விவசாயம் நசிய நசிய
கைத்தறி தேய தேய
ஏறுகிறது விலை மட்டும்
கொழுத்தவனின் கடவாய்ப்பற்களில்
இன்னொன்றாய் மின்னுகிறது….
ஒன்றும் புரியவில்லை
தங்கம் விலை ஏறுவதைப்போல….
அரிசி விலை முப்பது ரூபா
பருப்பு விலை அறுபது ரூபா
தங்கவிலையோ ஏறுகிறது ஏறுகிறது
எவெரெஸ்டின் உச்சியைத்தாண்டி

அடேங்கப்பா
பிளந்த வாய்கள்
தப்பாமல் வரிசையில்
நிற்கின்றன திருச்சிக்கும்
வந்துவிட்டதாம் குமரன் தங்க மாளிகை….
பழையது புதியதாக மீண்டும்
அது பழையதாக
புதியதாக முளைக்க
அதெப்படி உழைப்பவனின் வாழ்வு மட்டும்
பழையதாகிக்கொண்டே போக
வலுத்தவன் மட்டும் புதியதாகிக்கொண்டே போக….
வந்து விட்டதாம் ரேட் கார்டு
விலை என்னவென்று சரியாயிருக்குமாம்
அங்கு உலகமயத்தின்
கோரத்தால் சயனைடைத்தின்ற
குடும்பங்களின் மதிப்பு செல்லாததாயிருக்கும்…..
இனியும் உருக்க
தங்கம் இல்லை
இரும்பை உருக்குங்கள்
பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்
நாளை அவனின் உயிரை
எடுப்பதற்கு தேவைப்படும்.
எடுப்பதற்கு தேவைப்படும்.