புலத்தென்னினத்து மானுடனே
பட்டினி போரெடுத்தாய்
பாதையெலாம் தடுத்தாய்
கையெழுத்துப்போர் கடையடைத்தாய்
பேருந்தில் நிறைத்து பெருநகரவீதிகளில்
ஜெனிவாவில் பெல்ஜியத்தில்
எழுச்சியெலாம் அடங்கி ஏன்படுத்தாய்
இனிக் கேபி சொல்கிறார்
இந்திய அரசற்று எமக்கேது விடுதலை………
கிளர்ந்தெழுவாய் கொடியெடுப்பாய்
செக்குமாடாய் சுற்ரிய புத்திமாறி
நெஞ்சைப்பிளந்து உன்இதயத்தை கையிலெடு
இளையோரின் ஏக்கத்துடிப்பு
நாடி நரம்பிடை பரவும்
புதியயுகத்து புத்துணர்ச்சி பாயும்
;
மண்வாழ் உறவுயிரின் மகிமையுணர்
எண்ணவர் எதிர்காலம்
கண்ணில் கனல் மூட்டு
புத்தியைதீட்டி புலத்திலெழும்
போலிகளைதட்டி இருத்து..உன்
மட்டித்தனத்தால் மாண்டவர்போதும் இனி
மெல்லநகரினும் வல்லவராய் எழலாம்
கல்மனதில் கருணை பாச்சு
நில்நிதானித்து பார்பின்நோக்கி
நல்வழியா நாசத்துள் வீழ்ந்தோம்
செல்லடியா வீழ்த்தியது..இல்லை
சொல் உரக்க மக்கள் பலமிழந்தோம்
கல்லும் கரையும் வலி
பொல்லாப்போரே
வில்லெடுத்து எய்தலிற்கும்
வீழ்த்தும் குறி குறிக்கோள் வேண்டும்
எல்லையற்று இழந்தோம்
ஏதுகண்டோம் கண்ணெதிரே கூண்டுக்குள்
சொல்லில் வடிக்கா சோகத்தில்..
செல்வங்கள் பெற்றவரை எண்ணிப்பார்
புலத்துன் திமிரும் மடமையும்
இனத்தை பலியாக்கி)
இளையயோரை சிறைக்குள் தள்ளியது
கூண்டுக்குள் இசையெழுப்பும்…. எம்பிள்ளை..
குரல்இனிமை ஈட்டியாய் பாய்கிறதே
எழுகின்ற கைஓசை…புலத்தவரின்
செவிப்பறையை ஊடறுத்து..
மங்கிய மூளையில் மனிதம் உயிர்க்கணும்