அடிக்கடி காதில் விழுகிறது
என்ன வெட்டி முறித்தாய்?
என்ன கிழித்தாய்?
இல்லை – முறிக்கப்பட்டோம்
கழுத்து  நெறிக்கப்பட்டோம்…..

அவன் தேவைகளுக்காக
மரத்தை வெட்டினோம்
இப்போதெங்களை வெட்டிக்கொண்டிருக்கிறான்
அதுவும் அவன் தேவைக்காக….

 

மலைகளைப்பிளந்தோம் ஆழ்
கடல் முத்தையெடுத்தோம் மூச்சை
விட்டோம் – மயிரெல்லாம்
சிலிர்த்ததாக சொன்னார்கள்….

 

நம்மிடமிருந்து விவசாயத்தை
கைத்தறியை, வேலைகளை
வெட்டிவிட்டு அறிவிக்கிறது அரசு
நீங்கள் வெட்டிகள்…..

 

நம் வாழ்வுக்கு

 

அகழியை வெட்டியவனுக்கு
எதை தரப்போகிறோம்?

 

வெட்டப்பட்டு முறிந்து கிடக்கிறோம்
இனி வெட்டுவதற்கு மரங்கள்
இல்லை

 

வெட்டப்பட்ட மரங்கள்
நாளை கோடரியை வெட்டும்……

 

இனி, வெட்டப்படுவோர்
தேவையில்லை., வெட்டிகள்தான்
தேவை
வெட்டுவோம் இந்த வெட்டில்
அவர்கள் மீண்டும் துளிர்க்காதபடி.

 

http://kalagam.wordpress.com/2009/06/08/வெட்டிகள்/