா எய்ட்ஸ் வராதா?” “ஆமா கண்டிப்பா வராதுண்ணா” தனக்கே உரிய ஏற்ற இரக்கங்களோடு.

 

“அது வேற மேட்டர், சரி அது என்ன யாரிடம் போனாலும் சரி, வெளியில் போனாலும் சரின்னு போட்டு இருக்கு” “அது வந்து ……..எச்சில் முழுங்கியபடி ஆரம்பித்தார் அது ஒரு எழுத்து நடைக்காக போடுறது சரின்னா கரெக்ட்ன்னு அர்த்தம் இல்லை சும்மா. நண்பர் கேட்டார் “சும்மாவா அது என்ன சும்மா வெளியில் போறது சரின்னு எழுதி விட்டு சும்மான்னா என்ன அர்த்தம்?”

 

அவர்கள் ஏதோ எழுத்து நடைக்குள் திசை திருப்புவதை உணர்ந்து மீண்டும் கேட்டேன் ” அய்யா ஒரு சந்தேகம் வெளிய விபச்சாரிகிட்ட போனா ஆணுறை போடுறது சரி, தேவைன்னு சொல்லுறீங்க இல்லைன்னா எய்ட்ஸ் வரும் அப்புடீங்கறீங்க, ஆனா அது சரியா? தவறா?ன்னு சொல்ல மாட் டேங்குறீங்களே? இது என்ன அயோக்கியத்தனம்? யார் யார்கிட்ட வேணுமினாலும் போங்க ஆணுறை போட்டுகிட்டு போன்னா என்ன அர்த்தம்நீங்க எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்ய வந்தீங்களா இல்ல ஆணுறை கம்பெனிக்கு விளம்பரம் தேட வந்தீங்களா இல்ல ஆள் பிடிக்க வந்தீங்களா என்றவாறு அந்த கோமாளியையும் பெண்களையும் கேட்டேன். அமைதியாய் இருந்தார்கள்.

 

நண்பர் சொன்னார்”வாய் மூடி இருக்கறதுல்ல பலனில்லை பதில் சொல்லியே ஆகணும்”. பகிரங்கமாய் கொஞ்சம் சத்தமாக நடந்த இவ்விவாதத்தை பார்க்க டீ குடிக்க, பேருந்து நிறுத்தத்திற்கு வந்த வர்களென ஒரு கூட்டமே கூடிவிட்டது. ஒரு டிப்டாப் ஆசாமி மட்டும் ஏதும் பேசாது கவலைகளின் ரேகைகள் ஓட நண்பரின் அருகில் நின்று கொண்டிருந்தான்.

 

கோமாளி கொஞ்சம் காட்டமாய் சொன்னார்”எவன் எவன் யார்கிட்ட வேணுமினாலும் போலாம் அது தனி மனித உரிமை அத நாங்க தடுக்க முடியாது, அது எங்க வேலையும் இல்லை, ஆணுறை போடுன்னுதான் சொல்ல முடியும் அவுசாரிகிட்ட போறவனை தடுக்கவாமுடியும்”. ரொம்ப சந்தோசம் ஆணுறை போடுன்னு சொல்லுற வாயால கூடா உறவுன்னு சொன்ன என்ன குறஞ்சு போவீங்களா?”

 

மீண்டும் சொன்னார் கோமாளி”அது தனிமனித உரிமை அதை கேக்க வேண்டிய அவசியம் இல்லை” ” என்னது? தனிமனித உரிமையா? ஒரு கனவன் தன் மனைவியிடம் உறவு கொள்வது வேண்டுமானாலும் தனிமனித உரிமையாயிருக்கலாம். ஆனால் இன்னொரு மணமானவர் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்வது தனிமனித உரிமைன்னு சொல்றத இப்பத்தான் கேள்விப்படுறேன், அப்படீன்னா இந்த நாட்டுல விபச்சாரியிடம் உறவு கொள்வதும், கள்ளகாதலும் தப்புன்னு சட்டம் சொல்லுது, கைதுன்னு தினம் பேப்பர்ல வருது, ஆனா இப்படி சொல்லுறீங்களே?

 

ஆணுறை விளம்பரத்துக்காக வந்தீங்களா? இல்லை உண்மையாவே எய்ட்ஸ் தடுக்குற நோக்கத்தோடு வந்தீங்களா? ஆமா நீங்க எல்லாம் யாரு? தாங்கள் தன்னார்வக்குழுவினர் என்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணவிற்காக வந்ததாகவும் கூறினார்கள் அப்பெண்கள். முடிவாய் சொன்னோம்

 

 ”உங்கள் பிரச்சாரம் கள்ள உறவினை தடுப்பதாக, பெண்ணை ஒரு பண்டமாக மாற்றுவதினை எதிர்க்க வேண்டுமே தவிர ஆணுறைக்கு ஆள் பிடித்து த ருவதாய் அமையக்கூடாது”. “ஒரு தன்னாவர்வ குழுவான நீங்கள் மக்களுக்கு உண்மையை சொல்வதற்காக உருவாகவில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு மக்களிடம் அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காகத்தானே.

அவன் அதிரடியாய் சொல்வதை நீங்கள் மென்மையாய் சொல்கிறீர்கள்” வேறு வழியின்றி கோமாளியும் கூட்டத்தப்பார்த்து இனிமேல் நாங்க அப்படியும் சொல்லுறோம் என்றவாறு கூத்தடிக்காமலே சென்றார்.

 

 தன் குழுவைப்பற்றியோ எங்கிருந்து பணம் வருகிறதென்பதைப்பற்றியோ கோமாளிக்கோ மற்ற பெண்களுக்கோ தெரியவில்லை. கூட இருந்த அந்த டிப்டாப் ஆசாமி உடனே அக்கூட்டத்தோடு எஸ்கேப் ஆனார். பின்னர் தான் தெரிந்தது அவர்தான் அந்த குழுவுக்கு ஆர்கனைசர்.அவன் பேசியிருந்தால் இன்னும் நன்றாக அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆள் பார்த்து இந்த என் ஜீ ஓ ஆசாமிகளெல்லாம் பேசுவார்கள்.

 

அவர்களை சரியாய் அம்பலப்படுத்தியபோதே தெரிந்து கொண்டு விட்டான் அந்த ஆசாமி அதனால் தான் அமைதியாய், பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 

 

இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் வரை பேருந்தினுள்ளே இருக்கும் ஆணுறை விளம்பரங்களை (எய்ட்ஸ் விழிப்புணவு பிரச்சாரமாம்!!) கிழித்துக்கொண்டிருந்தேன். ———————————————————————————————————————————————————————————— கடந்த மாதம் வரை அடிக்கடி ஒரு விளம்பரம் எப்.எம் -ல் ஒலிபரப்பாகிக்கொண்டு வந்தது. வீட்டு வேலைக்காரியிடம் அண்ணி துணி எடுத்து போடுவாள் (என்ன மரியாத இவளுக்கெல்லாம்) துவைக்கச்சொல்லி, அதில் கணவனின் தம்பியின் பேண்ட் பாக்கெட்டில் ஆணுறையை பார்த்துவிட்ட வேலைக்காரி சொல்ல அதற்கு அண்ணி காண்டம் தான தப்பு ஒண்ணும் இல்லையே.

 

 கார் சாவியை எடுத்ததை விட காண்டம் பயன் படுத்துவது தவறில்லை என்கிறாள். மேலும் இன்னொரு விளம்பரத்தில் கிளிக்கு,நாய்க்கு காண்டம் என பெயர் வைப்பது என்று காண்டம் என கூறுவது தப்பில்லைஎன கிழவி வந்து சொல்கிறது.

 

இதன் மூலம் முதலாளித்துவம் மாபெரும் உண்மையை சொல்லித்தருகின்றது. தவறை நான் சொல்வது போலச்செய் அது தவறே அல்ல. கட்டற்ற பாலியல் உறவுகளை கோருகிறது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம்.

மனிதனை தன் சுயமரியாதையை, தன் நிலமையை எதிர்த்து போராடுவதற்கு எதிரான எல்லாவற்றையும் எளிதாக தருகிறது. அதன்படி தான் இந்த “யார்கிட்ட வேண்டுமானாலும் போ ஆணுறையை யூஸ் பண்ணு”. இதையே தன்னாவக்குழுக்கள், அரசு என அனைவரும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் பெண்ணை கட்டற்ற பாலுறவின் நோக்கத்துக்கான இந்த பல விளம்பரங்களில், பிரச்சாரங்களில் நடிக்கும்பல பெண்கள் என்னவோ நாட்டுக்கு சேவை செய்வதைப்போல பெருமையாய் நடிக்கின்றனர்.

 கண் முன்னே நாடு பற்றி எரிவதைப்பற்றி, விவசாயம் அழிவதப்பற்றி, கைத்தறி நசிந்ததைப்பற்றி துளிவார்த்தை பேசாது தினவெடுத்து திரிபவனுக்கு பாதிப்பு வருமாம் ஆணுறையை பயன்படுத்தச் சொல்லி பிரச்சாரம் வேறு. சற்று யோசித்துப்பாருங்கள் யார் இதற்கெல்லாம் பனத்தை வாரி வழங்குவது?

 

நம் வாழ்வினை , கோவணத்தையும் சேர்த்து பறித்த அதே முதலாளிகள் தான் ஆணுறயை போட்டுக்கொள்வதற்காக பல கோடிகளை வாரி கொடுக்கின்றனர். சும்மா கொடுக்கவில்லை ஆணுறைகள் ஒரு விற்பனைப்பொருள், ஆணுறை மட்டுமல்ல பாலியல் சார்ந்துள பல பொருட்களை விறபனை செய்வதற்கு புதிய யுக்தி தேவைப்படுகின்றது.ஒரு பொருளை விற்க முதலாளி செய்யும் பல டிரிக்குகளில் இதுவும் ஒன்று. தான் போட்டதை விட பல பல மடங்காய் லாபம் தேவை அவனுக்கு. ஏன் நாளை ஆனுறை வாங்காதவர்கள் எல்லாம் கைது செய்யப்படலாம் யார் கண்டது மக்களுக்காகவா அரசாங்கம்?

 

இந்த விளம்பரங்கள் மனிதனை விழுங்கும் தொற்று நோய்கள், மனிதன் தன் சுயமரியாதைக்காக, தன் அடிமைத்மத்தனத்துக்கெதிராகா போராடும் வரை இவ்வகை தொற்று நோய்கள் நம்மை ழுங்கிக்கொண்டே இருக்கும். வர்க்கப் போராட்டம் என்ற அறுவை சிகிச்சை ஒன்றே அதற்கு சரியான மருந்து.

http://kalagam.wordpress.com/2009/08/10/எய்ட்ஸ்-விளம்பரங்கள்-மன/