>>சர்வதேசம் எம்மைக் கைவிட்டு விட்டது, கொத்துக் கொத்தாக மக்கள் சாகின்றனர்<< சூசையின் இறுதிச் செய்தி, இஃது.
இன்றைய உலகஒழுங்கும் அதன் அரசியல் நெறிகளும் எமது மக்களின் போராட்ட திசைவழிப்போக்கை மாற்றியமைத்திருக்கின்றன. உலக ஒழுங்கிக்கமைய வெளிப்படும் அரசியல் செயற்பாடுகளையும் நெறிப்படுத்தும் சிந்தனை வடிவத்தையும் உருவாக்கிக்கொள்கின்றன.
உலக அரசியல் பொறிமுறையில் அமைந்த இராணுவ யுக்தியே இன்று பிரபாகரனை கொல்வதற்கு வசதியான பொறிமுறைகளை அமைத்துக்கொடுத்தது. ஒரு போராடும் மக்கள் குழுவிற்கு இருக்கின்ற ஆதரவுத் தளங்ளை விட எதிரிகள் தம்மிடையே குறிப்பாக இராணுவ ஒத்துழைப்புக்களையும், பயிற்சிகளையும், தகவல்பரிமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
ஒரு போராட்ட அமைப்பு தன்னுடைய எதிரியை சரியாக வரையறுத்துக் கொள்ளாத செயற்பாடானது. தன்னை எதிரியிடம் சரணடைய வைத்து தனது அழிவிற்கே வழிவகுத்துள்ளது. தமது தலைமையில் சதியுடன் கூடிய படுகொலைக்குப் பின்னரம் தமது தலைமையை நம்பிக்கழுத்தறுத்த துரோகச் சதியை அம்பலப்படுத்தாமல் அந்தத்துரோகத்தை மறைந்துக் கொண்டே தமது அரசியலை நடத்துகின்றனர். இவை கூட தாம் நம்பி வழிபட்ட தலைமைக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
1. புலிகளின் வர்க்க நிலை
2. உள்வீட்டு எதிரிகள்
3. சர்வதேச ஒத்துழைப்பு
ஒரு பலவீனம் இன்னுமொரு பலவீனத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த பொறிமுறைகளை சரியாக அறிந்து கொண்டு நகர்வுகளை மேற்கொண்டதால் இன்று பிரபா இலகுவாக இல்லாதொழிக்க முடிந்தது.
புலிகளின் தலைமை மக்கள் மத்தியில் இல்லாமை இலகுவாக புலிகளை அழிக்க முடிந்தது. புலிகள் மக்கள் மத்தியில் இருந்தார்கள் என்பது இரண்டு வகை தளம், மற்றையது மக்கள் மத்தியில் இருப்பது. தமது உறவுகளை மக்களுக்கு நெருக்கமாக்கிக் கொள்வது. மக்களுக்கான ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையானது புலிகளை மக்களிடத்தில் இருந்து அன்னியப்பட்ட நிலையானது புலிகளுக்கான பாதகமான நிலையை உருவாக்கிக் கொண்டது. ஒரு விடுதலை இயக்கம் மக்களின் நலனை முதன்மை கொள்ளாது தமது குழு நலனை முதன்மையாகக் கொண்டே மக்களுக்கான உறவுகளை உருவாக்கிக் கொண்;டது. இவைளே மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தியது. மண்ணில் இருந்த மைந்தர்களுக்கு கொடுக்காத மரியாதையை புகழ்பாடும் கூட்டத்திற்கு கொடுக்கப்பட்;டது.
ஆனால் மக்களை சட்டதிட்டங்களுக்கும் தமது அதிகாரவர்க்க கட்டமைப்பை பாதுகாக்கும் கூலிகள் என்ற நிலைக்கே மக்களைக் நடத்தியிருந்தனர்.
* இவர்கள் மக்களுக்கான ஜனநாயகத்தை வழங்காது தமது சட்ட திட்டங்களுக்கு
இசைவாக நடக்கும்படி வற்புறுத்தியிருந்தனர்.
*கடந்த காலத்தில் பேரலையின் அழிவின் பின்னர் புலிகளுக்கு
கிடைக்கப்பட்ட நிதிகளை தமக்கான அங்கீகாராமாக பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் மறுமுனையில் குட்டி முதலாளிய வர்க்கத்தின் ஊதாரித்தனத்தை புரிந்து கொண்ட எதிரியானவன் நுகர்வுக்கலாச்சாரத்தை மெதுமெதுவாகவே திணித்தான். ஆனால் இதனையும் அரசியல் அங்கீகாரமாகவும் தமக்கு சமனாக அந்தஸ்தைக் கொடுத்து சமமாக தம்மை நடத்துவதாகவும் கனவும் கண்;டனர். நிதி கிடைத்த போது புழங்காகிதம் அடைந்தனர்.
*தலைவரின் பெயரைச் சொல்லியே துரோகிகள் புலிகளின் உள்ளே நுழைந்துள்ளனர். பிரபாமீதான தனிமனித புகழ்ச்சியைக் மேற்கொண்டே எதிரிகள் வாழ்க கோசம் போட்டுக் கொண்டு உள்நுழைந்திருக்கின்றனர். (இந்த புதிய அதிகாரவர்க்கப்பிரதிநிதிகள் இறந்த தலைவருக்கே அஞ்சலி செலுத்த மாட்டாது ஆச்சரியமற்ற வகையில் பிரபாகரனின் மறைவை தமக்குரிய நலனுக்கு ஏற்ப திசைதிருப்பியிருக்கின்றனர்.
*பெயரைச் சொல்லியே துரோகிகள் புலிகளின் உள்ளே நுழைந்துள்ளனர். பிரபாவின் பெயரை புகழந்து கொண்டு அவர்களின் அமைப்புக்குள்ளே எல்லா சந்தர்ப்பவாதிகளும் நுழைந்து கொண்டனர். இங்குஏகபிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருந்த புலிகளின் கோட்பாடனது எதிரிகளை தனித்தியங்காது உள்ளே நுழைவதற்கும் இடம் கொடுத்தது. எதிர்ப்பதை விட அவர்களிடம் கூடிக் கொடுப்பது இலகுவாகவும் இருந்தது.
முதலாளிய வர்க்க சிந்தனையானது நுகர்விற்கு அடிமையாகும் எனத் தெரிந்து கொண்;ட எதிரி பலவீனத்தை சரியாகப் பயன்படுத்தியுள்ளான்.
இவ்வாறான தொலைபேசியை இயக்கத்தலைமைக்கு கொடுப்பதற்கு புலிகளின் வெளிநாட்டு பிரமுகர்கள் யார்? இங்கு புலிகளின் சர்வதேச உளவாளிகளின் ஊடுருவியிருக்கின்றார்கள். இவர்கள் ஊடாகவே இவ்வகையான பரிமாற்றம் இடம்பெற்றிருக்கின்றது.
புலிகளின் தலைமையானது செய்மதிகையடக்க தொலைபேசியை வைத்திருந்தனர். இந்த வகை தொலைபேசியின் ஊடாக இவர்களின் நகர்வுகள் வல்லரசுகளின் உதவியுடன் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் நம்பிய தலைமையானது தனது உயிருக்கே உலைவைக்கின்றது என்பதை இவர்கள் உணர மறுத்திருந்தனர். உலகின் ஒடுக்குமுறையாளர்கள் ஒருவருக்கொருவர் தமக்கிடையே ஒத்துழைப்புக்களை வழங்கிக்கொண்N;ட இருக்கின்றார்கள். இவைகள் எந்தக் காலத்திலும் மாற்றம் கொள்வதில்லை. இவைகள் வெளிப்படையான அரசியல் உறவைக்கொண்டு தீர்மானிப்பதில்லை. இவைகள் பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்களிடைய இடம்பெறும் உத்தியோக பூர்வமற்ற ஒரு நடவடிக்கையாகும். புலித்தலைமையில் அசைவை அமெரிக்க கப்பல்தளத்தில் இருந்து பெற்றிருக்கின்றார்கள்;. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதாக கூறிக்கொண்டு இருக்கையில் மறுபுறத்தே இந்த இராணுவ ஒத்துழைப்பு சிறிலங்கா அரசிற்கு கிடைத்திருக்கின்றது. அமெரிக்க கப்பல் தளபதி இந்திய விஜயம் செய்ததை எல்லோரும் அறிந்ததே.
இவற்றிற்கு முதல் ஒத்திகையாகவே தமிழ்செல்வனின் மீதாக தாக்குதல் என்பது ஒரு ஒத்திகையாகும். அப்போதே தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை உணரவில்லை. எல்லோரும் இவற்றிற்கு உள்வீட்டுச் சதியென்று கூலிப்பிரச்சாரர்கள் பிரசாரம் செய்து கொண்டு உண்மையை திசைதிருப்பியிருக்க எதிரியானவன் தனது இலக்கை நோக்கி மிகவும் கச்சிதமாக தமது இலக்கை மெது நிதானமாக செயற்படுத்திக் கொண்டிருந்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஊடறுத்து மக்களை விடுத்த பொழுது நாம் ஆகாயமார்க்கமாக எடுத்த தொலைக்காட்சியைப் பார்க்கின்ற போது புலிகளின் தலைமையை தனிமைப்படுத்தியே ஊடறுப்பு தாக்குதல் நடத்தியிருந்ததை உறுதிப்படுத்த முடிகின்றது. புலிகள் காட்டுப்பகுதியை நோக்கி நகரவில்லை. வெறும் வனாந்திரத்தை நோக்கியே தமது நகர்வை கொண்டிருந்தனர்.
ஐ.நா மன்றத்திற்கு துல்லியமான செய்மதிப்படங்கள் கிடைத்திருக்கும் நிலையில் எதிரிகள் இவ்வாறான படங்களை தமக்கிடையே பரிமாற்றம் செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்லமுடியுமா? ஐ.நா மன்றத்திற்கு இவ்வாறான படங்கள் பெரும் வல்லரசுகளின் செய்மதிகளால் தான் பெற்றுக் கொள்ள முடிகின்றது. (ஐ.நா என்பது பூகோளமயமாதல் திட்டத்திற்கு அமைய முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களை மாத்திரம் உறுதிப்படுத்தும் செயல்முறைக்கு அப்பால் செல்வதில்லை)
ஆகாய மார்க்கமாக பயணம் செய்கின்ற போது நல்ல காலநிலை இருப்பின் நிலப்பகுதியை வெகுஇலகுவாக பார்க்க முடியும். அவ்வாறு இருக்கையில் தொழில் நுட்ப உதவியைக் கொண்டு மக்களை புலிகளின் தலைமையில் இருந்து அப்புறப்படுத்த இலகுவாக இருந்திருக்கும். ஏனெனில் புலிகள் சாவை தாமே வரவழைத்துக் கொண்ருந்ததை உணராதவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இவற்றிற்கு சர்வதேச வலைப்பின்னல் மூலம் ஏற்படுத்தப்பட்ட தலையீட்டு நம்பிக்கை வலுவாக புலிகளின் தலைமைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மறுபுறத்தில் இவர்களை அழிப்பதற்கான கால, தளகளநிலையை உருவாக்கிக் கொள்வதிலும் வெற்றிபெற கால அவசாசம் பெறப்பட்டது. இவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து செயற்பட்ட எதிரி இலகுவாகவே எவரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு தலைமையை அழிக்க முடிந்தது.
இவ்வாறான தொலைபேசி இவர்களிடம் எவ்வாறு சென்றது? இவ்வாறு பலியாவதற்கு என்ன காரணம்?
முதலாளிய வர்க்க சிந்தனையானது நுகர்விற்கு அடிமையாகும் எனத் தெரிந்து கொண்;ட எதிரி பலவீனத்தை சரியாகப்பயன்படுத்தியுள்ளான். முன்னர் குறிப்பிட்டது போன்று பேரலையின் பின்னர் கிடைக்கப்பட்ட நிதியுதவி, தொலைத்தொடர்பு சாதனங்கள் கிடைத்த போது சர்வதேச அங்கீகாரமாக கருதியவர்கள். இவைகளே தமது முடிவிற்கான ஆரம்பமாக இருந்தது என்பதை உணர பிழையபாப்பெருமையும், சர்வதேச அங்கீகாரம் என்ற குருட்டு நம்பிக்கையும், எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பிட்டதும் காரணமாகின்றது.
பிரபாவின் தொலைத்தொடர்பு சம்பந்தமான மத்தமான அறிவு என்பதை 80களின் இறுதியில் இந்திய அரசால் தொலைத்தொடர்பு சாதனம் பறிமுதல் செய்த போது உண்ணாவிரதம் இருந்தது நினைவில் கொள்க.
தாம் மரபுவழி படையணிகளை உருவாக்கிக் கொண்டதாக பெருமைப்பட்ட போதும் அந்நிய பொருட்களின் மூலமே உளவு செய்யலாம் என்பதை அறியாத மாந்தர்களாக இருந்திருக்கின்றார்கள்.
புலிகளின் பிழையாப்பெருமையானது முக்கிய பங்காக்கியுள்ளது. எது புலிகள் செய்தாலும் அதனை ஆமோதிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டம் இன்று தாம் நினைத்தபடி புலிகள் நடக்கவில்லை என்று எரிச்சனைக் கொட்டுகின்றனர். இவர்களே மற்றவர்களை துரோகி என்று தூற்றுவதில் முதன்மையானவர்களாக இருந்தனர்.
இவ்வாறான தொலைபேசியை இயக்கத்தலைமைக்கு கொடுப்பதற்கு புலிகளின் வெளிநாட்டு பிரமுகர்கள் யார்? இங்கு புலிகளின் சர்வதேச உளவாளிகளின் ஊடுருவியிருக்கின்றார்கள். இவர்கள் ஊடாகவே இவ்வகையான பரிமாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறு பிரபாவிற்கு கொடுக்கும் நிலைக்கு ஒரு பிரபாவின் நம்பிக்கைக்கான நபர்கள் இருந்திருக்கின்றார்கள். இவர் யார்?
இங்கு புலிகளின் தலைமையின் மறைவிற்குஅவர்களின் வர்க்க நிலை அவைதான் புலிகளை இயக்கியிருக்கின்றது. இந்த வர்க்கத்தின் இயங்கும் போக்கையே இங்கு அலசப்படுகின்றது. இங்கு புலிகளின் தலைமையின் மறைவிற்கு தொலைத்தொடர்பு மாத்திரம் தான் காரணம் என்று கூறவில்லை. இவையும் எதிரிக்கு துணைபுரிந்திருக்கின்றது. செய்மதி மூலமான கண்காணிப்பு என்பது ஓரு ஆரம்ப அரசியல் அறிவு கொண்டவர்களுக்கு இருக்க வேண்டியதாகும். மேலைநாடுகளின் ஒரு மனிதனின் அசைவை கண்காணிப்பதற்கு இவ்வாறான தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்;. இவ்வாறான செய்மதி கண்காணிப்பின் மூலமாக புலிகளின் தலைமையை மக்கள் மத்தியில் இருந்து ஊடறுத்து தாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.
இங்கு மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டியது
புலிகளின் உள்வீட்டு சதியாளர்கள் யார்?
சர்வதேச சதியாளர்கள் யார்?
ஏன் மக்களை விட்டு அன்னியப்பட வைத்தது? போன்ற கேள்விகளை கேட்டே கடந்தகால தவறுகளின் இருந்து புலிகள் அபிமானிகள், தேசபக்தர்கள், இளம் போராளிகள் புதிய நிலைக்கு வரவேண்டும்.
இளம் தேசபக்தர்களே நாம் தோற்றவர்கள் அல்ல சதிமூலம் தோற்கடிக்கப்பட்;டர்கள். இதற்கு எம்மிடம் இருந்த பலவீனங்களும் பெரும் பங்கை கொடுத்திருக்கின்றன. இவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். இவ்வாறு இல்லாவிடின் தற்பொழுது நாடுகடந்த அரசாங்கம் என்று வெற்றுக் கோசம் போடும் வீனர்களிடம் மறுபடியும் உங்களின் உழைப்பை ஒப்படைப்பீர்கள். இவர்கள் மறுபடியும் உங்களை ஏமாற்றுவார்கள். மறுபடியும் புதிய ஏமாற்றத்திற்கு உள்ளாவதை இப்பவே தடுப்போம். உங்களின் தலைமையை சதிமூலம் கொண்ற சதிகாரர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துங்கள். இவற்றில் இருந்து மீண்டெழும்புங்கள்...
-நாதன்