பேரலையின் பின்னர் கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளையும், பேச்சுவார்த்தையில் சமபங்காளிகாக ஏற்றுக் கொண்ட போதும், தொலைத்தொடர்பு சாதனங்கள் கிடைத்த போதும், உலக நாடுகளுக்கு பயணம் செய்த போதும் ஏன் கருணா பிரிந்த பின்னர் ஆயுதரீதியாக உங்கள் பழைய உறுப்பினர்களை வேட்டையாடிய பொழுது உங்களுக்கான அங்கீகாரம் என்று கருதினீர்கள்.
அந்த அங்கீகாரம் என்ன ஆயிற்று? இங்கு சர்வதேச ரீதியாக பொருளாதார திட்டத்தில் அமைந்து கொண்ட அரசியல் பின்னால் இருந்திருப்பதை மென்மேலும் மக்களிடமும்;, இளம் தேசபக்தர்களிடமும் மறைக்கின்றீர்கள். இவைகள் தான் மக்கள் நலனுக்கு எதிரானதாகும். ஏன் இவர்கள் அறிவித்துள்ள தேர்தல் கூட தேர்தலில் போட்டியிடும் புலியெதிர்ப்பாளர்கள் ஆசிய மூலதனத்திற்கு அடிமைச் சேவகத்தை மகிந்த மூலமாகச் செய் எனக்கூறுகின்றார்கள்.
புலியெதிர்ப்பாளர்கள் இந்த முரணான உண்மையை மறுக்கின்றதானது. எந்த மக்களைப் பற்றிக் கதைக்கின்றார்களோ அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே அடியோடு மறுக்கின்றனர். புலிகள் ஆட்சிக்கு உட்பட்டது என்பதால் மக்களும் கொல்லப்பட வேண்டுமா? ஒரு அநீதியான நடத்தை இன்னொரு அநீதியான நடத்தை கொண்ட அமைப்பின் இருப்பை தீPPர்மானித்தது. இதனை மூடி ஒரு இனத்தின் மீதான ஒடுக்குமுறையை மேற்கொள்பவன் மீதான அழுத்தம் கொடுக்காது எதிரியை பிழையாக வரையறை செய்து கொண்டு ஒடுக்குமுறைக்கு துணைபோகின்றனர். புலியெதிர்ப்பும் சோசலிச நாடுகளும்?? முதலில் படுகொலை நடைபெற்றதா இல்லையா என்பதுதான் பிரச்சனை. ஒரு நாட்டின் ஆட்சியாளர்களையோ இல்லை ஒரு அமைப்பையோ அதன் கொள்கையைக் காட்டி படுகொலைசெய்வதை நியாயப்படுத்த முடியாது.
புலிகளின் தலைமைக்கு வெளியாரின் தலையீடு வரும் என்று நம்பிக்கை ஊட்டி உங்கள் தலைவரை நந்திக்கரைவரை கொண்டுவந்து கொல்லக்கொடுத்தவர்கள். இவர்களை நம்பி பின்னால் போகும் பெரும் மக்கள் கூட்டத்திற்கு இதனை அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது.
புலியெதிர்ப்பாளர்களோ புலிகளை விமர்சிக்கின்ற அளவிற்கு அரசின் பாசீசத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லை. அரசை எதிர்க்க வல்லமை அற்ற நிலையில் அரசியல் வறுமை கொண்டவர்களாக புலியெதிர்ப்பாளர்கள் இனவெறி அரசிற்கு வக்காளத்து வாங்குகின்றனர்.
இன்று அரச ஆதரிப்பவர்கள் புலிகளின் பாசீசத்தை மாத்திரம் எதிர்க்கவில்லை. அவர்கள் இன்று அழிக்கப்பட்ட பின்னரும் புலி என்ற ஒரு உறுப்பினரையும் கூட தப்பிக்க விடக் கூடாது என்ற பழியுணர்ச்சிக்கு உட்பட்டே புலியெதிர்ப்பு வாதிகளின் எழுத்துக்கள் இருக்கின்றனர். இவர்களின் எழுத்துக்கள் அரசியல் உள்ளடக்கம் ஏன் அரசு சார் எழுத்து என்ற நிலைக்கு அப்பால் சென்று பழியுணர்ச்சியே மேலேங்கி உள்ளதை இவர்களின் எழுத்துக்களில் பார்க்க முடியும். இதில் இருந்தே எந்தக் காரியத்தையும் அரசுடன் கூட்டுச் சேர்ந்து பெறும்படி கோருகின்றனர்.
அடுத்ததாக இனகுரோதமற்ற ஒரு சமூகத்தை படைப்பதாக இருந்தாலும் இனங்களுக்கான ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே பெற முடியும் என்ற அணுகுமுறையைக் கூட புலியெதிர்ப்புக் குழுவினர்களிடையே காணமுடியாது.
புலியெதிர்ப்பாளர்கள் என்ன சொல்கின்றார்கள்?
தமிழ்மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தவில்லை. உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் புலியெதிர்ப்பு வாதிகளி;டம் இல்லை. இன்றைய பொழுதில் இவர்களிடம் இருக்கும் நம்பிக்கை என்பது மகிந்த சகோதரர்கள் எல்லாம் செய்து முடிப்பர்.
சிங்கள பௌத்த மதவாத சக்திகளின் அழுத்தத்திற்கு மகிந்தா அன் கோ இடம் அளிப்பார்களா இல்லையா என்ற பிரச்சனை
அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது பற்றியதான பிரச்சனை
சகோதரர்களின் எதிர்கால அரசியல் பற்றிய பிரச்சனை
இவற்றோடு தமது பதவிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்ற பிரச்சனையும் இன்றைய ஜனநாயக மறுப்பும்
இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் கூட தமிழ் மக்களிடம் நம்பிக்கையை பெறும்படியான எந்தவகை நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?.
திறந்தவெளிச் சிறைவாழ்க்கை
யுத்தத்தில் அகப்பட்ட மனஅழுத்தம்
உறவுகள் ஒவ்வொன்றும் சிதறியிருக்கின்றனர். இவர்களின் பிரிவு
காணாமல் போன உறவுகள் பற்றிய செய்திகள்
நோய்நொடி
புறஉலகிடனான தொடர்புகள்
சுகாதாரப்பிச்சனை
கைது செய்யப்பட்டுள்ள போராளின் பாதுகாப்பு போன்ற விடயங்கள்
இவ்வகையான பிரச்சனைகள் இருக்கின்றன இவைகளை தீர்ப்பது பற்றியதான முழுமையான ~முயற்சிகள் இல்லை. இவ்வகையான பிரச்சனையைப் பற்றி பேசீனால் ஆணவமான பதில்தான் கிடைக்கின்றது. இதற்கு உதாரணமாக மக்கள் பசியால் செத்தால் ஐ.நா தான் பொறுப்பு என்று பொறுப்பற்ற முறையில் அகதிகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சார் கூறினார்.
சுதந்திரத்தை மறுதலித்தே தேர்தல் நடைபெறுகின்றது. தமிழ் உதிரிக்குழுக்கள் அரசாங்க கட்சியைப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. இங்கு அவர்களின் தெரிவுச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இவர்களின் தெரிவுச் சுதந்திரத்திற்காக போராட
வேண்டியது கூட உண்மையான ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
இருந்த போதிலும் அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க திராணியற்கு வெறும் செய்தியாகவே எழுதிக் கொள்வதுடன் விட்டுவிடுகின்றனர். ஜனநாயக மறுப்பை (உதாரணத்திற்கு மாற்று அமைப்புக்களான ஜ.த.தே.கூ போன்றவற்றில் இருந்து கூட அரசாங்கத்தின் அழுத்தத்தை எதிர்த்துக் கருத்துக் கூற முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
தேர்தலில் பங்குபற்றுதல், பேச்சு, எழுத்து என்ற அடிப்படை சுதந்திரம் பறிபோகின்றதைப் பற்றி போராட வேண்டாம் கருத்துக் கூற முடியாத நிலையில் மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்கின்ற புலியெதிர்ப்பு அணி இருக்கின்றது. எதிரிக்கு கூட ஜனநாயக உரிமை வழங்க வேண்டும். அதுவேதான் சரியான நிலைப்பாடு
இவர்களின் போக்கு நவீனப்புலிகளின் போக்கிற்கு மாற்றான எந்த புதிய சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.
புலியெதிர்ப்பாளர்களுக்கும் நவீனப்புலிகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில்
அடக்குமுறையாளர்களின் காலைப்பிடி என்பதாகும்.
புலியே மேற்கு ஏகாதிபத்தியத்தை நம்பு என்று உபதேசிக்கின்றார்கள். இவர்களிடம் மக்கள் தேசிய இறைமையைப் பாதுகாக்கின்ற உணர்வு இவர்களிடம் இல்லாததை மீளவும் காட்டுகின்றனர்.
புலியெதிர்ப்பாளர்களில் பலவகையினர் இருக்கின்றனர் நேரிடையாகவே மகிந்தவிற்கு சோரம் போனவர்கள். இந்திய தரகுமுதலாளிய அதிகாரவர்க்கத்திற்கு சோரம் போனவர்கள் இந்த சிறுமாற்றமே தேர்தல் களத்தில் கூட வௌ;வேறாக சந்திக்கும் நிலை காணப்படுகின்றது. மாறாக ஜனநாயக விழுமியங்களை சங்கரி, சித்தா, சிறீதர் அன்கோவிற்கு வழங்கவில்லை.
சங்கரி, சித்தா, சிறீதர் போன்றவர்கள் தன்னும் முதலாளித்தவ ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காக முயற்சியில் இவர்களால் இயங்கவே முடியாது. இவர்களின் கடிவாளம் கூட இந்திய அதிகார வர்க்கத்திடம் உள்ளது.
// மக்களுக்காகப் போராடும்நோக்கம் உள்ள யாரிடமும், எந்த அமைப்பிடமும் முதலில் சித்தத் தெளிவு இருக்கும். எது நடக்கும் எது நடக்காது? எது சாத்தியம் எது சாத்தியமாகாது என்பது தொடர்பான நல்ல விளக்கம் இருக்கும். உரிமைகள் என்றால் என்ன என்கிற விளக்கம் இல்லாமல் உரிமைப்போராட்டமும்இ உணர்வு எனும் பெயரில் பிரிவினை வாதமும் எந்த அளவு மக்கள் மேம்பாட்டுக்குத் தேவை என்பது தொடர்பான தொலை நோக்குடனான திட்டங்கள் இருக்கும். // -Theene.com இவ்வாறு புலிகளின் அழிவு பின்னர் உபதேசிக்கின்றனர். இவைகள் கூட போராட்டத்தை முற்போக்குச் சிந்தனையின் படி தொடர்ச்சியாக வழிநடத்தப்பட வேண்டும் என்ற நிலைகளில் இருந்து கருத்துச் சொல்வதான இல்லை. இவ்வாறான செய்திகள் கூட ஒரு சமூகத்தின் சிந்தனையை மலடாக்கும் பழைய புலியிச எச்சமாக மகிந்தாவின் பாசீசத்திற்கு துணைபோகும் எழுத்துவடிவமாகும்.
நமது சமூகத்தின் அமைதியின்மை வாழ்வுக்கும் சீரழிவுக்கும் தற்போது எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களுமே பிரதான பொறுப்பு ஏற்றக வேண்டும். இனமுரண்பாடு தான் புலிகளின் இருப்பை உறுதி செய்திருந்தது. புலிகளின் தலைமை என்பது வேறு மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது வேறு.
புலிகளின் அழிப்பின் பின்னர் ஐ.நா மன்றத்தில் சீனா, கிய+பா, வியட்நாம் போன்ற நாடுகள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததை சோசலிச நிலைப்பாடு என கூறிக் கொள்கின்றனர். இந்த நாடுகள் சோசலிச நாடா இல்லையா என்பதற்கு அப்பால் இவர்களின் வாக்களிப்பாது பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதத்திற்கு உட்பட்டதல்ல. ஒரு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் கொண்டு ஐ.நாவில் எந்த நாடுகளும் செயற்படுவதில்லை. இந்த ஐ.நா மன்றம் கூட உலகமயமாதலை விரைவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதே
புலிகளின் தவறான கொள்கைக்காக மக்கள் தண்டிக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?
நடைபெற்றது இனவழிப்பே. ஒரு இனத்தின் ஒரு பகுதியை அழித்தே எதிராளியை சிறிலங்கா அரசால் அழிக்க முடிந்தது. இங்கு இறந்த மக்கள் ஏன் பட்டியலுக்கு வரவில்லை?
ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் அல்லது ஒரு அமைப்பின் தவறான கொள்கைகள் அந்த நாட்டு மக்களின் இறைமைக்கு உட்பட்டதாகும். அந்த மக்களின் இறைமையை பயன்படுத்தியே தவறான கொள்கை கொண்டவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படலாம். இவைகள் ஒரு மக்கள் திரள் போராட்டத்தினால் நடைபெறக் வேண்டியதாகும். மக்களை அணைத்து போராடத் தயாராக இல்லாதவர்கள் எதிரிகளின் துணைகொண்டு குறுக்குவழிகளில் தமது இலக்கை அடைகின்றனர். இவர்கள் தம்மை வல்லமை பொருந்திய சக்திகளுக்கு விற்றே ஆதிக்க சக்திகளுக்கு விசுவாசிகளாக உருவாகின்றனர். இவ்வாறே ஈராக்கில் நாடுகடந்த பாராளுமன்றமும் சரி புலியெதிர்ப்பாளர்களும் சரி எதிரியுடன் இணைந்து கொண்டு சொந்த மக்களுக்கே துரோகமிழைத்தனர்.
ஒரு மக்கள் கூட்டத்தின் இருப்பை உறுதி செய்யாது 180 நாட்களில் வசந்தம் வருவதாக பிரச்சாரமும், வெளிநாட்டுப் பயணங்களும், சிறுபான்மையினர் இல்லை (ஏகபிரதிநிதிபோல) தேசப்பற்றுள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பிரிவினரே உள்ளது என்றும் எல்லா சிறுகட்சிகளையும் வெற்றிலைக்குள் மடிப்பதிலும், வெறும் வெற்று அறிக்கைகளையுமோ தமிழ்மக்களுக்கு எஞ்சியிருக்கின்றது. இதற்கு துணையாக அரச கூலிகளாக இருப்பவர்கள் செயற்படுகின்றார்கள்.