அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில், இந்திய எம்.பி.,க்களுக்கு சிறப்பு வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய – அமெரிக்க எம்.பி.,க்கள் அமைப்பு சார்பில், எம்.பி.,க்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கும் திட்டம் 2007-ல் ஆரம்பித்தது.

 இந்த முறை சில எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் வகுப்பு துவங்கியது. நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள் உரை யாற்றுவர். இந்த விசேஷ வகுப்புகளை முடித்துக் கொண்டு, வாஷிங்டன் நகருக்கு எம்.பி.,க்கள் செல்கின்றனர். அங்கு, அமெரிக்க செனட் எம்.பி.,க்களுடன் உரையாற்றுவர். வெளியுறவு விஷயங்கள் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்வர்கள். (தினமலர், 22/06/2009)

உலகிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் கூடிய முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களை உருவாக்குவது இந்தியாவின் ஐஐஎம்(IIM). இங்கு படித்து முடிப்பவர்களை மாதம் 10-20 லட்சங்கள் கொடுத்து, பன்னாட்டு கம்பெனிகள் கொத்தி செல்கின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது இந்திய எம்.பி.,க்களுக்கு பயிற்சி கொடுக்க முடியாதா? அல்லது இந்த திறமைகள் இல்லாதவர்கள் ஏன் எம்.பி. தேர்தலுக்கு நிற்க வேண்டும்?

இந்த பயிற்சியின் நோக்கம் என்ன?

எப்படி அமெரிக்கனின் மூளை மன்மோகன் சிங் என்ற உருவம் மூலம் இந்தியாவை அமெரிக்காவின் காலடியில் அடிமையாக மாற்றி உள்ளதோ, அதே போல் இங்கு உள்ள எம். பி. களின் மூளையும் முற்றிலும் அமெரிக்காவின் அருவடியாக மாற்றுவது தான் ஒரே நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படி பயிற்சி பெறும் எம். பி. கள் சுயமாக சிந்திப்பார்களா? இந்திய நாட்டிக்கு சேவை செய்யத்தான் அமெரிக்க பயிற்சி கொடுக்கிறதா? கந்து வட்டிக்காரன் அடுத்தவன் நலனுக்காக வட்டிக்கு விடுவான்?

என்னனென்ன பயிற்சி அளிக்கப்படுகிறது?

இந்தியாவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு பட்டா போட்டு விற்பதற்கு, மக்களை எப்படி பொய்யான தகவலை சொல்லி ஏமாத்தலாம் என்பதற்கு தலைமை பண்பு, மேலாண்மை திறன், பொருளாதார பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவை, அமெரிக்காவின் மிகச்சிறந்த அடிமை சேவகனாக பணிபுரிய வெளியுறவு விவகார பயிற்சி & அமெரிக்க எம். பி களுடன் உரையாற்றும் திருவிழா நடத்தப்படும். இப்போது சொல்லுங்கள், இந்தியாவின் இறையாண்மை எங்கே?

நவீன கால பொருளாதார அடியாட்கள்:

இதுவரை, அமெரிக்கர்கள் தான் இந்த பொருளாதார அடியாள் வேலையை செய்து வந்தனர். (ஆதாரம்: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ்). இந்தியா வல்லரசு ஆகப் போகிறது என்ற கட்டு கதையை விட்டு, மீளமுடியாத கடன் வலையில் சிக்கவைத்தனர். அதன்பின், அவன் சொன்னபடி சட்டங்களை மாற்றி, இந்தியாவை அமெரிக்காவின் வேட்டைக் காடாக்கி விட்டான். ஆனால், இப்பொது இந்தியாவின் தர்மகாத்தாக்கள் என்று சொல்லிகொள்கிற ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு அமெரிக்காவின் அடியாட்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இனிமேல், ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளே அமெரிக்கவின் அருவருடி வேலையையும், அடியாள் வேலையையும் செய்வார்கள்.

இந்திய தரகுமுதலாளிகளின் லாபம் என்ன?

இப்பயிற்சி, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு & இந்திய – அமெரிக்க எம். பி. க்கள் அமைப்பு சார்பில் தான் அளிக்கப்படுகிறது. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு டாடா, பிர்லா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் நலனை அடிப்படையாக கொண்டது. ஆகையால், இந்த பயிற்சி எப்படி இந்தியாவை அமெரிக்கவுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பது என்பதற்காவே இருக்க முடியும். இதை தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

இது எங்கே போய்முடியும்?

இனிவரும் எதிர்காலத்தில் மன்மோகன் சிங் & மற்ற ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் பின்வருமாறு கூட சொல்லலாம். “இந்தியர்களுக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை. ஆகையால், அமெரிக்கவின் பிரதிநிதி ஒருத்தன் டெல்லியில் வந்து உட்கார்ந்து கொண்டு நாட்டை ஆளுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பான். அவனின் அசைவின்றி எதுவும் நடக்காது”. இப்படி நடக்காது என்று நினைக்கிர்களா? எப்படி இந்திய எம். பி. களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறதோ, அப்படியே போகப்போக அமெரிக்கன் இந்தியாவை ஆளுவதற்கு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் நாட்டை விற்க துணிய மாட்டார்களா?

நம்முன் உள்ள கேள்விகள்:

1) அமெரிக்க எம். பி. க்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முடியுமா? அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? (ஏற்கனவே, அமெரிக்காவின் அழுகி நாறும் முதலாளிதுவ பொருளாதாரத்தால்,  அமெரிக்க மக்கள் நடுவீதிக்கு வந்துவிட்டனர்கள்.)


2) அமெரிக்க அளிக்கும் பயிற்சி இந்தியாவை முன்னேற்றவா?


3) இப்படி பயிற்சி பெறும் எம். பி க்கள் இந்திய நாட்டிக்கு சேவை செய்வார்களா?


4) இப்படி அமெரிக்காவிற்கு அருவருடி வேலை செய்யத் தான் நாம் எம். பி. க்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?


5) இந்த பயிற்சிக்கும் ஆங்கிலேயன் இந்தியாவை ஆண்ட போது, அவன் இந்தியர்களுக்கு கொடுத்த பயிற்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?

 

http://rsyf.wordpress.com/2009/06/30/இந்திய-எம்-பி-க்களுக்கு-அ-2/