நந்திக்கரை தந்த போதனை
புலிகளில் தொடங்கி மார்க்சீயவாதிகள் வரை புதிய அமைப்பு வடிவம் தேவை என்று கருதுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றனர். இதுவரை காலமும் புலிகளின் ஆதரவு நிலை கொண்டு எழுத்துத்துறைகளிலும் இருந்தவர்கள் ‘தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு - சி.இதயச்சந்திரன்’ கருத்துக் கூறுகின்றனர். இவை கூட இயங்கியல் ரீதியாக அணுகப்பட வேண்டியவையாகும்.
மீளாய்வுகள் பலமுனைகளில் இருந்து வருகின்றன. இதில் குறிப்பாக புலிகளில் போராளிகளிடம் இருந்து வரும் மீளாய்வு என்பது வரவேற்கப்பட வேண்டியாதாகும். இவர்கள் தமது பட்டறிவில் இருந்து தம்மை சதிகாரர்கள் ஏமாற்றிவிட்டதாக உணர்கின்றனர். புலிகளின் போராட்டப்பாதையில் சதிகாரர்கள் எவ்வாறு உட்புகுந்தார்கள் என்பதை வெளிக்கொணர்வது கூட இளம் தேசபக்தர்களுக்கு படிப்பினையாக அமைய முடியும். புலிகளின் தலைமை சர்வதேசத்தை தனக்கு இசைவாக பயன்படுத்த எண்ணினர். ஆனால் புலிகளின் பலவீனத்தை வைத்தே அவர்களை அழிக்க முடிந்தது. இவைகள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல. இரத்தத்தால் தோய்ந்த வரலாற்றில் இருந்து பெறப்பட்ட படிப்பினையாகும். இந்தப்படிப்பினைகளை புரட்சிகரபாதையை நோக்கிய பயணத்துக்கான ஓரு படியாக இவர்களை இணைத்துச் செல்லவேண்டிய வரலாற்றுத் தேவையும் உண்டு.
இவர்களின் அரசியல் பார்வையில் புரட்சிகர சிந்தனை இல்லாது இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல.காரணம் புலிகளின் இருந்த அரசியல் வறுமைக்கேற்பவே அதன் போராளிகளும் உருவாக்கம் பெற்றிருப்பார்கள்.இவர்களின் அனுபவம் என்பது பெறுமதிமிக்கதாகும். இவர்களின் அனுபவம் இளம் போராளிகளை சிந்திக்க வைக்கும்.
இவ்வகையான சுயவிமர்சனம் என்பது தற்காலத்து புலித்தலைமைக்கான போராட்டத்தில் ஒரு அம்சமாக இருக்கலாம் அல்லது உண்மையான தேசபக்தர்களாகவும் இருக்கலாம். எவ்வகை சுயவிமர்சனங்கள் இனப்படுகொலையை அம்பலப்படுத்துபவர்கள். இவர்கள் அனைவரையும் தெளிவு படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையும் இருப்பதானால் தொடர்ந்தும் சிலவேளைகளில் ஒரே கருத்தை பலமுறை எழுத வேண்டியிருக்கின்றன. ‘எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.
http://tamilseithekal.blogspot.com/2009/07/blog-post_2333.html தம்மை ஏமாற்றிய சக்திகளை வர்க்க அரசியல் ஊடாகவே புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்;டத்தில் அதனை பார்க்கின்ற போதே எதிரிகள் எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
புலிகளின் வர்க்க நிலைப்பாடு தான் புலிகளின் அரசியல் நடத்தைகளை தீர்மானித்துக் கொண்டது. புலிகளின் வர்க்க நிலையில் அமைந்த அரசியல் போக்கு மக்களுடனான உறவு
சக சிறுபான்மை தேசிய இனங்களின் மீதான பார்வை
நட்பு சக்திகள் பற்றிய பார்வை
சர்வதேச அரசியல் போக்கு
இவைகளே சர்வதேச சதிவலையில் விழ இலகுவாக இருந்தது.
இன்றைய உலகப்போக்கென்பது நிதிமூலதனத்தைக் கொண்டவர்களின் ஆதிக்கம் நிறைந்ததாகும். அதாவது உலகம் என்பது முன்னரை விட சுருங்கியுள்ளது. சுருங்கியுள்ள இன்றைய உலகத்தில் உயர்ந்த குடியைக் கொண்ட ஒரு கூட்டம் வளர்ந்து வந்திருக்கின்றது. இந்தக் உயர்குலக் கூட்டம் உலகின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த வந்திருக்கின்றது. இந்தக் கழகத்தில் பணம் படைத்தவர்களின் நலைனைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய எந்தச் சக்திகளையும் வரவேற்றுக் கொள்ளக் கூடிய தாராள மனம் கொண்ட இந்தக் கழகமானது, நாளாந்தம் வளர்ந்து கொண்டு வருகின்றது. இந்தக் கழகத்தில் சாதாரண மக்களின் அவலத்தைக் கதைப்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் உலகத்தின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் முரண்பாடு (பொருளாதார அமைப்பை சிதைக்காத வண்ணம்) அற்ற வகையில் அந்தக் கழகத்தில் பேசக் கூடிய வல்லமை இருக்குமானால் அவர்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிக்க தகுதி பெற்றவர்களாகின்றனர். இவர்கள் பூகோள ரீதியாக உச்சத்தில் இருப்பவர்கள் இவர்கள் கொடுக்கின்ற பட்டம் நாய்க்கு எலும்புத் துண்டைப் போடுவது போல் ஆகும்.
இந்த எலும்புத் துண்டை காவிக் கொண்டும் பெருமையடித்துக் கொண்டும ;வாழு;வதற்கு உலகில் பல நபர்கள் இருக்கின்றனர். இவர்கள் மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புக் கொள்ளாத நிலையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருக்கின்ற உலக அமைப்பை அங்கீகரிக்கப்பட்ட நிலையை நிரந்தரமான நிலையாகக் கொண்டு இதுவே முடிந்த முடிவான உலகில் அங்கீகரிக்கப்பட்ட போக்காக பிரச்சாரம் செய்வதுடன், இந்த நியதியில் இருந்து கொண்டு உலக நியதிக்கு ஊழியம் செய்வர். மேற்குறிப்பிட்ட உலகின் சிந்தனைப் போக்கை விளக்கிக் கொள்வதன் மூலமாக உலகின் பாகங்களில் நடக்கும் சம்பிரதாய நடப்புக்களை விளங்கிக் கொள்ள முடியும். அந்த உலகப் போக்குத்தான் என்ன?
ஏகாதிபத்தியங்கள் உலகில் பல நிறுவனங்களில் ஆழுமையைப் பயன்படுத்தி உலகை தமது ஆழுமையின் கீழ் கொண்டுள்ளது.
நிதியை வழங்கும் நிறுவனமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை.
வர்த்தகத்தில் தமக்குச் சாதகமாக காப்புரிமை, விலை நிர்ணயம் செய்து கொள்ள உலக வர்த்தக நிறுவனம்.
இராணுவ ரீதியான தேவைக்கென நேட்டோ இராணுவக் கூட்டு
மக்களை திசை திருப்பிக் கொள்ள தன்னார்வக் குழுக்களைக் கொண்டு உதவி நிறுவனங்கள்,
மக்களை திசை திருப்பிக் கொள்ள ஊடகம்.
அமைதிப்படை போன்ற சார்பில் மற்றைய நாடுகள் மீது தலையிடல்
ஒப்பந்தங்களின் மூலமாக ஆயுதங்களை மற்றைய நாடுகள் வைத்துக் கொள்வதில் கட்டுப்பாடு.
எதிர்கால ஆட்சியாளர்களை தீர்மானித்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்து கொண்டு, தமக்கு சார்பான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல்.
இவற்றை புரிந்து கொள்ளாது எவ்விதமான மறுசீரமைப்புச் செய்தாலும் ஒரு அடிகூட முன்னேறமுடியாது.
இன்று சீன,இந்திய,அமெரிக்க முதலாளிவர்க்கக் கழகத்தின் நோக்கம் ஒன்றுதான் தமது சந்தையை விஸ்தரிpப்பது. இந்தச் சந்தைக்கு விடுதலைப்புலிகள் எதிரியாக இருக்கவில்லை. ஆனால் அவர்களுடைய ஆயுதப் போராட்டமே இந்தக் கழகத்திற்கு எதிரியாக இருந்தது. இவர்களின் சுரண்டலை எதிர்ப்பதற்கு மற்றைய நாடுகளில் உள்ளவர்களும் ஆயுதத்தை தூக்குவதற்கு முன்னுதாரணமாக அமைந்து விடும் என்பதும் ஒரு பயமாகும்.
நிதிமூலதனத்தினைக் கொண்ட கழகமானது முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களை உறுதி செய்வதற்கு அப்பால் எவ்விதமான மாற்றங்களையும் கொண்டுவருவதற்கு முயல்வதில்லை. இந்த மாற்றங்கள் தம் முகவர்களான தன்னார்வ நிறுவனங்கள், பிரபல்யமான தனிநபர்கள் (ஒரு டயானா, அன்னைத் திரேசா ) ஊடான செயற்பாடுகளைத் தான் வரவேற்கின்றார்கள். இந்தக் கழகமானது மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவதை அருவருக்கின்றார்கள். இந்தப் போராட்டமுறையை நாகரீகமற்றதாக கருதுகின்றார்கள். இதிலும் ஆயுதத்தை நீங்கள் கையில் வைத்துக் கொண்டால் கேட்கவே தேவையில்லை. உடனே பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிட்டுவிடுவார்கள்.
இந்த இசைவான ‘ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.’ என புதிய புலித்தலைமை பிரகடனப்படுத்துவதே. ஏகாதிபத்திய உலக ஒழுங்கை ஏற்றுக் கொண்டுதான். உலக ஒழுங்கை ஏற்றுக் கொள்வது எவ்வாறு தமிழ் மக்களின் இறைமையைக் காப்பாற்றுவதான அமையும்? ஒரு காலமும் உலக ஒழுங்கை காப்பாற்றுவது தேசிய இறைமையைக் காப்பாற்ற முடியாது. இன்று சர்வதேச சமூகத்துடன் பேசுவோம், இந்தியாவுடன் பேசுவோம் என்பதெல்லாம் தேசியத்தின் இறைமையை விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும்.
நிதிமூலதனக் கழகத்திற்கு இசைவாக வருகின்ற போது தேசிய எல்லைகள், அடையாளங்கள், பண்பாடுகள், மொழிவளர்ச்சி எல்லாம் இழந்துதான் சாத்தியமாகும்.
‘ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.’ இழப்புக்களை இவ்வாறு அங்கீகரிப்பதான உலக ஒழுங்கிற்கு இசைவாகச் சென்ற உள்வீட்டு எதிரிகளை பாதுகாப்பதற்குதான் உதவும். உலக ஒழுங்கை ஏற்றுக் கொள்வதால் உங்கள் மீதான அங்கீகாரம் என்பது நீங்கள் வணங்கிய தலைமைக்கு செய்யும் துரோகம் இல்லையா?
புதிய ஆளும் வர்க்கமானது உலக ஒழுங்கிற்கு இசைவாக நடப்பதாக கூறக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களே புதிய ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை தலைவர் இறந்தது ஒரு வகையில் நல்லது என்று நம்புகின்றது. காரணம் தலைவர் இருந்தால் தமக்கான சந்தையை இலகுவாக (பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியைக் காட்டி) உலகநாடுகளின் பேரங்களுடன் பெற்றுக் கொள்ள முடியாது என்று நம்புகின்றனர். இதனால் தலைவர் இறப்பது இவர்களைப் பொறுத்தது நல்லது. ;
இதேபோல புலியெதிர்ப்பு ஜனநாயகக் குழுக்களும் தம்பங்கிற்கு அரசுடன் சேர்ந்து போவோம், அபிவிருத்தியை மேற்கோள்வோம் என்று தேர்தலிலும், புதிய அமைப்புவடிவங்களிலும் மக்களின் போராட்டத்தை எதிரிக்கு காட்டிக் கொடுத்தும், மக்களிடம் பிளவை ஏற்படுத்தியும் எதிரிக்கு விசுவாசமாக நடந்து கொள்கின்றனர். எதிரியுடன் சேர்ந்து சலுகைகளை ஒரு குழு பெறமுடியுமே அன்றி ஒரு இனம் பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு இனத்திற்கானது சலுகைள் அல்ல உரிமைகள். ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்திற்கு சலுகை கொடுக்க முடியாது. அவ்வாறான சலுகைகளை ஜனநாயகம் என்று கூற முடியாது. ஒரு இனம் இந்த பொருளாதார அமைப்பில் தனது சந்தையை உறுதிப்படுத்துவது அவர்களுக்கான ஜனநாயக உரிமையாகும்;. இங்கு ஒவ்வொரு இனத்தின் சந்தையை உறுதிப்படுத்த ஒரு தேசியம் இனம் தயாராக இல்லை. இதுதான் முதன்மைப் பிரச்சனை அடங்கியிருக்கின்றது.
இற்கு அடுத்தபடியாக அவர்களின் வாழ்வுரிமை மீதே பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தி அவர்களுக்கான அடிப்படை உரிமையை மறுக்கின்றது. இருந்த போதிலும் அரசுடன் கூட்டுணைத்து செயற்படுவதன் மூலமே உரிமையை பெறலாம் என்று கூறியவர்களாலேயே தனது சொந்த மக்களுக்கான எதுவும் செய்ய முடியாத நிலைதான் இருக்கின்றது. இவர்கள் தமது அரசியல் வறுமையின் மூலம் ஏதாவது வாய் சடவால் அடிக்கலாம அன்றி மக்களுக்கான ஒரு நேர்மையான பதிலை இவர்கள் அழிக்க முடியாது.
சிறுபான்மை தேசிய இனத்தின் உரிமைக் குரலைமாத்திரம் அன்றி அதன் குறுந்தேசியவாத்தையும், அதன் பாசீசத்தின் சர்வதேச இராணுவப் ஒத்துழைப்பின் மூலம் முடியடிக்கபட்டுள்ளது. இது மக்கள் எழுச்சியின் மூலமே பாசீசத்தை வெற்றி கொள்ள முடியும், ஒரு அமைப்பில் உள்ள புரட்சிகர சக்திகளின் கையோங்குவதன் மூலம் மாற்றம் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதும் இயல்பானதாகும்;. ஒரு புரட்சிகர மாற்றத்தின் ஊடாக புலிகளின் பாசீசம் அழியவில்லை. ஒரு இனப்படுகொலை ஊடாகவே தமிழ்பாசீசம் இந்த வகையில் தான் இளம் தேசபக்தர்களை பாதுகாப்பதும் அவர்களை வழிநடத்தும் படியான கருத்துக்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த நேர்ந்தது. இருப்பினும் இன்றைய நிலையான எதிர்பாராத வகையில் புதிய மாற்றத்தை அடைந்திருக்கின்றது. இருந்தபோதும் இன்றைக்கு புலிகளின் பின்னால் உள்ள தேசபக்தர்களை புரட்சிகரசக்திகளின் பக்கம் திருப்ப வேண்டிய அணுகுமுறை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
இன்றைய பொருளாதார நலன்களை கொண்ட உலக அரங்கில் புலிகளின் அரசியல் ரீதியாக முடிவுகள் எடுத்து செயற்பட முடியாத சூனிய அறிவைக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். புலித்தலைமையின் சிந்தனை வடிவமே தமது தலைமையை முற்றாக அனாதையாக இறக்க வைத்திருக்கின்றது.
இன்று ஆபத்தாக உள்ளது புதிய உலக ஒழுங்கிற்கமைய நாகரீகமாக பேசவல்லவர்களை உருவாக்கிக் கொள்ளும். இந்தச்சக்திகளின் உருவாக்கம் என்பது நிதிமூலதனத்தைக் கொண்ட கழகங்களின் முகவர்களாக உருவாகிக் கொள்வர். ஆனாலும் மக்களுக்கு எதுவும் கிடைத்து விடப்போவதில்லை. புதிய முகவர்கள் நிதிமூலதனத்தின் ஏவலாளர்களாக செயற்படுவது. இதன் மூலம் புதிய முகவர்களின் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளவும், நிதிமூலதனக் கழகம் போடும் எலும்புத் துண்டை நுகரவும் முடியும்.
ஆனால் மக்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும்????