Language Selection

நாதன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரு மனிதர் இறந்தால் அந்த மனிதனை அடையாளம் காண்பதற்கு உடுத்திய அங்க அணிகளை அகற்றி விட்டே அடையாள அணிவகுப்பு நடத்தப்படுமாம். நல்லது!

 

>>புலிகள் தலைவர் பிரபாகரன் கோரமாகக் கொத்தியும்,வெட்டியும் கொலை செய்பட்டுள்ளார்.இங்கே சென்று பாருங்கள்.<<

நந்திக்கரையே எமது புதிய தேசிய அடையாளம் அங்கு ஒடிய இரத்த ஆறும் எமது நாளங்களில் இருந்து ஒடியதாகவே உணர்கின்றோம். இவைகள் ஒன்றும் இரங்கல்பா அல்ல. இது ஒன்றும் இறந்தபின்னர் எல்லோரும் புனிதர்கள் ஆவார்கள் என்ற கருதுகோளும் அல்ல. விமர்சனங்கள் வளர்ச்சியை நோக்கியதானது. ஆனால், ஒரு மனித சமூகத்தினை இல்லாது ஒழிப்பதில் இருசி காண்பது-நோய்! இதனை வக்கிர மனம்;சாடிசம், இவ்வாறு பலபெயர்களில் அழைக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களுக்குள் தன்னும் சிறிலங்கா அரசு நடந்து கொள்ளவில்லை.

 

ஆனால், எமது இனத்தின் போராட்டச் சக்திகள் பற்றிய நிலைப்பாடு எடுப்பது எமது இறைமையாகும். எமது இனத்தின் போராட்டச் சக்திகளுக்கு நீதிவழங்க எந்த அன்னியச் சக்திகளுக்கும் உரிமை இல்லை. ஏனெனில், இவைகள் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணயம், தேசிய அடையாளம், இறைமைக்குள் இவைகள் அடங்குகின்றன. இறைமையைத் தவிர்த்து விட்டு அன்னிய உதவியுடன் தமது இயலாமையைக் கடன் தீர்த்துக் கொள்ளும் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கு எதிரான எதிரிகள்-இவர்கள் எதிர்ப்புரட்சிகர சக்திகள். இந்தச் சக்திகள் சிறிலங்கா அரசை ஏகாதிபத்திய அரசு என்றும், மனித உரிமையை பாதுகாக்கின்ற அரசாகவும் பிரச்சாரப்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

தோழர் இரயா பொறுத்த நேரத்தில் பிரபாவிற்கு ஏற்பட்ட கொடுமையை வெளிக் கொணர்ந்தார்.

உலக வல்லாதிக்கங்களின் சதியால் சூழப்பட்ட நிலையில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார். கொல்வதற்கு உடந்தையாக இருந்த வல்லாதிக்கவாதிகளே ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக கூறிக் கொண்டு ஐ.நா மன்றம் வரை சென்று தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள். நிறைவேற்றுவார்கள் அல்லது நிறைவேற்ற முடியாமல் போகும். இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட தரப்பு தனது வெற்றியாகவும், தோல்வியாகவும் எடுத்துக் கொண்டு தமது பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்.

 

இலங்கைத் தீவில் உள்ள (போராட்டச்) சக்திகள் வர்க்க எதிரியை தீர்க்கமாக வரையறுத்துக் கொண்டிருக்கின்றனவா?

 

"இலங்கைத் தீவில் உள்ள (போராட்டச்) சக்திகள் வர்க்க எதிரியை தீர்க்கமாக வரையறுத்துக் கொண்டிருக்கின்றனவா?" இந்தக் கேள்வி என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது.

 

இன்றைய பொழுதில், மக்களின் எதிரியை வரையறுத்துக் கொள்வதற்கும்;

 

தமிழ் மக்களின் போராட்டம் கடந்து செல்லவேண்டிய பாதையை தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கும்;

 

அடக்குமுறையாளர்கள் தமது முற்போக்கு வேசத்தை தொடந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கு, எழுத்தாளர்களை பயன்படுத்துகின்றார்கள்.

இந்த எழுத்தாளர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தவதற்கும், அதாவது, சமூகத்தில் இருக்கின்ற எதிர்ப்புரட்சிகர கருத்துக்களையும், (போராட்டச்)சக்திகளையும் அம்பலப்படுத்துவதற்கும் அவசியமானதாகும்.

 

விடுதலைப்புலிகளை நம்பிக் கழுத்தறுத்த கொடுங்கோலர்களை இனம் கண்டு கொள்வதற்கு வர்க்க ரீதியாக பார்வை என்பது மிகவும் அவசியமானதாகும். நந்திக் கரைவரை கொண்டுவந்து விட்டு இரத்தக்களரியாக்கிய அன்னிய சக்திகளை வர்க்கப்பார்வை கொண்டே இலகுவாக இனம் கொள்ள முடியும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசு?:

 

இவர்களில் ஒருபகுதியினர் சிறிலங்கா அரசிற்கு தத்துவ விளக்கம் (http://www.blogger.com/Thenee) கொடுப்பார்கள். தமிழ் இன பாசீசத்திற்கு தத்துவ விளக்கங்கள் வரலாற்றில் கொடுக்கப்பட்டன. இன்று பாசீச அரசிற்கு தத்தவார்த்த விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

 

சிறிலங்கா அரசை ஏகாதிபத்திய எதிர்ப்பணியாக காட்டப்படுகின்றது இவை உண்மையானதா?;

 

சிறிலங்கா அரசின் பொருளாதார திட்டம் என்பது உள்நாட்டு முயற்சிகளை ஊக்கிவிப்பதாக இருக்கின்றதா?;

 

உள்நாட்டு பொருளாதாரத்தை (குறைந்தபட்சம் 1970களில் செய்ததுபோல) சுயபொருளாதார முறைகளின் கட்டியமைக்கின்றதா?;

 

இவர்கள் உலகவங்கியிடம் கடன் கேட்டு நிற்பது எவ்வாறு ஏகாதிபத்திய எதிர் நிலைப்பாடக இருக்கும்?

 

-இவை கேள்விகள்-கேட்டு ஆய்வு செய்யப்பட வேண்டிய கேள்விகள்;நாம் கேட்டுப் பார்ப்போமா?

 

சிறிலங்கா அரசு தனது சொந்த இனத்தின் ஜனநாயகக் குரலையாவது

அனுதிக்கின்றதாயின் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது-ஏன்? பல ஊடகவியலாளர்கள் அன்னிய

நாடுகளில் தஞ்சம் அடைந்தது-ஏன்? இவ்வாறு, பல கேள்விகள் இருக்கின்றன!.

குறைந்த பட்சம், தனது குடிகளுக்கு முதலாளித்துவ ஜனநாயக உரிமையை வழங்கியிருக்கின்றதா?

 

இந்த விவாதத்தில் இனமுரண்பாடுபற்றி தவிர்த்துப் பார்த்தால் கூட, இலங்கையில் வாழ்கின்ற சிங்கள மக்கள் உலக பொருளாதார நியதிக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட அரசியல்திட்டத்திற்கு அமையவே அடக்கப்படுகின்றனர். உலகில் முதலாளித்தவ பொருளாதார அமைப்பை பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சி நிரலுக்கு உட்படவே உலக வங்கியின் உதவி.

 

ஏகாதிபத்தியங்கள் உலகில் பல நிறுவனங்களில் ஆளுமையைப் பயன்படுத்தி, உலகை தமது ஆளுமையின் கீழ் கொண்டுள்ளது.

 

நிதியை வழங்கும் நிறுவனமாக-உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை இயங்குகின்றன;

 

வர்த்தகத்தில் தமக்குச் சாதகமாகக் காப்புரிமை, விலை நிர்ணயம் செய்து கொள்ள உலக வர்த்தக நிறுவனம்;

 

இராணுவ ரீதியான தேவைக்கென நேட்டோ இராணுவக் கூட்டு;

 

மக்களை திசை திருப்பிக் கொள்ள தன்னார்வக் குழுக்களைக் கொண்டு உதவி நிறுவனங்கள்;

 

மக்களை திசை திருப்பிக் கொள்ளக் "கருத்தியல்" ஊடகங்கள்;

 

அமைதிப்படை போன்ற சார்பில் மற்றைய நாடுகள் மீது தலையிடல் ;

 

ஒப்பந்தங்களின் மூலமாக ஆயுதங்களை மற்றைய நாடுகள் வைத்துக் கொள்வதில் கட்டுப்பாடு;

 

எதிர்கால ஆட்சியாளர்களை தீர்மானித்துக் கொள்வதில், மிகவும் கவனமாக இருந்து கொண்டு, தமக்கு சார்பான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல்.

 

இவைகள்,1990 முன்னர் வேகமாக வளர்ச்சியடைந்து கொள்ளாவிடினும், எந்தெந்த நிறுவனங்களில் தனது ஆளுமையை செலுத்த வேண்டும் என தெரிந்து கொண்டு, தந்திரோபாய நடவடிக்கைகள் மூலம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து(செய்து) வந்துள்ளன. (உதாரணத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் இன்று வேகமாக வளர்ந்துள்ள போதிலும், கொரியா யுத்தத்தின் போது சமாதானப்படை என்ற பெயரில் சோசலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.)

 

ஈழமண்ணில் இராணுவ ஆதிக்கத்தை செலுத்துவதற்கு முனைப்புடன் செயற்படுகின்றது. வன்னி, கிளிநொச்சிப் பகுதியில் புதிய படைத்தளத்தை விரிவாக்கப்போகின்றது.

 

இவைகள் எல்லாம் ஒடுக்குமுறை நிறுவனத்தை விரிவாக்கம் செய்கின்றது என்ற பார்வையை எதிர்ப்புரட்சிகர சக்திகள் மறைக்கின்றனர். அரை அரசியல் அறிவு கொண்டு தத்துவ விளக்கும் கொடுக்கின்றார்கள். இதே பொன்சேக்கா இராணுவத்தில் ஒரு லட்சம் பேர் சேர்ப்பு என்று அறிக்கை விடுகின்றார்.

 

ஒரு தேசிய அரசு அன்னிய மூலதனத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், சிங்கள தரகுமுதலாளிகளின் நலன் பேணுவதற்கு உதாரணமாக கீழ் வரும் செய்தியைப் பாருங்கள்.

 

இலங்கையில் சிறந்த சமாதான சூழல் நிலவுவதையடுத்து 32 இந்திய கம்கனிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதநக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீ.எல். பரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

தேசிய அரசு என்றால் இவ்வாறு அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கமுடியாது.

 

குறிப்பிட்ட முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலுக்குப் அப்பால் சிறிலங்கா அரசினால் என்ன

வகையான புதிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் படி நடந்து கொள்கின்றது? சிறிலங்கா

அரசினால் உலகவங்கியின் கடனை வாங்காது இயங்கவும் முடியாது. இவர்கள் தமது

சுயபொருளாதாரத்தை கட்டியமைக்க முடியாத நிலையில் தான் இருக்கையில்

ஏகாதிபத்தியத்திடம் இருந்து கையேந்த வேண்டியதுதான்.

ஓரு மனிதர் இறந்தால் அந்த மனிதனை அடையாளம் காண்பதற்கு உடுத்திய அங்க அணிகளை அகற்றி விட்டே அடையாள அணிவகுப்பு நடத்தப்படுமாம். அவ்வாறே கொல்லப்பட்ட பிரபாகரின் அங்க அணிகளை அகற்றிய பின்னர், அரசமந்தி கருணாவினாலும், தயாமாஸ்ரினாலும் அடையாளம் காணப்பட்டதாம், இவ்வாறு அரச ஆதரவு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. (இதனை எழுதும் போது தேடித்ப்பார்த்தேன் அந்த செய்தியை எடுக்க முடியவில்லை."Beheaded Tiger and headless chicken"-Island Editorial and manipulate Video of the GoSL தவிர...) அந்தவேளையில் அடையாளம் அணிவகுப்பு நடைபெற்றது. இவைகள் போர்க்குற்றம் என்பது ஓரு பக்கம் இருக்க சிறிலங்கா அரசால் முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களை மதிக்கவும் முடியவில்லை.

 

புலிகளை நந்திக்கரை வரை ஒதுக்கிவருவதற்கு செய்மதியின் உதவி பெறப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய செய்மதி மூலமே புலிகளின் தலைமையின் நகர்வானது (ஒன்று அன்னிய தலையீடுபற்றி நம்பிக்கை ஊட்டப்பட்ட அதேவேளை) அவர்களின் கையடக்கத் தொலைபேசி மூலமான அறியப்பட்டே வெகு நுட்பமாக புலித்தலைமை கொண்றொழிக்கப்பட்டது. இதனையே நந்திக்கரையில் என்ன நடந்தது என்று அமெரிக்கத் தூதரால் உறுதியாகவே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இராணுவ நடவடிக்கைகள் எதனை எடுத்துக் கொண்டாலும், உலகத்தில் உள்ள ஒடுக்குமுறையாளர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அனுசரணையாகத் இருந்து கொள்கின்றார்கள். சிறிலங்கா அரசு ஏகாதிபத்தியங்களின் தயவின் இயங்குவதாகவோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடு என்று கூறுவது அப்பட்டமான பொய்பிரச்சாரமே. இதன் எதிர்ப்புரட்சிகர சக்திகள் தாமும் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகள் என்று நம்பச் சொல்கின்றார்கள்.

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடு எனக் கூறும் சிறிலங்கா அரசானது, தனது மக்களையே ஒடுக்கின்ற அரசு என்பதை மூடி மறைக்க முடியாது!

 

ஒடுக்கப்படும் சிங்கள மக்களுடன், நாமும் சேர்ந்து தமிழ் தேசியத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டிய செயல்முறைகளில் நாம் இறங்குவதே மறைந்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.