நந்திக்கரைவரை கொண்டுவந்து இரத்தக்களரியை ஏற்படுத்தியது லொபிக்களின் விழைவுதான். நந்திக்கரை இரத்தக் களரியில் இருந்து படிப்பினை பெறாது மீளவும் தமிழ் புதிய அதிகாரவர்க்கம் அதேதிசையில் பயணிக்கின்றது.

சிறிலங்கா அரசின் பாசீசம் தனது வேரை இன்னும் ஆழவூன்றும் நிலையில் அனைத்து தளங்களிலும் செயற்படுகின்றது. மக்களை பயத்தின் மூலமே பேசா மடந்தைகளாக வைத்துக் கொள்வதற்கான உளவியல் யுத்தத்தை மக்கள் மீது திணித்துள்ளது. இன்று மக்கள் சாப்பிட மட்டுமே வாயைத்துறக்கும் நிலையை ஏற்படுத்துகின்றது.

 

இதே வேளை இன்றைய நிலையைப்போக்க என்ன செய்யவேண்டும் என்று வெள்வேறு நபர்கள் வெள்வேறு வகையாக பிரச்சனையை ஆராய்கின்றனர்.

 

இந்த வகையில்

 

என்ன செய்வது? இது இன்று பலரும் எழுப்பும் கேள்வி கூட

 

 

'காலத்துக்கு காலம் எதிரிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல் இருக்கும் வரைக்கும்."

 

'குருதிப்புனலும் பிரபா கொலையும்"

 

அவர்களில் பிரிவு பிரச்சனைக்கு தீர்வு தமிழ் மக்களிடையே ஒரு சிறந்த லொபியை உருவாக்கிக் கொள்வதுதான் என களத்தில் குதித்துள்ளார்கள். இவர்கள் முன்னர் ய+தர் மாதிரி நாம் பொருளாதாரத்தில் வளரவில்லை. அவர்கள் போல ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் வளரவில்லை, மக்கள் உரியநோரத்தில் போராட வரவில்லை எனக் குற்றம் சாட்டியவர்களே மறுபடியும் இந்த பிரிவினர் தமக்கான பிரதிநிதிகளை உருவாக்கிக் கொள்ளும் நிலையில் இன்று செயற்படுகின்றனர்.

 

இவர்கள் கூறும் காரணங்கள்

 

- அடபாவமே தமிழர்களிடையே ஒரு திறமையான லொபி இல்லாதது தான் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்று புதுவிளக்கம் கூறுகின்றனர். (உலகப்போராட்டங்கள் வெற்றி பெற்றதற்கு லொபியிஸ்டுக்கள் தானா??)

 

-ஐயோ ஜிரிவியைப் பார்க்காதவர்கள் இருட்டில் வாழ்வதாக வேறு கருத்து.....

 

இதே ஜி.ரிவி கடந்த வாரமாக மண்ணின் விடிவிற்காக இறந்த தேசபக்தர்களினதும், விடுதலைப்புலிகளின் தலைமையினரும் துக்க தினத்தை இலவசமான ஒளிபரப்புச் செய்யமுடியாத நிலையில் இருந்தவர்கள். இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜி.ரிவியை இலவசமான ஒளிபரப்புகின்றார்கள்.

 

தமது வாழ்வை அர்ப்பணித்த தேசபக்தர்களின் நிலையான இவ்வளவு சீக்கிரமாகவே பெறுமதியற்றதாக போய்விட்டது.

 

நந்திக்கரைவரை வெளித்தொடர்பு பற்றி நம்பிக்கையை ஊட்டியது இவ்வாறான லொபிக்கயவர்களே. புலித்தலைமையின் வர்க்கப் பலவீனத்தைப் பயன்படுத்தி சரணடைவிற்கு கொண்டுவந்து விட்டவர்கள் இவ்வாறான லொபியிஸ்டுக்களே. மக்களோடு மக்களாக இந்திய இராணுவத்துடன் சண்டையின் போது விடுதலைப்புலிகளை அழிக்க முடியாமல் போனதற்கு மக்கள் மத்தியில் இருந்து போராடினார்கள். மக்கள் மத்தியில் இருந்து போராடிய போது அன்று பிராந்திய வல்லரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது.

 

தொலைத்தொடர் சாதனங்களை மோகனதாஸ் பறிமுதல் செய்தார் இதனை அடுத்து

 

தொடர்பு சாதனங்களை திரும்பித் தருமாறு கோரிக்கை வைத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். (விடுதலை பக்கம் 36) இது ஒரு தொழில் நுட்பம் மீதான பலவீனத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

 

இவ்வாறு சிறு பலவீனங்களையும் எதிரி பயன்படுத்துவான் என்று தெரிந்திருக்க வேண்டியது ஒரு விடுதலை அமைப்பின் கடமையாகும். இவ்வாறு நாம் விட்ட தவறுகளைத் தேடிச் செல்கின்ற போதுதான் பல மக்களுக்கான போராட்டத்தை வெற்றி கொள்ள முடியும்.

 

இன்று பலரின் உழைப்பில் ஒரு அதிகார வர்க்கப்பிரதிநிதி இனப்படுகொலையின் பெயரை வைத்தக் கொண்டு உருவாக்கப்படுகின்றார்.

 

- உயர் உத்தியோகம் பார்ப்பவர்கள்இ பொருளாதாரத்தில்

வசதிபடைத்தோர்இ மொழியறிவு கொண்டவர்களாக இருப்பதனால் இங்குள்ள அதிகாரவர்க்கத்துடன்

தொடர்பு கொள்ளத்தக்கவர்களாக இருக்கின்றனர்.

 

இத்துடன் ஓரு சிறுபகுதி சொத்துக்களைக் கொண்டவர்களாகவும்இ நிதியினைக் கொண்டவர்களாவும் இருக்கின்றார்கள். இவர்களின் ஒரு பகுதியினரிடம் மக்களிடம் சேர்க்கப்பட்ட நிதியானது முடங்கிக் கிடப்பதால் சொத்துக்களை கொண்டவர்களாவும்இ இவர்களின் நலன் அமைப்பினுள் பாதுகாக்கும் நிலையை கொண்டவர்களாவும் தற்பொழுது உருவாகியிருக்கின்றார்கள்.

 

புதிய ஆழும் வர்க்கத்தின் நலனே முன்னோக்கியிருக்கின்றது. நாம் பிறந்த மண்ணின் களநிலவரம் என்பது மாறுபட்டிருக்கின்றது. சிறுபான்மை இனங்களின் உரிமை வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்கான பாதையை சரியான முறையில் தெரிந்தெடுக்க வேண்டும். இந்த பாதையை 30 வருடங்களாக கடந்து வந்த பாதையில் இருந்த பெற்ற அனுபத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இவைகள் புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் பற்றி சிந்திப்பதாக இருக்கட்டும்

 

வல்லரசுகள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதாகட்டும்.

 

சிறிலங்கா அரசாகட்டும் எல்லோரும் மனித விழுமியங்களை தமது வர்க்க நிலையில் இருந்து ஜனநாயகத்தைப்பற்றி கருத்து வெளியிடுகின்றனர்.

 

லொபிக்கள் என்பவர்கள் விடயங்களை அதிகாரவர்க்கத்திடம் பேசி அவர்களின் மனதை மாற்றும் ஒரு தொழிலை இவர்கள் செய்கின்றனர். இந்த பேச்சுக்கள் விலையுயர்ந்த கொட்டல்களில் விலைஉயர்ந்த குடி, உணவுடன் நிறைவேற்றப்படுகின்றது. பலசந்தர்ப்பங்களில் அவருக்கு அன்பளிப்பும் உண்டும்.

 

ஆம் எம்மிடம் வலுவான லொபிக்கள் இருக்கவில்லை. மனித இனத்தின் போராட்டங்கள் எதிலுமே லொபிக்கள் இருந்ததில்லை. ஏன் இன்று வெற்றிபெற்ற நேப்பாள (மீளவும் சதிக்கு உட்பட்டு இருப்பது ஒரு புறமிருக்க) புரட்சி வெற்றி பெற்றது தமது சொந்த மக்களையும் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் உதவியுடனே அன்றி எந்த அதிகாரவர்க்கத்தின் உதவியுடன் அல்ல. குறுக்குவழியில் பிரச்சனைக்கான தீர்வினை நோக்கிப் போவது தொடர்ந்தும் மக்கள் ஏமாற்றும் ஒரு புதிய சதிவலையே.

 

நாம் சிறிலங்கா அரசுடன் ஒன்றிப் போவது

 

வல்லரசுகளின் உதவியுடன் ஒன்றிப்போவது

 

இவற்றைத் தவிர்த்த பாதை ஒன்று இருக்கின்றது. இந்தப்பாதையைப் பற்றிய சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே இன்றுள்ள முக்கிய பணியாகும்.

(2) நந்திக்கரையில் இரத்தவாடை!

 

நந்திக்கரையில் என்ன நடைபெற்றது என்று எவருக்குமே முழுமையாக தெரியாத வகையில் வெகுதிட்டமிடப்பட்டு ஒரு தலைமை அழிக்கப்பட்டிருக்கின்றது. இன்னொரு பகுதியினர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவற்றிடையே துரோகி என்ற சப்பை கொண்டும் அரசியல் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.

 

பிரபாவின் படுகொலையை இட்டு பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது. பிரபாவின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இரண்டு நிலையில் பார்க்கலாம். ஒன்று விசுவசித்த ஒரு தலைவன், வழிகாட்டி, உதாரணபுருசன் என வருணிக்கப்பட்ட ஒரு தலைவன் இறந்தான் என்பதை உளப்பக்குவம் இன்மையால் ஏற்றுக் கொள்ள முடியாதா நிலை அல்லது ஜீரணிக்க முடியாத நிலை.

 

மற்றையது திட்டமிட்டு துரோக அரசியலை மேற்கொள்ள பிரபாவின் வீழ்ச்சியை ஏற்றுக் கொள்ளாது விடல்.

 

இவைகளின் முதலாம் நிலையில் உள்ளவர்களின் உணர்வை மதிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த பாமர தேசபக்தர்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் நிலையில் தான் அரசுசார் எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். ஒரு தலைவனின் அல்லது தான் நேசித்த ஓரு குடும்ப உறுப்பினரின் மறைவை மனது இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த மனிதர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாது எள்ளிநகையாடும் மாந்தர்கள்யார்.?

 

இவர்கள் கடந்தகாலத்தில் புலிகளின் அரசியலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். சரி அவ்வாறு புலிகளின் அரசியலால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்றால் தற்போதையை அரச ஆதரவாளர்கள் கடந்தகாலத்தில் சிறிலங்கா அரசின் வஞ்சக இராணுவ அரசியலால் வஞ்சிக்கப்படவில்லையா?

 

அரசின் மீதான பலிவாங்கும் நிலைப்பாடு ஏன் ஏற்படவில்லை. இலங்கை குடிகளுக்கே குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் (வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாகப் பார்ப்போம்) கூட வழங்கத் தயாராக இல்லாத அரசின் செயற்பாடுகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. ஒரு இனத்தின் அடையாளம் இல்லாதாக்கப்படல், இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தும் ய+தபாணி நடவடிக்கைகள் மேற்கொள்வதை இட்டு இவர்களுக்கு கவலை இல்லை.

 

ஒரு இராஜீவை கொண்றதற்கு (சிறிலங்காவிற்கான ஒத்துழைப்பு பிராந்திய நலனுக்கு உட்பட்டது) எம்மினம் இந்திய ஆழும் வர்க்கத்தால் பழிவாங்கப்பட்டது. இந்திய ஆழும் வர்க்கத்தின் பழிவாங்கலுக்கு உட்பட்டது. 20000 உயிர்களும், 30000 அங்கவீனர்களாக உருவாகியவையும், 300000 மக்கள் தாம் சிறுகச் சேர்த்தையும் இழந்த ஒன்றுமற்ற பிச்சைக்குடிகளாக உருவாக்கம் பெற்றதும். இவைகள் நந்திக்கரையில் வெளிப்பட்ட இரத்தவாடை பற்றி இவர்களுக்கு உணர்வதில்லை.

 

ஆம் புலிகளின் அரசியல் என்ற காரணத்தினால் அரசின் அடக்குமுறைக்கு வடுவினால் பாதுகாப்பாக சென்ற மக்கள் கூட்டத்தின் மீது கொலைவெறி நடைபெற்றிருக்கின்றது. இவற்றை எதிர்க்க திராணியற்றவர்கள்.

 

இன்னொரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம் அதாவது புலிகளின் அரசியல் துரோகத்தினால் பழிவாங்க பட்டவர்கள் தாம் என்றால். இன்றைக்கு இவர்கள் எல்லோராலும் பழிவாங்கப்பட்ட புலிகளின் ஒரு பகுதி பெரும்பகுதியாகி உங்களை பழிவாங்க எண்ணினால் அந்தப் பகுதியின் நியாயம் கூட வரலாற்றில் சரியானதாகவே இருக்கும்.

 

நாம் கூறவருவது என்னவெனில் துரோகி, தியாகி, பழிவாங்கும் நிலைகளுக்கு அப்பால் இருந்து சிந்திக்கும் ஆற்றல். இவைகள் மக்கள் மத்தியில் வளர வேண்டும்.

 

இவற்றிற்கு மக்களுக்கான தேவையில் இருந்து உருவாகும் அரசியல் உருப்பெறவேண்டும்.

 

முன்னர் குறிப்பிட்டது போன்று நந்திக்கரையில் என்ன நடைபெற்றது என்று எவருக்குமே முழுமையாக தெரியாத வகையில் வெகுதிட்டமிடப்பட்டு ஒரு தலைமை அழிக்கப்பட்டிருக்கின்றது. இன்னொரு பகுதியினர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவற்றிடையே துரோகி என்ற சப்பை கொண்டும் அரசியல் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.

 

நந்திக்கரையில் எவ்வாறு புலிகளின் தலைமை சுற்றி+வழைக்கப்பட்டது. இதற்காக விடைதேடிச் செல்லவேண்டிய தேவை இருக்கின்றது.

 

ஏனெனில் புலித்தலைமை உட்பட 300 போராளிகள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது இவைபற்றிய உண்மை வெளியுலகத்திற்கு வரவேண்டும். புலிகளின் வீழ்ச்சி என்பது ஒரு இனத்தின் வீழ்ச்சியாகவே இனியேற்படும் ஜனநாயக மறுப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும். இது வெறும் ஆரூடம் அல்ல.

 

60 வருடகால அரசியல் வரலாறும், வன்னிநிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட அவலமும், படைவிஸ்தரிப்பு, படைத்தளம் விஸ்தரிப்பு, சிறந்தவெளிச்சிறை என்பற்றுடன் தேர்தல் அரசியல் மூலம் அந்த மக்களை தம்மீதான ஆதரவுத் தளத்தை மேற்கொள்ள அழுத்தம் என்பது ஏற்படப்போகின்றது. இதற்கு கருணா எதிர்புரட்சிகர நபரின் வழிகாட்டலில் ஒத்தைக் கட்சிப் பாசீசத்திற்கு வழிசமைக்கப்பட்டிருக்கின்றது.

 

இந்த நிலையில் மீளவும் தமிழ் மக்கள் தப்பிக்கும் பொருட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்குப் போடும் நிர்ப்பந்தம் ஏற்படுவது இயல்பாகவே நடைப்போகின்றது. இங்கு தமிழ் மக்களின் தேர்தலில் வாக்குப்போடும் சுதந்திரம் என்பது மறுக்கப்படப்போகின்றது. இவைகள் எல்லாம் ஆயுத பலத்தில் மூலமாக நடைபெறப்போகின்றவையாகும்.

 

புலிகளின் வீழ்ச்சி என்பது ஒரு இனத்தின் வீழ்ச்சியாகவே இனியேற்படும் ஜனநாயக மறுப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும். ஓரு இனத்தின் மீதான புதியவகை அடக்குமுறையாக தொடர்ந்தவண்ணம் இருக்கப்போகின்றது.

 

இன்றைய சூழலுக்கேற்ப அரசியல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது. சூழ்நிலைக்கேற்ப அரசியல் போராட்டங்களை செயற்படுத்துவது கடந்தகால தவறுகளில் இருந்து பெறப்படும் படிப்பினைகளும் எமது வழிகாட்டியாக அமையும்.

 

தொடரும்...