12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்தியாவின் பணக்கார எம்.பிக்கள்.

நம்மூர் ரித்தீஷ், அழகிரி பற்றிய பதிவு இல்லை இது. தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற அமைப்பு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது.

 2004 தேர்தல்களோடு ஒப்பிடும் போது இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோடீஸ்வர எம்.பிக்கள் 98 சதவிகதம் அதிகரித்திருக்கிறார்கள். அதாவது 2004ல் 154 கோடீஸ்வர எம்.பிக்கள் என்றால் இந்த முறை 304 கோடீஸ்வர எம்.பிக்கள். அதில் 141 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். 58 பேர் பா.ஜ.க உறுப்பினர்கள். சமாஜ்வாதி கட்சியில் 14 பேரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13 பேரும் தி.மு.கவில் 12 பேரும் கோடீஸ்வர எம்.பிக்கள். இடதுசாரி கட்சிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 பேரில் ஒருவர் மட்டும்தான் கோடீஸ்வரர் (அவமானம்!)

இந்த தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் குறைவான சொத்து இருந்த 3437 பேர் போட்டியிட்டார்கள். அதில் 15 பேர் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள். 1லிருந்து 5 மில்லியன் வரை சொத்து கணக்கு காட்டிய போட்டியாளர்கள் 1785. அதில் 116 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 5 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கணக்கு காட்டியவர்களின் வெற்றி வாய்ப்பு 19 சதவிகிதம் கூடியிருக்கிறது.

50 மில்லியன் ரூபாய்க்கும் மேல் கணக்கு காட்டிய 322 பேரில் 106 பேர் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதாவது கோடிகள் ஏற ஏற வெற்றி வாய்ப்புகளும் ஏறும்.

ஒரு ஆறுதலான விஷயம்: இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தவில்லை. மொத்த இந்தியாவிலும் இதுதான் நிலை

http://neerottam.wordpress.com/2009/07/09/இந்தியாவின்-பணக்கார-எம்/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்