08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றான்

இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.

தங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர். 

     

இப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, "புதுவிசை" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.

 

இதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன?" இந்தக் கேள்வியில் என்ன தவறு? மக்களை ஏமாற்றி பிழைக்கும் ஆதவன் தீட்சண்யா போன்ற மானுட விரோத கூத்தாடிகளுக்கு இதனால் கோபம் வருகின்றது. தங்கள் சொந்தமுகம் இப்படி அருவருப்பாக இருப்பது கண்டு, குமுறி எழுகின்றார். நெற்றிக்கண்ணை திறந்து, ஈழத்தமிழனை தமிழ்நதிக்கு ஊடாக புலியாக காட்டி காறி உமிழ்கின்றார்.

 

அந்த மானுட விரோதி அம்பலமாக, அவர்களின் தயவில் பெயரையும் புகழையும் இலக்கிய உலகில் மிதப்பாக்கி பதியும் சோபாசக்தி, அவரைக் காப்பாற்ற தமிழ்நதியை தன்பாணியில் இழிவாடுகின்றார். அத்துடன் பெண்கள் சந்திப்பு, தமிழ்நதி, தமிழச்சி என்று, இதற்குள் பழைய கறள்களையும் சேர்த்து  தீர்க்க முனைகின்றார். என்ன அரசியல் கூட்டுகள்.

 

புலிகள் வேறு, தமிழ்மக்கள் வேறு என்பதைக் கூட காணமுடியாத, காணமறுக்கின்ற ஆதவன் தீட்சண்யாவின் அறிவு சார்ந்த புலமையும், மானிட விரோதமும் கூடிநிற்கின்து. தமிழ்நதி தமிழ் தேசியத்தை புலிக்கூடாக பார்த்தார், பார்க்கின்றார் என்றால், ஆதவன் தீட்சண்யா என்ன செய்கின்றார். அவரும் அதை அதனூடாகக் காட்டி, தமிழ்மக்கள் மேல் காறி உமிழ்கின்றார். இவர்கள் எல்லாம் தங்களை சர்வதேசவாதிகள் என்ற வேறு வேஷம். தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையை, புலியூடாக நியாயப்படுத்துகின்றார்.

 

இங்கு இப்படி இதை புலிக்கு எதிராகவும் ஆதரவாகவும் நின்று நியாயப்படுத்தும் அரசியல் மூலம், தமிழ்மக்கள் மேல் ஏறி கூத்தாடுகின்றனர்.

 

தமிழ்நதி தமிழ்த்தேசியத்தை புலியிசத்தின் ஊடாக பார்ப்பவர் என்ற வகையில், வலதுசாரிய கண்ணோட்டம் கொண்டவர். இந்த வகையில் அவரின் சிந்தனைமுறை தனிமனித நலன் சார்ந்தது. இதில் இருந்து அவர் வெளிவர பட்டறிவும், வாழ்வின் அனுபவமும் தேவை. இந்த எல்லையில் வைத்துதான், அவரை அணுக வேண்டும். அவரின் கருத்தை விமர்சிக்க வேண்டும். அவரின் சமூகம் பற்றிய பார்வை குறுகியது. அதுவோ சின்ன வட்டம்.

 

அதில் உள்ள அறியாமையுடன் கூடிய நேர்மையும், ஓர்மமும் உண்டு. அவர் பெரிய மேதாவி எழுத்தாளராக பவுசு விட்டுத் திரியும் கூட்டத்தைப் பார்த்து, கேள்வி எழுப்புகின்றார். இதற்கு மானுட விரோதிகளால், பதில் சொல்ல முடிவதில்லை. இதுதானே இதில் உள்ள அடிப்படை உண்மை. அந்த மக்களுக்காக இந்த எழுத்தாளப் பொறுக்கிகள், குரல் கொடுத்தது கிடையாது. இதுதான் உண்மை. நீங்கள் கேட்கலாம் புதுவிசை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ன செய்தது என்று? சிலரை பிரபல்யமாக்க, தனக்குத்தானே அது முதுகு சொறிந்தது. புலியெதிர்ப்பு பேசும் ஏகாதிபத்திய தன்னார்வ சுசீந்திரனுக்கு பாய்விரித்தது. தாங்கள் என்ன செய்தோம் என்று இந்த மானுட விரோதி ஆதவன் தீட்சண்யா அழகாக கூறுகின்றார்.  "இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இப்படி இலங்கை விடையத்தில் எதிர்ப்புரட்சியை கட்டவிழ்த்தவர்கள் இந்த முதுகுசொறியும் கும்பல். "சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக" உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று, இலண்டனில் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பேசிய சோபாசக்தி, மண்ணில் நடந்த தொடர்ச்சியான மனித அவலம் மீதும் கள்ள மௌனத்தையே பதிலளித்தவர். அவரின் கூட்டாளிகள் எல்லாம் மனிதன் மேலான ஒடுக்குமுறையை ஆதரித்து நிற்கின்ற போது, மௌனம் மூலம் நட்பை தக்கவைக்கின்றார். இவர்கள் பிரபலமான சஞ்சிகை மூலம், திடீர் பேட்டி கொடுத்த சமாளிப்பதில் விண்ணாதி விண்ணர்கள். இப்படித்தான், இந்த பச்சோந்திகள் அரசியல் செய்கின்றனர். இவர்களின் கூட்டாளிதான், ஆதவன் தீட்சண்யா. இதனுடன் ஒப்பிடும் போது  தமிழ்நதியின் புலியிசம் வலுக்குறைந்தது.        

 

உண்மையில் தமிழ்நதியின் வலதுசாரிய தனிமனித சமூகக் கண்ணோட்டம் ஊடாக விடையங்களை தவறாக பார்ப்பது என்பது, அந்தத் தத்துவத்தினால் ஏற்படுவதுதான். ஆனால் ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் மார்க்சியம் பேசுபவர்கள் என்றால், அவர்கள் சமூக கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதையும் சமூகம் ஊடாகவே பார்க்க வேண்டும். சர்வதேசியவாதியாக இருக்கவேண்டும். அப்படியா இருக்கின்றனர்? இல்லை. 

 

இங்கு தமிழ்நதியின் கேள்வி மூலமும், இவர்கள் போலி மார்க்சியம் பேசும் சமூக விரோதிகள் என்பதையே மீண்டும் அம்பலப்படுத்துகின்றது. சமூக கண்ணோட்டத்துக்கு பதில், சமூக விரோத கண்ணோட்டத்தை சமூகம் மீது திணிக்க முனைகின்றனர்.

 

இந்த இடத்தில் ஆதவன் தீட்சண்யா மானுட விரோதி, உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. புலிக்கூடாக தமிழ்மக்களை தீட்டித் தீர்க்கின்றார். ஈழத்து தலித்துகள், மலையகமக்கள், முஸ்லீம் மக்கள் மேல் புலியிசம் அக்கறை கொள்ளவில்லை அல்லது தாக்கியது என்பதால், தமிழ்த்தேசியம் தவறானதல்ல. இது புலியிசத்தின் தவறு. புலியிசம் வேறு, தமிழ்தேசியம் வேறு என்பதை மறுத்து, ஆதவன் தீட்சண்யா போன்றோர் தமிழ்மக்களுக்கு எதிராக குதறுகின்றனர். தமிழ்மக்களுக்காக, இதைப் பற்றி தமிழ் மக்களுடன் என்றும் பேசவில்லை. இப்படிப்பட்ட நீங்கள், இன்று புலியெதி;ர்ப்பு அரசியலுடன் இதைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது. புலிப்பாசிசம் பற்றி, சரியான தமிழ்தேசியம் பற்றியும், சர்வதேசிய கண்ணோட்டத்துடன் மக்களுக்காக தமிழ்நாட்டில் பேசப்பட்டு இருக்கின்றது. ஆனால் நீங்களல்ல. நீங்கள் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தீர்கள்.

 

மார்க்சிய அடிப்படையில் தமிழ்; மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக எங்கே குரல் கொடுத்தீர்கள். இதை முன்னெடுப்பவர்களின் அரசியல் தவறுகள் மேல், ஒரு   சர்வதேசியத்தை கையாண்;டது கிடையாது. இவரின் எழுத்து, இவரின் செயலாளராக இருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இவரின் கட்சி, தமிழ்மக்களின் சுயநிர்ணயத்துக்காக லெனினிய வழியைக் கையாண்டது கிடையாது. இந்த வகையில் தமிழ்மக்களை ஒடுக்க துணை நின்றவர்கள். இதை இன்று புலியின் பெயரால் சொல்லி நியாயப்படுத்துகின்றனர்.

 

இலங்கை விவகாரத்தில் மட்டும் இவர்கள் இப்படியிருக்கவில்லை. தங்கள் சொந்த நாட்டில், சொந்தப் புரட்சியை குழிபறிக்கும் அரசியலைக் கொண்டவர்கள். இவர் இருக்கும் கட்சி, இந்திய ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் ஒரு பாசிசக் கட்சி. மேற்குவங்கம் முதல் இந்தியா முழுக்க, இந்தக் கட்சி மூலதனத்துக்கு சேவை செய்கின்றது. புலி வலதுசாரிய பாசிசத்தை, அதன் வலதுசாரி அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்;. இந்தியாவில் இவர்கள் நடத்தும் மேற்குவங்க பாசிச ஆட்சி முதல் ஆட்சியில்லாத இடத்தில் ரவுடியிசத்தையே கட்சிக் கொள்கையாக கொண்டது இந்தக் கட்சி. ஆனால் இதை மார்க்சியத்தின் பெயரில் செய்கின்றனர். கட்சி வேட்பாளர்களின் சொத்துகளின் பெறுமதி முதல் கட்சியின் கோடிக்கணக்கான சொத்துக்கள், அதை பெருக்கும் வழி அனைத்தும் இதுவொரு மக்கள் விரோதக் கட்சியின் ஒரு கொள்கையாக, செயல்முறையாக இருப்பதைக் காணமுடியும். இந்த கட்சியில் உள்ள பார்ப்பனிய நடைமுறைகள், சாதியமும் ஊர் உலகம் சிரிக்கும் வண்ணம் அம்மணமாகவுள்ளது.

 

இப்படிப்பட்ட இவர்கள் சொந்த ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கே குழிபறிக்கும் போது, ஈழத்து மக்களுக்காக குரல்கொடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள் தனம். ஈழத்து விடையத்தில் தங்கள் சொந்த மக்கள் விரோதத்தை மூடிமறைக்க, புலியைக் காட்டி புலுடா விடுகின்றனர். புலியிருக்கட்டும் நீ என்ன செய்தாய்? அந்த மக்களுக்காக உன் கட்சி என்ன செய்தது. பச்சை இனவாதம் கக்கும் ஜேவிபியுடன் கூடி, தமிழ் மக்களை ஒடுக்க துணை நின்றவர்கள் நீங்கள்.

 

தங்கள் மக்கள் விரோத நிலையையும், சர்வதேசியமல்லாத நிலையையும் தக்கவைக்க, புலியின் மனிதவிரோத செயலை புலியெதிர்ப்பு கும்பலிடம் இரவல் வாங்கி, அதை தமிழ் மக்களுக்கு எதிராக காட்ட முனைகின்றனர்.

 

இப்படி இதில் இரண்டு மக்கள் விரோத விடையங்களை கையாளுகின்றார்.

 

1. புலியெதிர்ப்பு நிலையில் நின்று தமிழ்மக்களை எதிர்க்கின்றார்.

 

2. புலியெதிர்ப்பு அல்லாத, புலியையும் புலியெதிர்ப்பையும் எதிர்க்கும் புரட்சிகர மக்கள் நிலையை மறுதலிக்கின்றார்.

 

ஒரு சர்வதேசியவாதியாக காட்டிக்கொள்ள மார்க்சியத்தைக் கையாளும் ஒரு மானுட விரோதியால் மட்டும்தான், இப்படி இதை அணுகமுடியும்;. அறிவற்ற பகட்டுத்தனத்துடன், ஒரு மானுட விரோதியாகவே புலம்புவதைப் பாருங்கள்.

 

"இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது" என்று கூறும் ஆதவன் தீட்சண்யா, அந்த "ஒரு மனத்தடை" தான் என்ன? மானுட விரோதம் தான். மானுடத்தை குழிதோண்டிப் புதைக்க, மார்க்சியத்தை பயன்படுத்தும் வக்கிரமான சுரண்டும் வர்க்க நரிப் புத்திதான், தடையின் அடிப்படையாகும். இப்படி தங்கள் மானுட மறுப்பை தக்கவைக்க, புலியெதிர்ப்பு அடிப்படையில்  அதை அள்ளி மானுடம் மீது வீசுகின்றார் பாருங்கள்.

 

"இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்?" "இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?" "தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து  500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?" "தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?" "பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்?" 

 

இப்படி கேட்கும் நீங்கள், இவற்றை அடிப்படையாக கொண்டு சர்வதேசியவாதியாக எங்கே போராடியிருக்கின்றீர்கள். "ஒரு மனத்தடை" என்று கூறி, இதைச்செய்யாத நீங்கள், இன்று இதை அள்ளியெறிவதோ வெறும் புலியெதிர்ப்பு. புலத்து இலக்கியப் பன்னாடைகள் மக்களுக்காக அரசியலை வைத்தது கிடையாது. அதையே அள்ளி மீள எறியும் ஆதவன் தீட்சண்யா, அரசியலற்ற புலியெதிர்ப்பு ஊடாக தங்கள் மானுட விரோதத்தை மூடிமறைக்க முனைகின்றார்.

 

கடந்தகாலத்தில் ஒரு சர்வதேசியத்தை எங்கே எப்படி எந்த அரசியல் அடிப்படையில் கட்டியிருக்கின்றீர்கள். அப்படி ஈழத்தில் குரல் கொடுத்தவர்களுடன் எந்த சர்வதேசியத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். ஏகாதிபத்திய தன்னார்வ பணத்தை நக்கவே அரசியல் பேசும் சுசீந்திரனுடனும் கூடி அரசியல் லூட்டி.

(1. நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன? 

 2.புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும் )

 பேரினவாதம் வென்று தன் பாசிச செருக்கை நிலைநாட்ட பாடிய சிங்கள தேசியகீதத்தை பாடும் நக்குண்ணி சுகனும், அவரின் கூட்டாளியாக கூடித் திரியும் எந்த மக்கள் கருத்துமற்ற சோபாசக்தி உங்கள் கோழையாக்கள்.  தலித்தியத்தின் பெயரில், இவர்களும் சேர்ந்து கூத்தாடும் பேரினவாதத்தை ஆதரிக்கும்  தலித்துகள், உங்கள் தலித் அரசியல் கூட்டாளிகள். இப்படி சிங்கள அரசுடன் சேர்ந்து கும்மியடிக்கும் புலத்து தலித்துக்களையும் சார்ந்து, புலியெதிர்ப்பு லூட்டி அடிப்பதே ஆதவன் தீட்சண்யாவின் சர்வதேசியம்.

 

இப்படி புலத்தில் மாற்றுகள் என்று கூறிக்கொண்டு மகிந்தாவுக்கு குடை பிடிக்கும் பன்னாடைகள், தங்களைப் போர்த்திக் கொள்ள தலித்துகள் பெயரால் கடைவிரித்தனர். இதைத்தான் இந்தியாவிலும் தலித்தியத்தின் பெயரால் பலர் செய்தனர். இப்படி ஆதவன் தீட்சண்யா இலண்டனில் கலந்து கூத்தாட, தலித்தியம் உதவியது. இந்தியாவில் இவரும் இவரின் கட்சியும் தலித்துக்கு எதிரானது. தலித் பெயரால் பிழைத்த கூட்டமும், அதன் பெயரால் ஆதவன் தீட்சண்யா பிழைக்க, புலத்தில் அதன் பெயரில் பேரினவாதத்துக்கு நக்கும் கூட்டமும் ஒன்றாகக் கூடித்தான் சலசலத்தது, சலசலக்கின்றது.

 

ஆனால் மானிடத்துக்கு எதிராக புலிகள் மற்றும் அரசு இழைத்த கொடுமைகளுக்;கு எதிரான போராட்டம், இதற்கு வெளியில் நடந்தது. எத்தனை நூறு குரல்கள். 1980 களில் தொடங்கி பத்தாண்டுகளில் கொல்லப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இதற்காகத்தான் கொல்லப்பட்டனர். உள் இயக்க படுகொலை முதல் எத்தனை பல நூறு சம்பவங்கள். இதற்குப் பின்பும், இதற்கான போராட்டம் நடந்தது. இந்த மானுட விடையத்துக்காக, நாங்கள் நடத்திய போராட்டம் தனித்துவமானது. சர்வதேசியத் தன்மைகொண்டது. இதை மூடிமறைக்கும் மானுட விரோதியாக ஆதவன் தீட்சண்யா இருப்பதால் தான், இப்படி இதைப் பற்றிய எதுவும் நடக்காத  மாதிரி கேட்க முடிகின்றது.

 

"இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்?" "இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?" "தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து  500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?" "தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?" "பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்?" 

 

இதற்கான போராட்டம் தியாகத்தின் மேலானது. பலர் நூறு பேர் தம் உயிர்களை இழந்தனர். இதை மூடிமறைப்பதற்கு எதிரான போராட்டம், இன்று எம்முடன் தான் எஞ்சிக்கிடக்கின்றது. இதற்கான போராட்டத்தை நாம் மட்டும்தான் முன்னெடுக்கின்றோம். இதற்காக நாங்கள் மட்டும் தொடர்ச்சியாக கொடுத்த குரல்கள் எதார்த்தமானவை. சமகால நிகழ்வுகள் மீது ஒரு சர்வதேசியவாதிகள் எதைச்செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் மட்டும் செய்துள்ளோம்;. அவை எதுவும் இல்லை என்று சொல்லுகின்ற மானுட விரோதியான ஆதவன் தீட்சண்யா, புலியெதிர்ப்பின் ஊடாக உலகத்தை பார்க்கவும் காட்டவும் முனைகின்றார். எதிர்ப்புரட்சியை இப்படி ஒரு இனத்தின் ஆன்மாவாக்க முனைகின்றனர் மானிட விரோதிகள்.    

  

பி.இரயாகரன்
07.05.2009

 

 


பி.இரயாகரன் - சமர்