எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீரழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான்.  சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

 

ஏகாதிபத்திய பணத்தில் எப்போதும் லாடம் கட்டி ஆடும் பொம்மலாட்டங்கள், இனவழிப்பை இல்லையென்று சொல்வது தான் அதன் அரசியல் அடிப்படையாகும். 60 வருட காலமாக சிங்களப் பேரினவாதம் நடத்தும் இனவொடுக்குமுறையோ இனவழிப்புத் தான். அதன் ஒரு அங்கமாக நடந்ததுதான், இந்த யுத்தம்.  

 

இதை மறுத்து புதுவிசை என்ற சஞ்சிகைக்கு சுசீந்திரன் என்ற கூத்தாடி வழங்கிய பேட்டியின் சாரம் இதுதான். இதைத் தொடர்ந்து பேரினவாதத்தை ஆதரிக்கின்ற ஈழத்து இணையங்கள் வரை, இதை மறுபிரசுரம் செய்தது. அந்தளவுக்கு இந்த கூத்தாடியின் கடந்தகால நிகழ்கால அரசியல் பொம்மலாட்டம், இதற்கு துணையாக உள்ளது. புலம்பெயர் நாடுகளில், மக்களுக்கான ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு எதிராக குழிபறித்த, குழிபறிக்கின்ற நபர்களில் முதன்மையானவர் இவர். நடத்தையாலும், அரசியலாலும், இதற்கென்று பெயர் பெற்றவர். மேடைக்கேற்ற சிறந்த நடிகர். 

 

இன்று உயிர்நிழல் சஞ்சிகை ஆசிரியராக உள்ள இவர், அதன் கடந்தகால அரசியல் சீரழிவின் தொடர்ச்சியில் பயணிக்கின்றார். அத்துடன் ஏகாதிபத்தியம் போடும் பணத்தில் (தன்னார்வ நிறுவனங்களில்) 'இலங்கையரின் சர்வதேச வலைப்பின்னல்" என்ற, மக்கள் விரோத ஏகாதிபத்திய அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றார்.

 

இந்த பொம்மலாட்ட சீரழிவுவாதி கூறுகின்றார் 'மன்னிக்கணும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை." என்கின்றார். இப்படி கூறும் நீ, நம்பிக்கை ஊட்டக் கூடிய எதை நீ வைத்திருக்கின்றாய்! அதை முதலில் சொல். உன்னிடம் இல்லாதது, எப்படி சமூகத்திடம் இருக்கும். சமூகத்தின் முன்னோடியாக காட்டிக்கொள்ள முனையும் உன்னிடம் அது இல்லாத போது, சமூகத்திடம் அது இல்லை என்று சொல்லும் உன் அரசியல் நிலைப்பாடு படுபிற்போக்குத்தனமானது.

 

கடந்த 20 வருடமாக உலகம் முழுக்க ஏகாதிபத்திய தன்னார்வப் பணத்தில் சுற்றி வலம் வரும் நீ, ஒவ்வொரு சந்திப்பையும் எழுத்தையும் காட்டி பணம் வாங்கிப் பிழைத்த நீ, இந்த மக்களுக்காக எதைச் சொன்னாய்!? 'நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும்" நீ எங்கே எப்போது மக்களுக்காக முன் வைத்தாயா? அதைச் சொல்லு. நீயும், உன் கூட்டாளிகளும் 20 வருடமாக மக்களுக்கு எதிராக, மக்கள் விரோத அரசியலுடன் புலம்பெயர் நாட்டில் கூடிக் கூத்தாடினீர்கள். இறுதியில் அதில் பெரும்பான்மை, அரசு சார்பு நக்குண்ணிகளாக மாறிவிட்டனர். அவர்களுடன் இன்றும் நட்பும், கூடிக் கூத்தாடும் சந்திப்புகளும், தமிழ் மக்களுக்கு எதிரான சதிகளும் உங்கள் பின்னால் தொடருகின்றது. புலி இல்லாத இன்றைய நிலையில், இந்த கூத்தாடிகள் மக்களுக்கு சொல்லவும், வழிகாட்டவும், அவர்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.

 

இப்படி இந்த மக்களுக்காக என்னத்தை நீங்கள் நம்பிக்கையுடன் சொன்னீர்கள்? ஒவ்வொரு கூட்ட அழைப்பிலும் பெயரை தவறாது பதிவு செய்து, அதை காட்டி ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனத்திடம் பணம் பெற்று வாழ்ந்த வாழ்வுதான், தமிழனைச் சொல்லிப் பிழைக்கும் உங்கள் நம்பிக்கையாக இருந்தது.

 

அந்த பணத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கையில், உலகம் முழுக்க சுற்ற முடிகின்றது. இதற்காக உன் பெயர் அழைப்பிதழில் தவறாது வருமாறு பார்த்துக்கொள்கின்றாய். இதற்கு வெளியில் மக்களுக்காக சொல்ல என்ன உன்னிடம் உள்ளது. 'மன்னிக்கணும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை." என்று சொல்ல வெட்கமாயில்லை. 20 வருடமாக இந்த மக்களுக்காக, நம்பிக்கையூட்டும் வண்ணம் நீ என்ன கருத்தை வைத்தாய்! அதைச்சொல். பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

 

நீ இன்றைய பேரினவாதம் நடத்தியதை இனவழிப்பல்ல என்கின்றாய். இதை நீ 'இவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஒருதலை பட்சமானவை. ஆகவே அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ்கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக வாழுகிறார்கள்." என்று இப்படி சப்பை கட்டி இனவழிப்பை மறுக்கும் இந்த கம்மனாட்டி, மற்றொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள். 'வாழ்வா சாவா என்று புலிகள் போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படியான விமர்சனங்களை வைப்பது சரிதானா?" என்ற கேள்வியின் போது 'இலங்கை அரசு என்ன நோக்கத்தை கொண்டிருக்கு, ஏன் இந்த இன அழிப்பை செய்கிறது என்று.." பதிலில் தனது முன் கூற்றுக்கு முரணாக தடுமாறியபடியே இந்த இனவழிப்பை மூடிமறைக்க முடியவில்லை. பிழைப்புக்கு அரசியல் செய்கின்றவர்கள், அரசியலில் தடுமாறுகின்றனர். இனவழிப்பல்ல என்ற தர்க்கம், அவரின் முரண்பாடான பதில் கூற்றில் தகர்ந்து போகின்றது.

 

உண்மையில் ஏகாதிபத்திய தன்னார்வ வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இரண்டையும் விமர்சிக்கின்ற ஏகாதிபத்திய கயிற்றைப்பிடித்துக் கொண்டு மிதக்க முனைகின்றனர். இதற்குள் இடதுசாரியத்தை கலந்து விடுகின்றார். வற்றி வரண்டு போன 30 வருட ஈழத்து சூழலில், இப்படி அரசு – புலி என இரண்டையும் மறுக்கின்ற பிழைப்புவாதம் நீடிக்கின்றது. இவர்கள் மக்களுக்காக வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக போராட மறுக்கின்ற கூத்துகள் எங்கும் எப்போதும் அரங்கேறத்தான் செய்கின்றது.

 

அரசு மற்றும் புலி சார்பு பிரிவினரை மக்கள் எதிரியாக வரையறுக்காத கூட்டங்கள், சந்திப்புகளை நடத்துவதும் நீங்கள் தான். அதேநேரம் அரசுக்கும் புலிக்கும் எதிராக, விமர்சனம் செய்து பம்மாத்து காட்டுவது, இந்த சூழலுக்கு ஏற்ற பிழைப்புத்தனம். அரசு மற்றும் புலியை விமர்சனம் செய்யும் உங்கள் அரசியல் அடிப்படைகள் என்ன? எந்த மக்கள் அரசியல் அடிப்படையில், இந்த விமர்சனத்தை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்? இந்த மக்கள் எந்த அடிப்படையில் தம் சொந்த விடுதலையை அடைய முடியும்? அதையா நீங்கள் வைக்கின்றீர்கள்!, சொல்லுகின்றீர்கள்! ஏகாதிபத்திய விமர்சன எல்லைக்குள், வயிற்றுக்குத்தைக்காட்டி பிள்ளை பெற முனைகின்றீர்கள்.  

 

இந்த நிலையில் இது "இனவழிப்பல்ல" என்று கூறும் போது, அரசு சொன்னது போல் இது என்ன புலி அழிப்பா!? சரி அது இல்லையென்றால், அது என்ன அழிப்பு!? 60 வருடமாக தமிழ் மக்களுக்கு எதிராக இனவொடுக்குமுறையை அரசு செய்கின்றது என்றால், இது இனவழிப்புத் தான். அதன் பண்பு, இடத்துக்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடுகின்றது. (இனவழிப்பு பற்றி தனிக் கட்டுரை விரிவாக பின்னால் பார்ப்போம்.)

 

இது "இனவழிப்பல்ல" என்று மறுக்க வைக்கும் காரணம் 'அரச கட்டுப்பாட்டில் வாழ்கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது." இதனால் இது இனவழிப்பல்ல. நகைச்சுவையான அரசியல் அடிப்படையும், அளவுகோலும். இன்று இலங்கையில் மலையகத் தமிழர் மேல், வடகிழக்கு தமிழர்களுக்கு உள்ளது போன்ற இனவொடுக்குமுறை இல்லை, இதனால் இலங்கையில் இனவொடுக்குமுறையே, இல்லை என்றாகிவிடுமா!?   

 

இது இனவழிப்பே அல்ல புலி அழிப்பு என்ற அரசின் இனவாத இனவழிப்பு நோக்கத்தையே, சுசீந்திரன் நாசூக்காக அரசு-புலி விமர்சனத்தின் ஊடாக முன்வைக்கின்றார். அந்த விமர்சனம் மக்களின் விடுதலைக்கான மாற்று அரசியலை வைக்கவில்லை.

 

தன்னை நல்ல பிள்ளையாக காட்ட வேஷம் போட்டு பொம்மலாட்டம் ஆட, அவர் முன்வைப்பதைப் பாருங்கள் 'ஒரு கலாச்சார மோதலை எதிர்கொண்ட தன்மை, அடக்குமுறையை எதிர்கொண்ட விதம்,…. இவைகளை யெல்லாம் வெளிப்படுத்துவதாக புகலிட இலக்கியம் இருந்ததா என்றால் இல்லை. போராட்டத்தால் ஏற்படும் அனுபவங்கள் அனர்த்தங்கள் ரணங்கள் வலி சீழ் பற்றி பேசுதா என்றால் அதுவுமில்லை. ஏன் அப்படி பேசல என்று காரணங்களைத் தேடிப் போகலாம். ஆனால் உண்மை என்னவென்றால், வெறுமனே மேல்நிலைப்பட்ட விசயங்களைப் பேசுவதாகத்தான் இருக்கு. தொடக்கம் முற்போக்கா இருந்தாலும் பிறகு மழுங்கடிக்கப்பட்டு இன்று வெறுமனே இன்னொரு நாட்டுக்கு இடம் பெயர்ந்த ஒருவர் எதை எழுதினாலும் புகலிட இலக்கியமாக பார்க்கிற தன்மையாக குறுகிவிட்டது. தமிழ் வாசகனின் தேடலும் ரசனையும் எந்தளவில் இருக்கிறதென்று யோசிக்கவேண்டியிருக்கு." என்கின்றார். சரி இதை யாருக்கு நீ சொல்லுகின்றாய்? உனக்கா? உன் நிழலுக்கா?

 

20 வருடமாக இதை மறுத்தே இயங்கியவர்களில் முதன்மையானவன் நீ. இப்படி இயங்கிதையும், இயங்க முனைந்ததையும் குழிபறித்த கும்பலில் தலைமைதாங்கி நின்றவன் தானே நீ. இலக்கியச் சந்திப்பை சீரழித்து, அதையே சீரழிவாக முன்னின்று நடத்தியவன் நீ. மக்களைப்பற்றி பேசாது, மக்கள் அரசியலை வைக்காத உங்களால்,  நீ கூறுவது போல் 'ஒரு கலாச்சார மோதலை எதிர்கொண்ட தன்மை, அடக்குமுறையை எதிர்கொண்ட விதம்,…. இவைகளை யெல்லாம் வெளிப்படுத்துவதாக புகலிட இலக்கியம் இருந்ததா என்றால் இல்லை. போராட்டத்தால் ஏற்படும் அனுபவங்கள் அனர்த்தங்கள் ரணங்கள் வலி சீழ் பற்றி பேசுதா என்றால் அதுவுமில்லை." என்ற கூற்றுக்கமைய நீங்களே காரணமாய் அமைந்த சூழலையும் மீறி எப்படி இலக்கியங்கள் படைப்பாகும்? இதை உருவாகவிடாது, அனைத்தையும் அரசியல் நீக்கம் செய்தவர்கள் தான் நீங்கள். இதைத்தான் புலியல்லாத தளத்தில் 20 வருடமாக செய்தீர்கள்.  

 

இதற்கு வெளியில் புலம்பெயர் மாற்றுத்தளத்தில், அதாவது புலியல்லாத தளத்தில் நீங்கள் செய்தது என்ன? புலிகள் மற்றும் அரசு மேல் குற்றம் சாட்டும் நீங்கள், இதற்கு பதில் எதை மக்களுக்கு மாற்றாக வைத்தீர்கள். அப்படி ஒன்றையும் நீங்கள் வைக்க முடியாது. அதை வைக்கவிடாது செயல்பட்டது தான், உங்கள் 20 வருட செயற்பாடுகள். புலிகள் மட்டும் மக்களுக்கு எதிராக இருக்கவில்லை, நீங்களும் தான். போலிக் கம்யூனிஸ்ட்டுகளின் பின் நிற்கும் புதுவிசையின்  இடதுசாரியத்துக்கு ஏற்ப, வழமையான பாணியில், சூழலுக்கும் ஆட்களுக்கும் ஏற்ப கருத்துரைத்துள்ளாய்.

 

ஆனால் நம்பிக்கையூட்டக் கூடிய எதையும், மக்களுக்காக உன்னால் சொல்ல முடியவில்லை. சமூக ஓட்டத்தில் இல்லை என்பதால், உன்னிடம் இல்லாத போனது ஏன்? ஏகாதிபத்திய தன்னார்வ செயற்பாட்டில், மக்களுக்கு வழிகாட்டும் அரசியலை அழிப்பதுதானே அதன் செயற்தந்திரம். அதைத்தான் 20 வருடமாக செய்தாய். சமூகத்தில் நம்பிக்கைய+ட்டக் கூடிய அனைத்தையும், அரசும் – புலிகளும் மட்டும் அழிக்கவில்லை, நீங்களும் தான் அதை அழித்தீர்கள். அதைத்தான் பெருமையாக நீ 'நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியாது" என்கின்றாய். என்ன திமிர் உனக்கு!

 

தொடரும்

 

 

பி.இரயாகரன்
28.05.2009