ஜுலை/1/2009 அன்று, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கேள்வி நேரத்தில் பன்னீர் செல்வம் – அதிமுகவின் கேள்விக்கு அளித்த பதில் பின்வருமாறு:
பன்னீர் செல்வம் – அதிமுக: தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் சேரும் நிலை உள்ளது. எனவே, தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துமா?
தங்கம் தென்னரசு: அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர் என எதிர்கட்சி துணைத் தலைவர் கூறியதே அரசுப் பள்ளிகள் தரமாக செயல்படுகின்றன என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்.
ஒரு கி. மீ., க்கு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி. மீ., க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 7 கி. மீ., க்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளை துவக்கி அரசு நிர்வகித்து வருகிறது.
ஆம், இந்த செய்தியை படிக்கும் எவரும், ஓ…. அரசு கல்வியின் தரம் அவ்வளவு உயர்ந்துவிட்டதா? என்று ஆச்சரியப் படக்கூடும். ஆனால், உண்மை என்னவென்றால்…..
தெருத் தெருவாக அலைச்சல்: குடிநீரின்றி மாணவர்கள் தவிப்பு :
திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசினர் மேனிலைப்பள்ளியில் குடிநீர் வசதியில்லாததால் மாணவர்கள் தண்ணீருக்காக தெருத் தெருவாக செல்லும் அவல நிலை??? (தினமலர், ஜூலை 11,2009)
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர் களில், பெரும்பாலானோர் கிராமங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கழிப்பிடம் மற்றும் குடிநீர் இல்லாமல் தினசரி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
குடிநீருக்காக மாணவர்கள் அருகில் உள்ள டீக்கடைகளையும், கிராமத்தில் உள்ள தெருக்களில் உள்ள போர்களையும், பஜார் பகுதியில் வைத்துள்ள மினி டேங்யும் மாணவ, மாணவிகள் நாடி செல்கின்றனர்.
மேற்கூரை இல்லாத பள்ளி கட்டடம் கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் அவதி:
செய்யூர் அருகே பள்ளிக் கட்டடத்தை பழுது பார்ப் பதற்காக பிரிக்கப்பட்ட மேற்கூரை ஓடுகள், நான்கு மாதங்களாகியும் சரி செய்யப்படாததால், மாணவர்கள், ஆல மரத்தடியில் படிக்கும் அவல நிலை(தினமலர் 03-07-2009).
ஓடு வேய்ந்த கூரையால் ‘அனல்’: மாணவ, மாணவியர் தவிப்பு:
சென்னை செங்குன்றம், புழல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, ஓடு வேய்ந்த தாழ்வான கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை காலத்தில் கடுமையான அனல் வீசும். மழைக்காலத்தில் கூரைகளில் உள்ள இடைவெளியால் மழை நீர் தாராளமாக வகுப்பறைகளில் தேங்கிவிடும்.
பள்ளியின் கழிவறைகளில் இருந்து கழிவுநீர் அருகில் உள்ள கால்வாய்க்குள் செல்லும் வகையில் கட்டப்படாததால், மாணவ, மாணவிகள் தங்கள் இயற்கை உபாதையைக் கழிக்க, வேறு வழியின்றி பள்ளிக்கு வெளிப்பக்கமுள்ள தெருவை பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர் (தினமலர், 27/௦06/2009).
பள்ளி உண்டு; கட்டடம் இல்லை – சாலை உண்டு; பஸ் கிடையாது:
புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளங்காடு பாக்கம் ஊரட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில், 7 & 8 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலநிலை.
கண்ணம்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு தொடக்கப்பளியில், பேய் பங்களா போல் உள்ள பள்ளி மைதானம் (தினமலர், 03/07/2009).
இவை எல்லாம் தனியார் மயத்தை உயர்த்தி பிடிக்கும் முதலாளித்துவ பத்திரிகைகளில் வந்த செய்திகள் மட்டுமே. ஆனால், எந்த அரசு பள்ளிகளுக்கு சென்றாலும் இதைவிட மோசமான நிலைமைகளை நாம் காணலாம்.
இப்ப சொல்லுங்க, அரசு கல்வியின் தரம் அவ்வளவு உயர்ந்துவிட்டது என்று அண்ட பொய் பேசிக் கொண்டு மக்களை ஏமாத்தும் ஒட்டு பொறுக்கிகளை என்ன செய்யலாம்?
இனியும் இந்த ஒட்டுபொறுக்கி நாய்கள் அரசு கல்வி கொடுக்கும்மென்று நம்பலாமா?
அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டுவோம்! வீதியில் இறங்கி போராடுவோம்!
இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம்!
http://rsyf.wordpress.com/2009/07/28/கம்னியூஸ்ட்களே-குறை-கூறா/