புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பயங்கரவாதிகளுக்கு எதிரானயுத்தம் என்று பிரகடனப்படுத்திய போது அனைத்து புலியெதிர்ப்புக் குழுக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனால் இன்று இவர்கள் நிலையானது பரீதாபகரமானதாக இருக்கின்றுது.
அன்று ஏகபிரதிநிதித்துவம் என்ற ஒன்றைக் கோட்பாட்டை எதிர்த்த இந்தக் குழுக்கள் மறுபடியும் ஒற்றைக்கோட்பாட்டுக்கே பழியாகிப் போகின்ற நிலை தோன்றியுள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற நிலையில் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கூட மக்களுக்கு வழங்கக் கூடாது என்று கருத்து வெளியிட்ட இந்தக் குழுக்கள் அந்த முதலாளித்தவ ஜனநாயகம் அவர்களுக்கு வழங்குவதற்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கின்றது.
இன்று சுதந்திரக்கட்சியானது தனக்குக் கீழ் சிறுபான்மைக் கட்சிகளை இணைப்பதற்கு அழுத்தங்கள் கொடுக்கின்றன. இவற்றில் முதல் கட்டத்தில் டக்கிளஸ்சும், சங்கரி, சிறீதர், சித்தாத்தர் அணியினர் இந்த அபாய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அன்று மக்களுக்கு எதிரான போரில் அரசின் பிரச்சார பீரங்கிகளாக செயற்பட்டவர்கள். இவர்கள் அறிக்கை மேல் அறிக்கை விட்டு அழிப்பு யுத்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.
இவர்கள் மக்கள் பக்கம் நிற்கவில்லை.
அநீதியான யுத்தத்தின் பக்கம் நின்றார்கள். இவர்கள் அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு பணிந்து போக வேண்டும். அல்லது கடந்தகால வரலாற்றை காட்டி குற்றவாளிகளாக்கி கூண்டில் நிறுத்துவதற்கு தயங்காது. உதாரணத்திற்கு கருணாக மத்தியவங்கிக்கு கட்டளையிட்டது கருணா தான் என தெரிந்திருந்தும் அரசில் வைத்திருக்க சந்தர்ப்பம் கொடுத்தது. தமக்கு விசுவாசமாக இருப்பார் என்பதற்காக மாறாக இனங்களிடையே ஐக்கியத்தை பேணவேண்டும் என்பதற்காக. இதே போல கிழக்கு மக்களுக்கு விடிவெள்ளியாக இருப்பற்கு அரசிடம் போகவில்லை. மாறாக தனக்கு புலிகளிடம் இருந்தும்> பிள்ளையானிடம் இருந்து வரும் அச்சுறுத்தலில் இருந்து தன்னைத் பாதுகாத்துக் கொள்ள இங்கு கொள்கை எதுவும் இல்லை. மக்களை மொட்டையடிக்கும் சிந்தனைதான் முதன்மையாக இருக்கின்றது.
இன்று பாசீசம் தனது வேரை ஆழப்படுத்துகின்றது. முதலாளித்துவ ஜனநாயமான பேச்சு, எழுத்து, தேர்தலில் பங்குபற்றும் உரிமை இவைகள் மறுக்கப்படுகின்றது.
ஒரு குடி தனது கருத்துக்களை சொல்வதற்கும் சொன்ன பின்னர் தனது உயிரை விடாது இருப்பதற்கும் உத்தரவாதம் இருக்க வேண்டும். தனது கருத்தைக் கூறிய பின்னர் தனது உயிருக்குப் பயந்து து}ங்க முடியாதா சூழ் நிலை எந்தக் காரணம் கொண்டும் ஏற்படக் கூடாது. இவ்வாறு ஒரு நிலை இல்லையாயின் ஒரு மனிதன் தனது பாதுகாப்பு இந்தச் சமூக அமைப்பினால் உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் நிலையாகும். இது ஒரு அதிதீவிர ஜனநாயகக் கோட்பாடாக் கொள்ள வேண்டியதில்லை. காரணம் இந்தச் சமூகத்தின் சிந்தனை என்பது இந்தப் பொருளாதார அமைப்புக்கு உட்பட்டுத்தான் இருக்கின்றது. ஒரு தனிமனிதனின் அதிமிதமான கருத்துச் சுதந்திரத்தால் மாற்றம் என்பது உடனடியாக உருவாகப் போவதில்லை. ஒருவன் தனது உயிர்வாழ்வதற்கான உத்தரவாதம் தான் ஒரு மனிதனுக்கான அடிப்படைச் சுதந்திரமாக இருக்க முடியும்.
தனிமனித சுதந்திரம் என்பது பொதுவிடயங்கள் மீதான சுதந்திரமும், தனிமனிதர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை தோண்டி எடுத்து சுவைகாணும் மஞ்சள் பத்திரிகை போன்ற நிலையில் "தனிமனித சுதந்திரம் என்பது மதிக்கப் பட வேண்டியதும் அனுமதிக்கப் பட வேண்டுமென்பதும் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். இச் சுதந்திரமானது 100 வீதம் தனது மூக்கின் நுனி அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதொன்றாகவும் அனுபவிக்கப் படுவதாகவும் இருக்கின்றது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும் மாறாக அது சிறிதளவேனும் அதிகரித்து விடுமாயின் மற்றறொருவரின் சுதந்திரத்தைப் பாதிக்கின்றதோ இல்லையோ…அது ஒரு சமூகத்துடன் கலந்து விடுகின்ற பொது விடயமாக மாறிவிடுமென்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்." (ஊடக சுதந்திரமும் நாட்டின் இறையாண்மையும் ஏயெம்.ஹஸன் அலி சவூதியிலிருந்தவாநநெந.உழஅ) இங்கு அரசியல் ரீதியாக ஒரு நிலைப்பாட்டிற்கும் தனிமனித உறவைப் பற்றி கிசுகிசுக்கும் இடையான மாறுபாட்டை தெரியாது இரண்டையும் போட்டு குழப்பும் நிலை பாசீசத்தை பாதுகாப்பவர்கள் கிசுகிசுவையும், தனிமனித சுதந்திரத்தையும் போட்டுக் குழுப்பும் நிலையை மேலே பார்க்க முடியும். அதாவது தனிமனித சுதந்திரம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் ஒரு அக்கமாக இருக்கும் மனிதனின் கருத்தை வெளிப்படுத்துவதாகும்.
இன்று தாக்கப்படும் அல்லது கொல்லப்படும் பத்திரிகையாளர்கள் மஞ்சல் பத்திரிகை நடத்துபவர்கள் அல்ல. மாறாக சமூகத்தின் நடைபெறுகின்ற நடப்புக்களை வெளிக்கொணர்பவர்கள். இவர்கள் தமது முரண்பாடுகளை வெளிக்கொணர்வதற்கு சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் சுதந்திரம் என்ற போர்வையில் தனிமனிதர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது மஞ்சல் பத்திரிகையாளர்கள். இவர்களின் செயற்பாடுகள் ஜனநாயக வரம்பிற்கு உட்டபட்டது என அக்கீகரிக்கப்படுகின்றது. தனிமனிதர்களுடைய வாழ்க்கையை தொந்தரவிற்கு உள்ளாக்கின்றது. இனவெறி, மதவெறி, சாதிவெறியை வெளிப்படுத்துபவர்களின் கருத்துக்களை அனுமதிக்கும் பத்திரிகை அதிகாரத்தில் இருப்பவர்கள். உலகில் ஒரு சமூகத்தின் பொருட்டான செய்திகளை தணிக்கை இடுவதற்கு போடும் கடிவாளம் தான் பாசீசத்தின் நிலையாகின்றது. தம்மை எதிர்ப்பவர்கள் எவரும் இருக்கக்கூடாது. பாசீஸ்டுக்கள் விமர்சனங்களை எதிர்க்கொள்ளத் திராணியற்றவர்கள்.
இதன் தொடர்ச்சியே பத்திரிகையாளர்மீது தாக்குதல் ஊடகவியலாளர் ஜெர்மி பேஜ் க்கு ஆகஸ்ட்மாதம் முதல் செய்தி சேகரிப்பதற் கான விசாஅனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில்இ மேலும் சுற்றுலா விசா அனுமதியை பெற்று இலங்கைக்குள் செல்ல முயற்சித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த வாரம் இலங்கை சென்ற நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். லசந்த கொல்லப்பட்டார், பல பத்திரியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஊடகவிய லாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த இனந்தெரியாதவர்களினால் நேற்று கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளை வானில் வந்த சிலரே இவரைக் கடத்திச்சென்று அவரது தலைமுடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் கடும் காயங்களுக்கு இலக்கான இவர்இ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகைச் சுதந்திரம் ஜனநாயக மறுப்பு
இலங்கையில் சிறுபான்மை இனம் இல்லை என்றும் தேசப்பற்றுக் கொண்டோர் அல்லது தேசப்பற்று அற்றோர் என்ற பகுதியினரே இருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றனர்.
இந்த உள்ளடக்கம் தான் என்ன? சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பை மறுதலிப்பது தீர்க்கமான ஒரு நிலைப்பாடாக இருக்கின்ற போது பிரச்சனையை வேறு ஒரு பரிணாமத்தில் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதன் ஓரு அங்கமானவே மக்கள் தமது பிரதிநிதியார் என்பதை இராணுவ அச்சுறுத்தலுக்குள் தெரிவு செய்யும் நிலையை தோற்றுவித்துள்ளது. இங்கு புலியெதிர்ப்பணியை தம்முடன் இணையும்படி கோரியது கூட அப்பட்டமான பாசீசத்தின் வெளிப்பாடே. இதற்கு எதிர்க்க திராணியற்கு இருக்கின்றது புலியெதிர்ப்புக் குழு.
இலங்கையின் ஊடக கலாச்சாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது, செய்திகளை திரிவுபடுத்தி உண்மைக்கு மாறாக வெளியிடுவதும் இதற்க மாற்றாக சிறுபகுதியினரே நேர்மையான செய்திகளைப் கொண்டு வருகின்றார்கள் இவர்கள் மீதான தாக்குதல் பாசீசத்தின் வெளிப்பாடு இங்கு பன்முகத் தன்மை இல்லது ஒழிக்கப்படுகின்றது.