Language Selection

சமர் - 16 : 08 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று உலகம் ஒரு குடையின் கீழ் ஆளப்படும் வகையில் வேகமாக புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகின்றது. அந்த வகையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நூறு பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் மொத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்தி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மொத்த நாடுகள் மீதும் நிறுவி வருகின்றது.

ஒவ்வொரு நாட்டின் தேசிய உற்பத்தியை அழித்தும் , தேசிய செல்வத்தைக் கொள்ளையடித்தும் இவ் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் துப்பிவிடும் எச்சலைக் கொண்டே தரகு முதலாளித்துவ கூட்டம் உலகெங்கும் தமது சொந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து உயிர்வாழ்கிறது.

 

இந்த சிறுதொகை தரகு முதலாளித்தவ கூட்டம் நாட்டிலுள்ள பிற்போக்கு வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து , 90 சதவிகித மக்களைக் கொள்ளையடித்து , கொட்டமடித்து வரும் இன்றைய நிலையில் புதிதாக ஒரு தரகு வர்க்கம் அரங்கில் உருவாகி வருகின்றது. தரகு முதலாளிகள் மற்றும் பிற்போக்கு வர்க்கத்துடன் உள்ள சிறு கூட்டத்துடன் மொத்த மக்களையும் இணைக்கும் வகையில், அவர்களையும் இதற்கள் இழுத்துவிடும் வகையில் கவர்ச்சிவாத சந்தையை உருலாக்கி வருகின்றனர்.


எழுந்து வரும் புதிய உலகப் பொருளாதார நெருக்கடியில் , சந்தைப்படுத்துவதில் எழுந்து வரும் நெருக்கடிகளின் ஊடே தரகு கம்பனிகள் தமது உற்பத்தியை எவ்வளவு தான் விளம்பரம் செய்தும் விற்க முடியாமல் தேங்கி விடுகின்றன. இதனால் இதைச் சரிக்கட்ட ‘NET WORK’ என்னும் சந்தைப்படுத்தும் முறையை இப் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கி உள்ளன.

 

NSA என்ற இன்றைய பன்னாட்டு நிறுவனம் 1970ல் 1000 டொலரையே சம்பாதித்தது. இன்று இந்நிறுவனம் 200 கோடி டொலர்களை நிகர லாபமாக மீட்டுள்ளது. இது இலங்கைப் பணத்திற்கு கிட்டத்தட்ட 11000 கோடி ரூபாய்களாகும்.

 

இந்த பன்னாட்டு நிறுவனம் எப்படி இதை சாதித்தது. வழமையான சந்தைப்படுத்தும் வழிமுறைகளை விடுத்து மக்களை நேரடியாகவே விற்பனையாளானாக மாற்றியுள்ளது. ஒருவரை தமது தரகனாக மாற்றிய பின் அவன் அப்பொருளை தனது உறவினர், நண்பர்களுக்கு விற்கும் வகையில் இவ் விற்பனை வழிமுறையையே உருவாக்கியுள்ளது.


விற்பவர் அதில் ஒரு கமிசனையும், முன்பு இவரை விற்பனராகச் சேர்த்தோருக்கு ஒரு கமிசனையும் வழங்கின்றது. இது பழைய தரகு முதலாளிக்குப் பதில் , பழைய எச்சில்களுக்குப் பதில் வாயிலிருந்து பறக்கும் துளி சிதறல்கள் அனைத்தின் மூலமும் இதைச் சாதிக்க முடிந்திருக்கின்றது. இதை செய்வதன் மூலம் பெரும் கொள்ளையடிப்பதுடன், பொருட்களுக்கு இலவச விளம்பரத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன், அப் பன்னாட்டு நிறுவனத்தை பாதுகாக்கவும், விற்பனை செய்பவரின் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இடையிலான உறவை ஒரு வியாபாரமாக மாற்றி சமூகத்தைச் சீரழிக்கவும் முடிகிறது.

 

NSA என்ற நிறுவனத்தின் பின் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் 6 ஆயிரம் பேர் அணி திரண்டு உள்ளனர். இது அதிர்ச்சியானது மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் ஒரு தலைமை வகிக்கும் இலங்கையரின் மாத வருமானம் இலங்கைப் பணத்தில் சில பத்து லட்சங்கள் ஆகும். இதில் சேரத்தூண்டும் நண்பர்கள், தமது பணப்பையை நிரப்பும் கனவுகளுடன் எப்படியாவது விற்றுவிடத் துடிப்பதை காண முடிகிறது.

 

(உ+ம்) மாக எமது நண்பர் ஒருவர் முன்பு எம்மடன் அரசியல் கதைத்ததுடன் , சமருக்கு உதவியும் வந்தார். இவர் இந்த நிறுவனத்தின் தரகு நபராக மாறிய பின்னர் , இதில் சேர எம்மைத் தூண்டினார். இது தொடர்பாகக் கதைக்க வந்தவர் . வழமையாக பல அரசியலைக் கதைப்பவர் இந்த வியாபார பேரத்திற்கு அப்பால் எதையும் கதைக்க முன்வரவில்லை. இது ஓர் அதிர்ச்சியான விடயமாக இருந்தது. எம்மைச் சேர்க்க சில வழி முறைகளைக் கூட கூறினார். அதாவது சமருக்கு இருக்கக் கூடிய நிதி நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள “இரண்டு பொருட்களை நீங்கள் விற்பின் சமர் ஒழுங்காக வரும்”- என்றார்.

 

பத்த நிமிடங்கள் கொண்ட ஒரு தமிழ் வீடியோ கசட் எமது பார்வைக்கு முன் வைக்கப்பட்டது. அந்த பத்த நிமிட கசட்டில் ஒரு சில பொருட்களை விளம்பரம் செய்யப்பட்டன. அதில் ஒரு பூட்டும், ஒரு தொலை நோக்குப் பார்வைக் கண்ணாடியுடனும் (கதவில் பூட்டுவது வெலியில் பார்! எனக் கண்டு கொள்ள ) அறிமுத்தைச் செய்தனர்.


இதில் NCB நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ் இரு பொருட்களும் உண்மையில் Nஊடீ யின் கண்டுபிடிப்பல்ல. மாறாக இங்கிலாந்திலும், ருசியாவிலும் இருந்த இரு நிறுவனங்களை விழுங்கி ஏப்பம் விட்ட NCB தனது பெயரால் இப் பொருட்களை விற்று பணத்தை அமெரிக்காவுக்கு கடத்துகின்றது.

 

தரகு முறையின் மாற்றத்தின் பின் இப் பொருட்களின் சந்தை வாய்ப்பை பத்து மடங்காக அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது. இது மக்களில் எஞ்சிய சிறு தொகையைப் பிடுங்க மக்களின் காதுகளில் பூ வைக்;கும் செயலே.


இது போன்று பல நிறுவனங்கள் இன்று ஐரோப்பா எங்கும் உருவாகியுள்ளன. இது எதிர் காலத்தில் லாபம் கருதி பொருட்களுடன் பொருட்களை மோத விடுவதன் மூலம் சாதாரண மக்கள் மோத உள்ளனர். ஓர் உலக யுத்தம் எற்படின் இவ்விற்பனையாளர்கள் எந்த பன்னாட்டு நிறுவனத்தின் பின்னுள்ள இவர்கள் அந்நாடுகளுக்காக யுத்தம் செய்யவும், பாதுகாக்கவும் துடிப்பர். இது ஒரு புதிய எதிரி வர்க்கமாக பரிணமித்து வளர்கிறது. இது தரகு பூர்சுவா (வர்க்க பெயர் சரியானதோ தெரியாது) மாக இனங்காண முடியும்.


மேற்படி Nளுயு நிறுவனத்தின் பிரச்சார ஒளி நாடா வீட்டைப் பாதுகாக்கும் விளம்பரத்தில 30 களில் இருந்த உலக நிலமை இன்று உள்ளது. இங்கிலாந்தில் பெருகி வரும் குற்றச் செயல்களை சுட்டிக் காட்டி உங்கள் வீடுகளை சொத்துக்களை பாதுகாக்க இதைப் பாவியுங்கள் என விளம்பரம் செய்கிறது.

 

30 களில் ஏழைகள் பெருகிய போதும் நீங்கள் கோடீஸ்வரராக முடியும் எனக் கூறி விற்கத் தூண்டுகின்றனர். இப்படி பல மோசடிகளுடன் உயர் வர்க்கப் பிரிவை இயன்ற வரை பாதுகாக்க எல்லா வகையிலும் முயல்கிறது. இததைச் செய்ய குட்டி பூர்சுவா கனவுகளுடன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் பங்குதாரராக மாற்றி தமக்கும் , ஏகாதிபத்தியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் , பன்னாட்டு நிறவனங்களுக்கும் சேவை செய்வதன் மூலம் மக்கள் எதிரிகளாக வளர்ந்து வருகின்றனர்.