07062022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான போத்தல கடத்தல்காரர்களால் மூர்க்கத்தனமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார் :

போத்தல ஜயந்த  மாலை ஐந்து மணியளவில் நுகேகொட, அம்புல்தெனிய சந்தியில் வைத்து வெள்ளை வானொன்றில் வந்த 6 பேரினால் கடத்திச் செல்லப்பட்டார்.
வானுள் வைத்து போத்தல ஜயந்தவின் கண்களைக் கட்டிய கடத்தல்காரர்கள் அவருடைய தாடியையும் தலைமுடியையும் கத்தரித்துள்ளனர். அதுமட்டுமன்றி, வெட்டிய முடியை அவர்கள் போத்தலவுக்குத் தீத்தியுள்ளனர்.
அவர் மீள எழுத முடியாதவாறு அவருடைய கை விரல்கள் மரக்கட்டையினால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு அவருடைய இடது காலும் தாக்குதல் காரணமாக பலத்த சேதமடைந்துள்ளது.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 72ஆம் இலக்க வார்ட்டில் போத்தல ஜயந்த சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
2ம் இணைப்பு ‐ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான போத்தல ஜயந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்:
இன்று மதியம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நுகேகொடை நகருக்கு அண்மையில் வைத்து வெள்ளை வான் ஒன்றில் அவர் இழுத்து ஏற்றப்பட்டதை அவதானித்த சிலர் இது குறித்து ஊடகவியலாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் அவர் தாக்கப்பட்ட பின் வீதியோரம் வீசப்பட்டுக் கிடந்ததை சிலர் கண்டுள்ளனர். அவர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அபாயக்கட்டத்தை அவர் தாண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்த ஊடகவியலாளர்களின் பெயர்ப்பட்டியல் தனக்குக் கிடைத்துள்ளதாக காவற்துறை மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அரச கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியான ஐரிஎன் இச்செய்தியை ஒளிபரப்பும் போது போத்தல ஜயந்தவின் படத்தையும் ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் அரச கட்டுப்பாட்டிலுள்ள சிங்களத் தினசரி மே 22 ஆம் திகதிய தனது ஆசிரிய தலையங்கத்தில் தாடி வளர்த்துள்ள தம்மை தொழின்முறை ஊடகவியலாளர் என்று சொல்பவரை கல்லெறிந்து துரத்துவோம் எனக் குறிப்பிட்டிருந்தது. (போத்தல ஜயந்த வளர்த்துள்ள தாடி அவருடைய அடையாளமாக உள்ளது.)
கடந்த சில வாரங்களாக ஊடக சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், மற்றும் ஊடகவியலாளர் கடத்தப்படுவது கொல்லப்படுவது என்பவற்றிற்காகக் குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளாலும் அரச மற்றும் அரச சார்பு ஊடகங்களாலும் துரோகிகளாகக் குற்றம் சாட்டப்படுவது தொடர்ந்து வருகிறது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றிய இவர் ஊடக சுதந்திரத்திற்காக தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தவர்.
அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைக்கெதிராக நடாத்தப்பட்ட போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ள போத்தல ஜயந்தவிற்கெதிராக தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
கடந்த வருடம் நள்ளிரவு வேளையில் இவருடைய வீட்டிற்குச்; சென்ற காவற்துறையினர்  இவரைக் கடத்திச் செல்ல முயன்றதும் அயலாரின் தலையீட்டை அடுத்து அம்முயற்சி தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
MEDIAFREEDOMINSRILANKA 
Freedom of Expression news from Sri Lanka
Media alert‐  01 June 2009
Poddala Jayantha, secretary SLWJA abducted and severely assaulted
Poddala Jayantha, General Secretary of   Sri Lanka Working Journalists Association was abducted by an unknown group late afternoon today. He was on his way back home form work and abducted some close to Nugagoda town. Some people who have seen him pushed in to a white van alerted the journalists on the abduction.
Later he was found left on the road side by some people. He had been severely assaulted. Later he was admitted to ICU of the Colombo general hospital. Reports say that he is out of danger.
Inspector General of police accused unmanned journalists for obtaining money form the LTTE to campaign for media freedom in Sri Lanka . State controlled TV net work ITN showed visuals of Poddala Jayantha on its segment called After News while repeating the same accusation.  On 22nd May editorial of the state controlled Sinhala language daily called for stoning and expelling of so called professional journalists who grow beards. (Poddala Jayantha is known for his beard)
Last few weeks has seen continued attacks on journalists who campaigned for media freedom and justice for abducted and killed journalists in Sri Lanka calling them traitors by various politicians and pro state and state controlled media.
MFSL team – working voluntarily for media freedom in Sri Lanka

நன்றி : உலக தமிழ்ச் செய்திகள்

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்