01262021செ
Last updateதி, 25 ஜன 2021 1pm

நீங்கள் சமூகத்தின் பங்காளியாக மாற, இரண்டு இணையங்கள்; அறிமுகம்

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

 

ஆனால் அதைக் கற்கின்ற சமூகக் கூறுகள் எல்லாம், 30 வருட  இனவழிப்பு யுத்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இதைப் பகுதியளவில் தன்னும், மீட்கும் இரண்டு இணையங்கள்.

 

அடிப்படைக் கல்வி முதல் வாழ்வுசார் கல்வியை பெறும் வகையில், இவ் இரண்டு இணையங்களும் உள்ளதால் அதை அறிமுகம் செய்வது இன்றைய காலத்திற்கு பொருத்தமானது.

 

1.நூலகம் - www.noolagam.org/wiki/index.php/முதற்பக்கம்

 

2.தமிழில்கல்வி - http://www.tamilnotes.com/

 

நூலகம்

 

அண்ணளவாக 4000 ஈழத்து நூல்களை இணையத்தில் ஆவணமாக சேமித்துள்ளார்கள். மிக ஆக்கபூர்வமானதாக, சமூகத்தேவைக்கு ஏற்ற வகையில், மிக இலகுவாக அதை பெறும் வகையில், பல்துறை சார்ந்து இது காணப்படுகின்றது. புதிய இளம் தலைமுறையினர் தம் உழைப்பின் மூலம் இதனை உருவாக்கியுள்ளனர். இலங்கையில் இருந்து உருவாக்கியுள்ள இந்த ஆவணத்தை மேலும் விரிவுபடுத்த, அவர்கள் நிதி உதவியைக் கோருகின்றனர்.

 

உண்மையில் சமூக நலனுடன் சிந்திக்க கூடியவர்கள், தமிழ்மொழி மீது காதல் உள்ளவர்கள், தமிழ்மக்கள் கற்றுக் கொள்வதை விரும்புவர்கள், தாராளமாக இதற்கு உதவமுடியும். இந்த ஆவணப் பகுதியின் வளர்ச்சிக்கு நிதி முதல் கொண்டு பல வழியில் உதவ முடியும். நீங்களே முன்னின்று இதற்கு பங்காளியாக முடியும்;. இந்த வகையில் உதவக் கூடிய வழிகள்.

 

1. நிதி உதவி


2. உங்களிடம் உள்ள ஈழத்து நூல்களை, அவர்களுக்கு வழங்கல்


3. நீங்களே அதை பி.டி.எவ் வடிவில் மாற்றிக் கொடுத்தல்


4. நீங்கள் அதன் ஒரு பங்காளியாக மாறி, அதற்காக  உழைத்தல். நூல்களை தேடிப்பெறவும், நூல்களை பி.டி.எவ் வடிவல் மாற்றியும் கொடுத்தல்.


5. நீங்கள் அதில் ஒரு அங்கத்துவராதல்


6. இன்னும் பல

 

இப்படி பல வழியில் உதவ முடியம்;. ஆக்கபூர்வமான பங்களியாக மாறி, அதில் நீங்கள் செயல்பட முடியும். சமூகத்துக்கான உணர்வுபூர்மான செயலாக, இதை நீங்கள் முன்னின்று செய்யமுடியும்.

 

நூலகத்தை இலங்கைக் கல்விச்சேவை மற்றும் நூலகங்களுக்குள் இணைத்தல் அவசியம். இதை முன்னின்று செய்பவர்கள், அதைச் செய்ய முனைவதன் மூலம் இந்த இணை யப் பயன்பாட்டையும், அதன் சேவையையும் சமூக மயப்படுத்த முடியும்.தமிழில் கல்வி

 

இந்த இணையம் கல்விசார் பல்துறைகளைக் கொண்டது. நூலகம் போல் இதற்கும் நீங்கள் உழைக்க முடியும். கல்வியின் பல்துறை சார்ந்த பயன்பாட்டை, இது தனக்குள் அடையாளப்படுத்துகின்றது.

 

மாணவர்களுக்கான கல்வி என்ற எல்iலையை தாண்டி, அனைவருக்குமான கவ்வி என்ற குறிக்கோளை அடைதல் அவசியம்;. அந்தளவுக்க அது விரிவுற வேண்டும். அதை சம்பந்தப்பட்ட இணையமும், அதற்கு நாம் உதவுவதன் மூலமும், அவர்கள் அதை இலகுவாக சாதிக்க முடியும்.இந்த இணையத்தின் முக்கியத்துவம்

 

எம்மினம் சார்ந்து நாம் அழிப்பதற்கு எப்போதும் சிந்தித்திருக்கின்றோம். அதற்கு உதவியிருக்கின்றோம்.  ஆக்கத்துக்காக நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கு உதவவில்லை. இதை நீங்கள் இன்று மீள் பரிசீலனை செய்யமுடியும்.

 

இந்த நிலையில், சில மனிதர்கள் சமூகத்துக்காக சிந்தித்திருக்கிறார்கள். அதுவும் புதிய தலைமுறையினர். நாங்கள் வெட்கப்படவேண்டும். நாங்கள் என்ன செய்தோம், எதை சாதித்தோம் என்று, திரும்பிப் பார்க்க வேண்டும். இனியாவது இந்தச் சமூகத்துக்கு, நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க முனைவது அவசியம்.

 

30 வருடமாக புலி-அரசு நடத்திய இனவழிப்பு யுத்தம், இனத்தின் சகல சமூக அடிப்படைகளையும் தகர்த்துள்ளது. மக்களை ஒடுக்கி அதை அடிமைப்படுத்த, அதன் மேல் பாசிசத்தை ஏவினர். இதனால் சமூகத்தின் எல்லா சமூக அடிப்படையும் தகர்ந்து போனது.

 

இந்த இடத்தில், சமூகத்தின் எஞ்சிய சமூகக் கூறுகளை கட்டியெழுப்புவதில், இந்த இணையங்களின் முக்கியத்துவம் முதன்மையானது.

 

இங்கு நீங்கள் சுயமாக கற்க முடியும்;. கற்றதை கற்றுக்கொடுக்க முடியும். இதற்கு நீங்கள் உதவ முடியும். சமூகத்தின் ஆக்கத்தில், நீங்களும் சுயமான பங்காளியாக மாறமுடியும். இன்று நீங்களாக முன்னின்று சமூகத்துக்கு செய்யக் கூடிய, பங்காற்றக் கூடிய வழிகளில் இவையும் ஒன்று.

 

பி.இரயாகரன்
25.06.2009