உலகின் வாகனச்சந்தையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்திவந்த மூன்று அமெரிக்க நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லர், ஃபோர்ட் ஆகியவை அடுத்தடுத்து வீழ்ந்துவருகின்றன. அமரிக்க அரசிடமிருந்து நிதியுதவி பெற்றும் தாக்குப் பிடிக்க முடியாமல் கிரைஸ்லர் முதலில் திவாலானது.

தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஃபோர்டின் நிலையும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சுதந்திர வர்த்தகம் என்றும், ஆரோக்கியமான வியாபாரப்போட்டி என்றும், பொருளாதார விவகாரங்களில் அரசு குறுக்கீடு இருக்கக்கூடாது என்றும் லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் போது தங்கள் நிறுவனங்கலை ஏழை நாடுகளில் திணிக்கும் போது உலகிற்கு பாடம் நடத்திய இந்த கண‌வான்கள் அதே சுதந்திர வர்த்தகத்தை கூறிக்கொண்டு டொயோட்டா கார்களை ஜப்பான் ஏற்றுமதி செய்தபோது அரசின் மூலம் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். இப்போது அமெரிக்க அரசு வழங்கிய பல லட்சம் கோடிகளை கபளீகரம் செய்துவிட்டு திவால் என்று அறிவித்திருக்கிறார்கள். ஜெமோவின் சொத்து 3.95 லட்சம் கோடி, கடன் 8.29 லட்சம் கோடியாம். இனி அரசு ஏற்றுக்கொண்டு முதலாளிகள் சுருட்டிக்கொண்டு போனதை மக்கள் பணத்திலிருந்து சரிக்கட்டும். ஏனென்றால், நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பாதிப்படையக்கூடாதாம். அப்படி என்றால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடந்த்ஹ மாதங்களில் நிர்வாகம் வெளியேற்றிய 21000 தொழிலாளர்களின் கதி?

 

 

 பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதைக்கொண்டு இழுவை மோட்டார்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், எண்ணெய் வளத்தை கைப்பற்றிக்கொண்ட தனியார் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப்பொருளான‌(!) பெட்ரோலை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் சொகுசுக்கார்கள். இவைகளை விஞ்ஞான வளர்ச்சி என்றவர்கள், இந்த விஞ்ஞானம் மக்களுக்காக பயன்படாமல் முதலாளிகளை கொழுக்க வைப்பதற்கே பயன்பட்டிருப்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இன்னும் பல நாடுகளில் பொதுப்போக்குவரத்தே இல்லை என்னும் அள‌விற்கு பலவித வடிவங்களில் பலவிதமான வசதிகளில் வேறுவேறு பெயர்களோடு சாலைகளில் ஓடி மக்களின் உழைப்பை தேய்த்துக்கொண்டிருக்கிறது. இன்று எல்லோருக்கும் கார் என்ற இலக்கில் மலிவு விலை கார்களை த‌யாரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆடம்பரக்கார்கள் எலக்த்ரானிக் பொருட்களின் விலை குறைந்ததைப்போல் உணவுப்பொருட்களின் விலை குறைந்திருந்தால் 16 காசுக்கு ஒரு முழுமையான சாப்பாடு கிடைத்திருக்கும் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

          அமெரிக்க மோட்டார் நிறுவனங்கள் மட்டுமல்ல இந்திய நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகின்றன. மாருதி 27.4 விழுக்காடும், டாடா 12.2 விழுக்காடும், மகேந்திரா 41.55 விழுக்காடும், பஜாஜ் 37 விழுக்காடும், டிவிஎஸ் 12.7 விழுக்காடும் விற்பனையில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. உலகமெங்கும் இதே நிலை தான்.  எல்லாத்துறையையும் சார்ந்த பெரு நிறுவனங்கள் அனைத்தும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கென்றே, மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவே கட்டப்பட்டதாக நம்பப்படும் பெரு நிறுவனங்களனைத்தும் ஏன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த வண்ணமிருக்கின்றன.  ஏன் நட்டமடைகின்றன? தேவையின் அடிப்படையில் உற்பத்தி அமையாமல் உற்பத்தியின் அடிப்படையில் தேவை தீர்மானிக்கப்பட்டதால் தான். சாப்பாட்டிற்கே வழியில்லாத மக்கள் கூட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் கார்களின் விற்பனை கூடவா செய்யும்?

 

          கொள்ளை லாபம் வந்து கொண்டிருக்கையில் எங்கெல்லாம் உற்பத்திச்செலவை குறைக்கமுடியுமோ அங்கெல்லாம் அராஜகமாக தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உற்பத்தி செய்து தள்ளும் இந்நிறுவனங்கள் இழப்பு என்று வந்ததும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கின்றன. ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன. திவால் அறிவிப்பு செய்துவிட்டு கம்பிநீட்டிவிடுகின்றன. இந்த வகையில் உலகில் சமீப ஆண்டுகளில் பல கோடிப்பேர் வேலையை இழந்துள்ளனர்.  முதளாளித்துவம் வேலையில்லாதோர் பட்டாளத்தை தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

   

          அவர்கள் எப்போதும் சும்மா இருந்துவிட மாட்டார்கள்.