வெடித்துக்கிளம்பி வீறுகொண்டெழுந்து
வேங்கையாய் மடியென
இடித்துச்சொன்ன கவியரசே..என் ஜயா
குறும்பரப்பில் குழிகளிலே தெருக்களிலே
சிதறுண்டு பதைக்க ஓவென்றழுவாயே
தர்மமே மடிந்ததென்று தலையில் அடிப்பாயே.
.உன்குரலின் பிளம்பெழுந்து
உலகை எரிக்கும் சக்தியின் வீச்சடங்கி
சரிந்து பிறழ்ந்து நீர்கும்பிட்ட தெய்வத்தை
குறைகண்டு புரண்டுமாறி வெண்ணிறமாய்……….
ஏனையா உன்நிலத்துப் பாட்டெல்லாம்
விழலுக்கிறைத்து வீழ்த்தியதோ புத்திரரை
நித்திரைமுறிந்து நெடுங்குறட்டை விட்டெழுந்து
கட்டியகோட்டை சிதறிப்போய் புத்திதெளிந்தென்ன
போர்க்காலக்கவியென்றோம்
காற்ரோடு பரவி அகிலமெலாம்
தெருவிறங்கி தீக்குளித்து ஆர்ப்பரித்து
பற்றிப்படர்ந்ததெலாம் கொழுகொம்பற்று
முட்டிமுறுகி வான்பார்த்து……..
போர்க்களத்தி;ல் அரணில்
போராடிநின்ற பிள்ளைகள் வீரத்தில்
வயல்பரப்பில் காட்டில்
கரவலை இழுக்கையில்
கட்டுமரம் வலிக்கையில்
தெருக்குந்தில் திண்ணையில்
கொழுந்தெடுத்த கூடைதோளளுத்த
உழைப்பின் வியர்வையில் ஓராயிரம் பாட்டெழும்
மரக்கிளைஏணியில் தூங்கும் மகவுக்கு
சேற்றினில் நாற்றுநடும் தாயிடமும் பாட்டெழும்
உழைப்பின் மகத்துவம் சொல்லும்
உறிஞ்சுவோன் கொழுப்பைச் சொல்லும்
பூட்டியவிலங்கொடிய புகுவளிகாட்டிநிற்கும்
மக்கள் வாழ்வுடன் ஒன்றிப்போன
கலைஇலக்கியமே
வையத்துள் நிலைத்துவாழும்