பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வயதான மனிதர் ரிக்சாவில்”இன்னைக்கு சாயங்காலம் ராமசாமி பேசப்போறார் நம்ம சந்தையில” நின்று கொண்டே கத்திக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு செல்வார். பின்னர் அம்மனிதரே பார்ப்பன ஆதிக்கத்தையும் அது ஏன் தகர்க்க வேண்டும் என்பதையும் விரிவாக அவரே பேசுவார்.
அவர் பெயர் பெரியார் ராமசாமி. செருப்பினை வீசினால் கூட அதை பொருட்படுத்தாது தன் கருத்தை வலியச்சென்று மக்களின் மனதில் பதித்து அதை வடித்ததால் தான் அவர் பெயர் பெரியார்.
தந்தை பெரியாரின் காலகட்டத்தை கண்டிப்பாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது முழுக்க முழுக்க பார்ப்பனீயம் தன் அகலக்கால் பரப்பி வந்த காலம், துணிவாய்பேசினார், சமுதாயத்தின்சாதிய, பார்ப்பன ஆதிக்க கொடுங்கோன்மையை நீக்கும் வேலையை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றவர் அவர்.தமிழகத்திலே இன்னும் பார்ப்பன, பார்ப்பனீய எதிர்ப்பு இருக்கிறதெனில் அதற்கு முழுச்சொந்தக்காரர் தந்தைபெரியார்.
தன் கொள்கைக்கு நேர்மையாய், பார்ப்பன, இந்துமத மூடனம்பிக்கைய தகர்க்க ஓடி ஓடி தன் உயிரைக்கூட சென்னை தி. நகரில் பொதுக்கூட்டத்தில் பேசியபின் உயிரைவிட்டார். அந்த கடைசிப்பேச்சினை கேட்டுப்பாருங்கள் அல்லது அப்புத்தகத்தை படித்தால் தெரியும். அதில் உரையின் இடையிடையே அய்யோ அய்யோ என வலியின் வேதனையால் என அலறுவார், ஆயினும் உரையை நிறைவு செய்து தன் வாழ்க்கையையும் நிறைவு செய்தார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பார்ப்பன பாதந்தாங்கியாய் சேவை செய்ய விரும்பாது, மக்களுக்காக பலவற்றையும் இழந்து சாதி, மூடனம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பலமாய் சவுக்கடி தந்த அந்த பகுத்தறிவு பகலவன் 94 வயதில் இறந்து விட்டார். அவர் எழுந்து வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரின் கல்லறையின் மீது ஏறி குதியாட்டம் போடுகின்றது வீரமணி கும்பல்.
சில ஆண்டுகளுக்கு முன்வரை (சுமார் 15 ஆண்டுகளுக்கு) சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்”கல்விக்கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகள் ஏன்?” “மலமள்ளும் பாப்பாத்தியயை கண்டதுண்டா?”போன்ற வரிகளெல்லாம் பல சுவர்களில் எழுதப்பட்டிருக்கும். அதை படித்துக்கொண்டு போகும் போது சிறு பள்ளி வயது மாணவனான எங்களுக்கெல்லாம் பெரியாரை முழுமையாய் தெரியாது, வீரமணியைத்தெரியாது ஆனால் அது உண்மைஎன்று மட்டும் புரியும்.
பின்னர் திகவிலிருந்து பெரியார்திகவினை சிலர் ஆரம்பித்து பின்னர் கொளத்தூர் மணிதலைமையிலான த.பெ.தி.க வும் இணைந்து பெ.தி.க ஆனது. தந்தை பெரியார் ஆரம்பித்த திகவும் அதன் சொத்துக்களும் வீரமணிவசம் சிக்கி குட்டிபோட்டு குட்டிபோட்டு மிகப்பெரிய மூலதனமாகிவிட்டது. சாகும்வரை மூத்திரவாளியோடு அலைந்து கொண்டிருந்த அந்தக்கிழவர் கனவிலும் நினைத்திருப்பாரா தான் வாங்கி சேர்த்தப்பணம் இப்படி கல்லாக்கோட்டையாகுமென்று.
பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என சாகும்வரை சொல்லிச்செத்த அந்தக் கிழவரின் தளபதியோ பாப்பாத்தி செயாவுக்கு ஒரு காலத்தில் சேவகன். புலிக்கு தான் தான் மட்டும் தான் ஜவாப்தாரி என உதார் விட்ட திக கும்பல் ராஜீவ் கொலைக்குப்பிறகு அடுப்படிக்கு போன பூனைதான் பிறகு போன நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் வெளியே வந்து சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தது.(?)
அதுவரை செயாவுக்கு ஜால்ரா போட்டது, கருணாநிதி கைதின் போது “சண்டித்தனம் செய்கிறார் கலைஞர்” அறிக்கைவிட்டது எல்லாம் என்ன ஆனது? போலிகம்யூனிஸ்டுகளைப்போல அடிக்கடி அணிமாறி நாங்கள் மாறவில்லை அவர்கள்தான் மாறிவிட்டார்கள் என ஒப்புக்குகூட உதார் விடத்தெரியாது. பார்ப்பன பாசிசத்தினை தமிழ் நாட்டில் வளர்க்க செயாதான் முக்கிய காரணம் எனில் அக்காலகட்டத்தில் செயாவோடு ஹோமபூஜையில் ஒன்றிரங்கி நெய் விட்டது வீரமணி சுவாமிகள்.
இன்றுவரை பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக்கு ஆதாரம் என்றால் சுயமரியாதை நிறுவனபுத்தகங்கள் தான் மிகச்சிறப்பானவை, ஏன் வீரமணியின் பேச்சு எவ்வளவு சிறப்பானது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காமல், அவரின் புத்தகங்கள் எத்துணை ஆராய்ச்சி மிகுந்தது? ஆனால் சொல் ஒன்று செயல் ஒன்றென விளங்கும் அயோக்கியத்தனத்தை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
யாரிடம் சென்றாலும் குழைந்து குழைந்து தன் சுயமரியாதையத்தான் வெளிப்படுத்தினார் வீரமணி. ஆம் செயாவிடம் இருக்கும் போது அவருக்கென்றுதனி ஒளிவட்டம் போட்டு, இடஒதுக்கீடு வீராங்கனை பட்டம் கொடுத்து, செயாவுக்கு ஏற்ற அரசியல்ஜோடிகளை தேடிப்பிடித்து எவ்வளவு வேலைகளைசெய்தார் அய்யா வீரமணி. இதற்கு அவருக்கு என்ன பட்டம் கொடுக்க வேண்டும்? மாமாமணி என்றால் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது அவரின் பக்தர்களுக்கு.
தன்னை கேவலப்படுத்தி தலைவனை உயர்த்துவான் பக்தன் அப்படிதான் வினவில் பெரியார் விடுதலை கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த வீரமணியின் பக்தர்கள் வானளாவ அவரை புகழ்கிறார்கள். “அந்தக்காலத்துல பெரியார் அய்யாவபத்தி என்ன சொன்னார் உனக்கு தெரியுமா” எதிர் கேள்வி போடுகிறார்கள் திக குட்டிகள். இது தான் பகுத்தறிவா? பெரியார் சொன்னார்” நான் சொல்றேன்னு எதையும் நம்பாதே நீயே யோசிச்சு பகுத்தறிஞ்சு பேசு” ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் சொன்னதை இப்போதும் யோசிக்காது எடுத்து விளக்கம் கூற வந்த திராவிட சிகாமணிகள் எப்படி பார்ப்பனீயத்தை விரட்டுவார்கள்?
சில ஆண்டுகளுக்கு முன் வந்த பெரியார் ஆண்டு விழா மலரில் விளம்பரத்திற்காக ஒரு சாமியாரின் விளம்பரத்தையும் போட்டிருந்தார்கள். இதற்கு பெயர்தான் பகுத்தறிவா? மதுவினை காந்தி எதிர்த்தார் என்பதற்காக நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிய பெரியார் எங்கே? சாமியார்பயலிடம் காசு வாங்கி கல்லாவை நிரப்பி காரில் வந்து கொடியேற்றும் வீரமணி எங்கே?
சட்டமாவது வெங்காயம் என சுயமரியாதைக்கு தடையாக வரும் எதையும் செருப்பால் அடித்த தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கு உரிமை கோருவதினை சட்டம் தவறு என சொல்கிறது. மேல்முறையீட்டில் வேறு நீதி கூட கிடைக்கலாம். பெரியாரின் எழுத்துக்கள் வீரமணிகும்பலுக்கு சொந்தமாகிவிட்டால் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தலைவரின் வாழ்க்கையும் விற்பனை சரக்காகிவிடும். சுந்தரராமசாமியின் புத்தகங்களை நாட்டுடமையாக்க நினைக்கும் அரசு(கண்ணன் எதிர்ததால் பின்னர் கைவிடப்பட்டது) தந்தை பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க தடுப்பது எது? பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு தகுதியற்றதா?
அதை தடுப்பதுதான் நாத்திக வெங்காயம், கருனாவுக்கு நாயாக இருக்கும்வரை அப்புறம் அடுத்தபடியாக யாருக்காவது வாலாட்டிக்கொண்டே இருந்து அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு சப்பை கட்டு கட்டியே வாழ்ந்து விடலாம். மலத்தில் விழுந்தாலும் காசு காசு தானே. நாங்க சிடி தயாரித்து விட்டோம் வெளியிடுவதற்குள் பெரியார் திக குறுக்கு வழியில் கைப்பற்றிவிட்டார்கள் பணம் பேரிழப்பாக அமையும் இதையும் கொஞ்சம் கவனியுங்கள் என்கிறார் வீரமணி மேல்முறையீட்டில். சொல்லப்போனால் பணம் போட்டாச்சு கையைகடிக்குமாம்.