10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே

குண்டுகட்டிவெடித்துச் சிதறி;
கொஞ்சமா இழந்தோம்
நெஞ்சத்து ஈரமற்று
இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்
வெடித்துச்சிதறிய பிள்ளைகட்காய் இரக்கப்பட்டதாயில்லை
அடித்துப்பிடியுங்களென்று பணம்கொடுத்து
காருக்குள் புலிப்பொம்மையும்
கார்த்திகைக்கு மண்டபத்தில் மலரும்தூவியவன்
புலத்துத்தமிழன்
வருடாந்த உரைகட்;காய் வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை

 
இன்னமுமா இறுமாப்பும் இனவெறியும்
கொல்லக்கொடுக்க பிள்ளைகளில்லை
கோரத்தின் கரங்களில் எல்லாமிழந்து
ஊனமாய் நடைப்பிணமாய்
சிறப்புமுகாமெனும் சிறைக்குள் வதைப்பட்டும்
நகர்வுகளோ மீண்டும்
நம்பிக்னைக்கான துளிர்களைகிள்ளியெறிந்து
தளிர்களை கருக்கும்
தன்னலமும் வீம்பும் வீராப்பும்
அழிவின்பின் மீண்டெழுதல்
அர்த்தமற்றுப் போதலெனின் எழாமல் இருத்தல்மேல்
கடந்த கொடியபொழுதுகளின் தவறுகளை பகிரங்கப்படுத்து
அனைத்தையும் சுயவிமர்சனம் செய்
அரசுஇயந்திரத்தையும் மக்களையும் இனம்காணு
இறுககப்பற்று எந்தஇனம் மதமென்று பார்க்காதே
நேசசக்திகளை அரவணைத்துக்குரலெழுப்பு
 
புலத்திலுன் புலன் புதியபாதைபற்ரி சிந்தித்தல் தகர்த்து
எழுகின்ற போலிக்குள் இழுபட்டாய்
இழப்பு உனக்கேது இனத்திற்கே
இளையதலைமுறையே
உன்பெற்றோரின் மாயையை உடைத்தெழு…..
உலகப்பரப்பே கணனிக்குள்உன்காலம் தேடுதல் செய்….
தேசப்பரப்பெங்கும் விரிகின்ற விடுதலையின் வீச்சைக்காண்பாய்…..
மக்கள்சக்தியின் மகத்துவம் உணர்வாய்…
இனிவரும் எழுச்சி இனஜக்கியத்தில்
வெல்லப்படமுடியுமென்ற இயங்கியல் புரிவாய்.. 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்