மே – 7 ம் திகதி பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 வருட சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச கட்சி என்பது வரலாற்று ரீதியில் 2 ம் அகிலக் கட்சியின் தொடர்ச்சியே ஆகும்.
2 ம் அகிலத்தில் லெனின் இருந்ததுடன் புரட்சிக்கு எதிராகவும் , 1 ம் உலக யுத்தத்தை இவ் அகிலம் ஆதரித்து நின்ற போதும் , இதற்கு எதிராக லெனின் மற்றும் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளுடன் விமர்சித்து வெளியேறி , 3ம் அகிலத்தை உருவாக்கினார்.
சோசலிசக் கட்சியின் ஆரம்ப நிலையிலிருந்து தன்னை சீரழித்து வலது சாரியாக மாற்றி வந்த நிலமைகளில் இத் தேர்தலில் தோற்றுப் போனார்கள். இதே நேரம் பிரான்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் வழியில் தொடர்கின்றனர். 40-50 களில் 150 தொகுதிகளை வென்று வெற்றிவாகை சூடிய கம்யூனிஸ்ட்டுக் கட்சி இன்று 10 தொகுதிகளைக் கூட வெல்ல முடியாமல் வலது சாரியாக சீரழிந்து போகின்றனர்.
முதலாளிகளுடன் கூட்டு, இரகசியமாகப் பணம் பெறுதல் , தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தல் போன்றவைகளால் இக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் முடிவு நெருங்குகின்றன. இன்றைய நிலையில் 4ம் அகிலத்தில் இருந்து முன்பு வெளியெறிய ஒரு ரொக்சியக் கட்சி எதிர்பாராத சில வெற்றிகளை சாதித்துள்ளது. 6 சத விகித வாக்குகளை முன் ஒரு போதும் பெற்றிராத இக்கட்சி புரட்சியை விரும்பும் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இவர்களும் வெறும் வாய் வீச்சுடன் , புரட்சியை முன்னெடுக்க முடியாத வகையில் ஒரு புரட்சிகர கட்சியாக கொள்கை ரீதியில் கூட இல்லாது உள்ளனர்.
இதே நேரம் தேசிய முன்னனி என்ற நாஷிசக்கட்சி தனது செல்வாக்கை முன்பொருபோதும் இல்லாத வகையில் (15.5 சத விகித வாக்கைப் பெற்று (உயர்த்தி உள்ளது.சில பிரிவுகளில் முதற் சுற்று வாக்களி;ப்பில் முதன்மை வெற்றியை பெற்றனர். இவ் வெற்றியை பறைசாற்றும் வகையில் வெளிநாட்டவர்களை படுகொலைகள் செய்து வருகின்றனர். முதற் சுற்றுத் தேர்தல் முடிந்த 10 ம் நாள் மே- 1ம் திகதி நடந்த ஊர்வலத்தின் ஊடே பகிரங்கமாக மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞனை உயிருடன் செயின் நதியில் தூக்கி வீசி படுகொலை செய்தனர்.
இப்படுகொலையைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் தலைவர் லுபென் இதை ஒரு தற்செயலான விபத்தென அறிவித்தார். கொல்லப்பட்டவருக்கு அனுதாபத்தையோ தவறென ஏற்கக் கூட மறுத்தார். பின் பலதரப்புக்களிலும் எதிர்ப்பக்கள் கிளம்பிய நிலையில் இக் கொலையை ஒட்டி பொலிஸ் மீது குற்றம் சாட்டினார். இக் கொலையை செய்த நாசி மொட்டையர்கள் ஊர்வலம் ஊடாக வந்த போது மேடையில் அமைந்திருந்த லுபென் கையசைத்து வணக்கத்தைச் செலுத்துவதை எதிர்பாராமல் போலந்து நாட்டுத் தொலைக் காட்சிச் சேவையினர் படம் பிடித்திருந்தனர். இது தற்பொழுது பிரான்சில் பகிரங்கமாகவே ரிவியில் காட்டப்படுகின்றது. இக் கொலையை கண்டித்து அடுத்த நாள் 30 ஆயிரம் மக்கள் விதியில் இறங்கிப் பேராடியனர். இக் கொலையை ஜனாதிபதி வேட்பனர்களின் முக்கிய கேள்வியாக எழுந்தது.
இன்று ஜனாதிபதி பதவியாகப் பதவியேற்ற வலது சாரியான சிராக் இது வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனை என்ற மட்டத்துக்குள் மட்டும் அணுகுவதாக பிரச்சாரம் செய்தார். பலதரப்பிலும் தேசிய முன்னணியை தடை செய்யக் கோரிக்கைகள் எழுந்த போதும் சோசலிஸ்ட்டுக்கள் அதை ஆதரிக்காத வகையில் குரல் கொடுத்தனர்.
இக் கொலை நடந்த 4 ம் நாள், ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு வெளிநாட்டவர் மார்செயில் என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டான். இது பெரியளவில் வெளிவராத வகையில் ஜனாதிபதி தேர்தல் மூழ்கடித்து விட்டது. நாசிகளின் தலைவன் லுபென் 2 ம் சுற்று வாக்களிப்பில் தனது ஆதரவாளர்களை வெற்று வாக்களிப்பை நடத்தக் கோரினான். இந்த வெற்று வாக்களிப்பு 7 சதவிகிதமாக இருந்தது. இவர்களே தீவிர நாசிகள் ஆவர்.
புதிய கல்லூரி அரசாங்கம், இங்கு பிறக்கும் வெளிநாட்டுத் தாய் தந்தையரைக் கொண்ட குழந்தைகளுக்கு பிரஞ்சுப் பிரஜா உரிமையை உடனடியாக மறுத்துள்ளது. மாறாக 18 வயதில் கோரமுடியும். அக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பின், பிரஞ்சுப் பிரஜா உரிமையை பெற முடியாதென அறிவித்துள்ளனர். இரண்டு லட்சம் மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு முன்பு இவ் வலதுசாரி அரசுக்கு எதிராக போராடிய போது அது வன்முறையில் நகர்ந்தது. இந்நிலையில் அல்ஜிரிய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் எனக் கூறி நாடு கடத்தினர். பின் இது பல சட்டச் சிக்கல்களுக்கு உட்படும், மாணவர்கள் போராடியும் மீளவும் அவர்களை நாட்டுக்கள் கொண்டு வந்தனர். பிரஜா உரிமைச் சட்டமென்பது சாதாரணமாக போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயன்படும் என்பதை மேற்கூறிய சம்பவம் தெளிவாக்குகின்றது. இதன் மூலம் இவ் வலதுசாரி அரசு தனது நிற வேற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றது.
இன்றைய புதிய ஜனாதிபதி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கப் பிரகடனம் செய்தார். இது எப்படி சாத்தியமானது என்கின்ற போது வெள்ளை நிறம் அல்லாத தொழிலாளர்களை நாடு கடத்துதல் மூலமேயாகும். முதலில் விசா இல்வாதவர்கள், அடுத்து குறுகிய கால விசாவுடன் ஒப்பந்த வேலைகளில் உள்ளவர்கள், (இமிக் கிரோன்) குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற ரீதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை பிரஞ்சு மக்களும், வெள்ளை நிற ஐரோப்பியரும் பகிரங்கமாகவே கதைக்கும் அளவுக்கு நிலைமைகள் உள்ளன. சக தொழிலாளியாக எமக்கு இது பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் போது, இதன் தாற்பரியத்தின் வடிவத்தை புரிய முடிகின்றது. இவ் வலதுசாரி அரசு கடந்த பல ஆண்டுகளாக சோசலிச அரசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு குண்டுப் பரிசோதைனையை மீள நடத்தும் என அறிவித்தள்ளது. இதன் மூலம் சர்வதேச பதற்ற நிலைக்குள் உலகை வேகமாக நகர்த்த உள்ளனர்.
ஐரோப்பாவுக்குள் தலைமை இடத்துக்காக பிரான்சும் , சர்வதேச ரீதியில் தலைமை இடத்துக்கு ஐரோப்பாவை நகர்த்த புதிய வலதுசாரி அரசு எல்லாவித முயற்சியிலும் ஈடுபடும். அதற்கு அணு குண்டுகள் மூலம் எல்லாவித மோசடிகளிலும், மிரட்டலும் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.
இவ் வருடம் முதல் அமுலுக்கு வந்த டங்கல் திட்டம் மூலம் காட்டாட்சியின் ஆக்கிரமிப்பு மூலம், உலகில் ஏற்பட்ட தேக்க நிலையில் இருந்த உலக பொருளாதாரம் 1995 ல் 3 சத விகித வளர்ச்சியைக் கண்டதன் மூலம் உலகை மிகச் சிறப்பாக சுரண்ட இவ் டங்கல் திட்டம் சிறந்த வழியாக அமைகின்றது. இதை மேலும் இப் புதிய வலது சாரி அரசானது தீவிரமாக்கும்.
இவ் அரசு, மக்கள் நீண்ட காலங்கள் போராடிப் பெற்று விட்ட பல சலுகைகளை கடந்த இரண்டு வருடங்களில் பறித்துள்ளது. இந்த வகையில் மொத்த சம்பளத்தில் ஒரு சத விகித வெட்டை செய்ததுடன் , மருத்துவம் , மற்றும் குடும்ப உதவித் தொகைகளிலும் பாரிய வெட்டை நடத்தியுள்ளது. இப்புதிய அரசின் கீழ் பரந்துபட்ட பிரஞ்சு மக்களினதும், வெளிநாட்டுத் தொழிலாளர்களினதும், பிரஞ்சுக் காலனிகளிலும் பல போராட்டங்களை எதிர்காலத்தில் நாம் சந்திக்க முடியும்.