போராட்டம் நடைபெறுகின்ற போது, போராட்டத்தை திசைதிருப்புவதற்காக எதிர்க்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் மக்களிடையே உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தும். உளவியல் தாக்கத்தின் மூலம் புரட்சிக்கு ஆதரவான மக்களின் உணர்வை சிதைக்கின்ற தொழிற்பாட்டைச் செய்கின்றன.

இந்தக் குழுக்கள் வௌ;வேறு வகையான தன்மைகளைக் கொண்டதாகவும், நாட்டிற்கு நாடு சூழலிற்கு ஏற்ப மாறுபட்டும் இருக்கின்றன. இவற்றின் ஒரு பகுதியினர் நியாயமான போராட்டத்திற்கு உழைப்பதாக காட்டிக் கொள்கின்றன. இவை திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படும் எதிர்ப்புரட்சிக்குழு.

 
கொலைக்குழு, (ரௌடிகள்), அடியாட்கள்


திசைமாறும் போராட்டக்குழுக்கள்

 

இவ்வாறான குழுக்கள் உலகில் பல பாகங்களில் இருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், பிரேசில், ஆர்யன்ரீனா போன்ற நாடுகளில் இருக்கின்றன. இந்தக் குழுக்களிடையே இருக்கின்ற பொதுவான அம்சங்களைப் பார்ப்பது அவசியமாகின்றது. இந்தக் குழுக்களால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படுகின்றது. இவர்களுக்கும் உள்@ர் ஆட்சியாளர்கள் கொண்டுள்ள தொடர்பு என்ன? இவர்கள் சம்பந்தமாக ஏகாதிபத்தியங்கள் எவ்வகையான தந்திரோபாயங்களை கைக்கொள்கின்றது என்பது பற்றி பார்ப்பது அவசியமானதாகும்.

  

எதிர்ப்புரட்சிக் குழுக்களும் உருவாக்கப்படுவது எல்லாக் காலத்திலும் நடைபெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்காக இல்லை. அங்கோலாவை எடுத்துக் கொண்டால் சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலத்திலேயே சபீம்பியை அமெரிக்கா விலைக்கு வாங்கியிருந்தது. இதேபோல நிக்கரக்குவா புரட்சியின் பின்னர் கொண்டுராஸ் எதிர்ப்புரட்சிப் படைகள் டானியல் ஒட்டேகாவின் ஆட்சிக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தார்கள்.

 
மேற்கூறிய இரண்டு பகுதியினருக்கும் றீகன் நேரிடையாகவே உதவி புரிந்தார். ரஸ்யப்புரட்சியின் பின்னர் எதிர்ப்புரட்சிகர குழுக்களுக்கு பிரித்தானியா நேரிடையாகவே உதவி புரிந்தனர். (புலிகளின் உண்மையின் தரிசனம் என்ற தொலைக்காட்சியில் இனப்படுகொலைக்கு உதாரணமாக எதிர்ப்புரட்சிகளுக்கெதிரான போராட்டத்தை காட்டி ஏகாதிபத்தியத்திற்கு தாம் விசுவாசிகள் என்று காட்டிக் கொண்டனர் இவை ஒருபுறமிருக்க)


இலங்கையில் பிரேமதாசாக் காலத்தில் களனியாற்றில் மிதந்த மனித சடலங்கள் இவ்வாறான கொலைப்படைகளின் மூலம் நடைபெற்றதாகும். தமது எதிராளிகளை அடக்கிக் கொள்வதற்கு நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டிருந்த கொலைப்டையானது எதிரிகளை இல்லாது ஒழித்தது. இதன் மூலம் சமூகத்தில் ஒரு பீதியை உருவாக்கி வைத்திருந்தனர்.


கடந்த காலத்தில் விடுதலைக்காக போராடப்புறப்பட்ட அமைப்புகள் பழிவாங்கும் உணர்ச்சி கொண்டு தமிழ் மக்களையும், முன்னர் விடுதலைப் புலிகளையும், இயக்கங்களில் இருந்து ஒதுங்கியிருப்பவர்களையும் துன்புறுத்தினர்.


*முன்னர் மோகன், ராசிக்குழு, மண்டையன் குழு (இந்திய இராணுவம்) எனவும் ஜிகாத் குழுவும் இருந்தது.


* ஜிகாத் குழுவானது முன்னர் இல்லை என கூறிக் கொண்டபோதிலும் இன்று அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் உறுதி செய்கின்றனர். இங்கு ஒரு இனப்பிரிவில் இருந்து பிரித்தாளும் தந்திரம் கொண்டு உதிரிப் பாட்டாளி வர்க்கத்தினர் சலுகை மூலமாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.


இந்தக் கூலிகளின் செயற்பாடானது எந்தவகையிலும் தமிழ் தேசிய குழுங்குழுவாதத்தின் நடவடிக்கைக்கு ஈடானதாகும். இவர்களும் தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு பாதகமான காரியங்களை செய்து கொண்டுதான் வந்திருக்கின்றனர்.


*அரச ஆசீர்வாதம் பெற்ற ஆயுதக் குழுவே வெள்ளைவாகனத்தில் வந்து மக்களைக் கடத்தினர். இவர்கள் திட்டமிட்ட முறையில் கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம், உடல் உறுப்புக்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசஆதரவும் படைகளின் தொடர்ச்சியான ஆதிக்கம் என்பது இருக்கத் தான் போகின்றது. இதற்கு முன்னையக்காலத்தைப் போலவே இனங்களை கடந்த ஒரு பயங்கர நிழல் படை எப்பொழுதும் மக்களின் உரிமையை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்.

 

இன்றைக்கு கிழக்கில் ஆயுதக் குழு இல்லை என்கின்ற போதிலும் கொலை, கொள்ளைகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. பாசீச அரசானது தனக்கான அடியாட்களை வளர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான குற்றச் செயல்களை அங்கீகரித்துக் கொண்டே இருக்கும்.


பாசீசத்தின் அடித்தளமே இவ்வாறான குற்றவாளிகளின் மேல் அமைந்து கொள்ளும் ஆட்சிதான். இவைகள் மேல் இருந்து கீழாக அனைத்து பிரிவுகளிலும் ஊழலை வளர்த்துக் கொள்ளும்.

 

இவ்வாறான தொடர்ச்சியான ஆயுதம் தரித்தவர்களின் பழிவாங்கும் நிலையானது வடக்கில் இருப்பதால் சங்கரியும் கிpழக்கில் துரைரெத்தினமும் ஆயுதக் குழுக்களின் அச்சம் பற்றிப் பேசுகின்றனர். அரசோ ஆயுதக் குழுக்கள் இல்லை என்று உறுதியாகக் கூறுகின்றது.


இவ்வாறான ஒரு எதிர்ப்புரட்சிகர குழுக்கூட விடுதலைப்புலிகளில் இருந்து தோன்றக் கூடும் என்ற அச்சத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்புக்கள் ஒவ்வொன்றும் வர்க்கங்களிடையே ஏற்படும் மோதல்களினால் வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புக்கள் ஒவ்வொன்றும் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் இல்லாது செய்தனர் என்பதை புரிந்து கொள்ள மறுத்தனர். பதவிவெறி, குறுங்குழுவாதம் போன்ற காரணம் கூறப்பட்டாலும் இவற்றிற்குப் பின்னால் ஒரு வர்க்க சிந்தனை இருந்து கொண்டுதான் இருக்கும். இதனைக் கவனத்தில் கொள்ளாது முன்னர் எனது நண்பனை கொன்றவர்கள், சகோதாரனை, சொந்தக்காரனைக் கொன்றவனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பழிவாங்கப் புறப்பட்டு அமைப்புக்களின் கொள்கையை, போராட்டத்தின் திசையை மாற்றிக் கொண்டனர்.

 

இனவெறி ஆட்சியாளர்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக கொலைப்படைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படையானது பாசீசத்தைப் பாதுகாக்கும் வேலையை செய்கின்றது. இந்தவேளையில் சிறுபான்மை இனங்களிலும் உள்ள எதிர்ப்புரட்சிகர சக்திகளை பாசீசம் தனக் உதவியாக வைத்துக் கொள்ளும்.

 

கிழக்கில் சுதந்திரக்கட்சியில் சேர்த்துக் கொள்வதற்காக மேன்மை தங்கிய மந்திரி முரளிதரன் அவர்கள் தனது எதிராளிகளுக்கு இருட்டடி கொடுத்தே கட்சியைப் பலப்படுத்துகின்றார். இதனை மேன்மைதங்கிய மந்திரி மேதகு முரளிதரன் அவர்களின் முன்னைய நண்பர்கள் குற்றம் சாட்டுவதையும் இங்கு குறிப்பிடுவது அவசியமானதாகும்.


மட்டு மேயரின் நடத்தை மீது அவதூறு பரப்பினர். இதன் மூலம் ஒரு உளவியல் அழுத்தத்தை பிரயோகித்தனர். இத்துடன் தமது மந்திரி அந்தஸ்து, மற்றும் அரசாங்க கட்சி என்ற ரீதியில் இருந்த செல்வாக்கு என்பன கூட அச்சுறுத்தலாக மாறிவிடுகின்றது.


இனி கடத்தப்படும் குடிமக்களிடம் கப்பம் வாங்குவது, அரசியல் முரண்பட்டவர்களை அச்சுறுத்துவது, இல்லாமல் ஆக்குவது என்று தொல்லைகளை செய்யவே ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தப்படும். முன்னைய இயக்க நபர்களின் சமூக விரோதச் செயல்களை ஆட்சியாளர்கள் அனுமதிப்பார்கள். ஏனெனில் சட்டத்திற்கு முரணான குழுக்களின் இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளின் மூலமாக தமது பாசீச இறுக்கத்தை மக்கள் மேல் திணிப்பதற்கு இவ்வாறான குழுக்களின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். பாசீசத்தின் அடித்தளமே மக்களை பேசாமடந்தைகளாக்குவதாகும். மக்களின் உணர்வுகளை, உரிமைகளை அடக்கிவைத்திருப்பதேயாகும்.

 

By Nathan