கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டு அரசர் சிதம்பரம் மாவோயிஸ்டுகட்சியை அதாவது சிபிஐ(எம்)  கட்சியை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை ஆணையை வெளியிட்டார். இது வரை மாவோயிஸ்டு இயக்கம் இந்தியா முழுமைக்கும்  சுதந்திரமாக செயல்பட்ட மாதிரியும் தற்போதைய ஆணையால் மாபெரும் அதிரடி சாதனையாகவும் பத்திரிக்கைகள் மெச்சுகின்றன.

தினமணியோ ” இந்த தடை அவசியமான ஒன்று, மாவோயிஸ்டுகள் பல மக்களை கொன்றிருக்கிறார்கள். வேலையில்லா இளைஞர்களையும், அப்பாவி பழங்குடி மக்களையும் மூளைச்சலவை செய்து தங்களுடைய படையில் சேர்த்து கொள்கின்றனர். மேலும் மிகப்பெரிய நிலச்சுவாந்தார்களையும், முதலாளிகளையும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.


நேபாளம் முதல் ஆந்திராவரை நீண்டுகிடக்கும் இந்த மாவோயிஸ்டுகள் வழிப்பறி, கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவாயை பெருக்கிக்கொள்கின்றனர். நமது எதிரி நாடான சீனா இவர்களுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்து உதவுகின்றது”தினமணி மட்டுமல்ல ஏனைய எல்லா பத்திரிக்கைகளும் மாவோயிஸத்தை ஒழிக்க வேண்டும்,  மாபெரும் இந்திய சனநாயகத்தில்  ஒரு கரும்புள்ளியாக இந்த பயங்கரவாதிகள் இருப்பதால் இத்தடை தேவை.


.இந்த சட்டத்தின் மூலம் அவர்களின் ஆதரவாளர்களையும் கைது செய்யமுடியும் என சந்தோசப்படுகின்றன எல்லா அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும்.

 

ஆரம்பத்திலிருந்தே மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்பாரி அமைப்புக்கள் மீது பொய் என்று தெரிந்து கூறப்படும் முக்கிய அவதூறு ” சீனா உதவி செய்கின்றது “. நக்சல் பாரி அமைப்பினர் சீனாவை  தற்போது முதலாளித்துவ மேலாதிக்க நாடாகவே வரையறுத்துள்ளனர். இந்தியாமேலாதிக்கம் மற்றும் சீன மேலாதிக்கம் இரண்டும் தகர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்று கருத்து இருப்பதாக தெரியவில்லை.அதேபோல நேபாளத்திலும் மாவோயிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்காற்றின. எப்படி ஒரு முற்போக்காளன் முசுலீமாயிருந்தால் அவரை அல்கொய்தா ஆக்குவார்களோ அப்படித்தான் திட்டமிட்டே இந்தஅவதூறும்.


என்னவோ படிக்காத அல்லது வேலையில்லாத இளைஞர்களின் விரக்திதான் நக்சல்பாரி அல்லது மாவோயிஸ்டு வளர்ச்சிக்கு உண்மையான காரணம் எனில்  மாவோயிஸ்டுதான் உலகிலேயே அதிக  உறுப்பினர்களை எண்ணிக்கை கொண்டகட்சியாக இருக்கும்.

 

மாவோஸ்டுகளின் மீதான தடையை ஆராய்வதை விட மாவோயிஸ்டுகளின் மீது தடையை ஏற்படுத்திய அரச பயங்கரவாதத்தையும் அதற்கு பக்கபலமாயிருந்த பார்ப்பன பாஸிச பயங்கரவாதத்தையும் கொஞ்சம் பேசித்தான் ஆகவேண்டும். காசுமீர் மக்களிடம் கேட்டால் தெரியும் இந்தியத்தின் மகிமையை காறி முகத்தில் துப்புவார்கள். சில வாரங்களுக்கு முன்  இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையால் ராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்து எந்த விசாரணை நடந்தது? ராணுவம் செய்யும் கொலைகளும்  பாலியல் கொடுமைகளையும் பற்றி எந்த பத்திரிக்கை தனது நாய் மூக்கால் மோப்பம் பிடித்து எழுதின?

 

ஆனால் சில கருப்பாடுகள் என தலையங்கம் வாசிக்கும் பத்திரிக்கைகள் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த பல்லாயிரக்கணக்கான கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் செய்துவரும் ராணுவத்தை கண்டு கொள்வதில்லை.  சங்கர மடத்தில் ஒரு கரப்பான் பூச்சி நுழைந்தால் கூட ஒப்பாரி வைக்கும் இந்த நாய்கள் எப்போது அரச பயங்கரவாதத்துக்கெதிராக எழுதாது. ஏனெனில் தரகு மற்றும் ,முதலாளித்துவமே  ஒருபக்கம் ஆளும் வர்க்கமுகமுடியையும்,  மறுபக்கம் அரசியல் கட்சிகளாகவும் இன்னொருமுனையில் பத்திரிக்கைகளாகவும் செயல் படுகின்றன.


காசுமிர், அசாம்,மணிபூர், வடகிழக்கு மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக  ராணுவம் லட்சக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிமுனையில் தேர்தலாம், இதை தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றன பத்திரிக்கைகள். மாவோயிஸ்டுகள் மக்களை மூலைச்சலவை செய்தார்கள் என கூடவே உட்கார்ந்து பார்த்தது போல எழுதும் பதிரிக்கைகள்  அவர்கள் கண் முன்னே நடந்த இந்து மதவெறிகலவரங்களை,அரச பயங்கரவாதத்தினை வெளிப்படுத்தினார்களா என்ன? தன் தேவையே மக்கள் தேவையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

அரச பயங்கவாதத்தால் , முதலாளித்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண விவசாயிகள், தொழிலாளர்கள் கேட்கிறார்கள் முதலாளித்துவத்தையும், இந்த அரசையும் தடை செய்யக்கோரி பத்திரிக்கைகள் உடனே எழுதி ஆதரித்து விடுமா என்ன? கண்டிப்பாய் சீண்டிகூட பார்க்காது காரணம் இந்த தரகுமுதலாளித்துவ அரசாங்கம் தான் இவர்களின் தேவை . ஆளுவர்க்கங்களின் தேவைக்குத்தான் ஊடகங்களே தவிர மக்களின் தேவைக்கா என்ன?


மாவோயிஸ்டுகள் மீதான தடைஇந்து முன்னணி வரவேற்பு


மாவோயிஸ்டுகள் மீதான தடையை வரவேற்று அறிக்கை விட்டுஇருக்கிறார், ராம.கோபாலன். இந்த பார்ப்பன பாஸிஸ்டுகளின் கோரிக்கை மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல ,  நக்சல் பாரிஅமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்கள் அனைத்தையுமே தடைசெய்ய வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என அறிவிக்கக்கோருகிறது பார்ப்பன பாசிசம், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று தின்று விட்டு நான் தான் செய்தேன் என அறிக்கை விட்ட பிஜேபி, ஆஎஸ் எஸ், பரிவாரங்களுக்கு பூசையும் வரவேற்பும், மக்கள் இயக்கங்களுக்கு தடையா ?


நாடாளுமன்றத்தில் குண்டு வைத்தவர் எனக்கூறி தூக்கில் போடு, தூக்கில் போடு என முழக்கமிடும் தேசப்பற்றாளர்களே, காசுமீரில், வடகிழக்கு மாநிலங்களில், ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்ற, கொன்று கொண்டு இருக்கும் பயங்கரவாதிகளூக்கு என்னதண்டனை கொடுக்கலாம்? பாரதரத்னா, வீர் சக்ரா, அசோக சக்ரா தந்து கவுரவிக்கலாமா?

 

ஏன் லால்கரில் சிபிஎம்(மார்க்சிஸ்ட்) சேர்ந்த ஒரு நபரின் வீட்டிலிருந்த இரண்டு லாரி நிறைய வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனவே,  நந்திகிராமில் சிங்கூரில் பாலியல், மக்களை கொன்று  பாசிஸ்டாய் பரிணமித்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன பெயர் பொதுவுடமைவாதியா? மக்களுக்காக போராடும், போராடிய பினாயக்சென் பயங்கரவாதியாம்?

 

த்தூ!  இந்த மானங்கெட்ட பாசிச சனநாயகத்துக்கு பொட்டு, பூ வைக்கும் வேலையில் பத்திரிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.

 

சமீபத்தில் கோவை மாநாட்டில் பேசிய பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணி ” எங்கள் இயக்கம் மீது ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது, தடை செய்யவும் வாய்ப்பிருப்பதாக” தெரிவித்தார். இதுதான் இன்றைய நிலைமை ஏதோ இந்திய ராணுவத்தையே தாக்கி விட்டார்கள் என கூப்பாடு போட்டவர்கள், இந்திய அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண மக்களுக்கு ஆத்மா சாந்தியடைய சாமிகும்பிட சொல்கிறார்கள். எங்களை கொன்று விட்டு சமாதியின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள் எங்கு போய் அழுவது?

 

இந்தியாவெங்கும் மக்களிடையே மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, சாதிகலவரங்களை தூண்டிவிடும்  பார்ப்பன பாசிசகட்சிகளும், சாதி வெறிக்கட்சிகளும் தடைசெய்யப்படவேண்டும். மக்களை கொத்து கொத்தாய் கொல்லும் முதலாளித்துவம் நசுக்கப்பட வேண்டும்.

 

மக்களுக்காக போராடும் போது என்ன டாக்டர் பட்டமா வரும் ?  துரோகிகளின் வாயால் தீவிரவாதி பட்டம் ,


பாசிஸ்டுகளின் வாயால் பயங்கரவாதி பட்டம்,  என்னே பாரதத்தின் பெருமை ஜெய் ஹிந்த்.

 

http://kalagam.wordpress.com/2009/06/29/மாவோயிஸ்டுகள்-மீதான-தடை/