Language Selection

புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.

 

புலிகளின் வெளிநாட்டு தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதன், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த உண்மையைச் சொன்னதற்காக, அவரை துரோகியாக்கி வைகோ மற்றும் நெடுமாறன் போன்ற பிழைப்புவாதிகளின் அறிக்கை வெளிவந்துள்ளது. புலிக்குள் இப்படி ஒரு பிளவு உருவாகியுள்ளது. பிரபாகரனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதா இல்லையா என்ற ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில், பிரபாகரன் விசுவாசிகள் திணறுகின்றனர்.

 

இங்கு பத்மநாதன் பிரபாகரனின் மரணத்தை சண்டையில் ஏற்பட்ட வீரமரணம் என்ற ஒரு பொய்யை இதற்கூடாக உமிழ்கின்றார். வீரமரணமான தலைவனுக்கு அஞ்சலி என்று இதற்கு ஊடாக, அவர் முன்னின்று காட்டிக்கொடுத்து கழுத்தறுத்த அந்த சரணடைவு என்ற அந்த உண்மையை புதைத்து விடுகின்றார். தமது காட்டிக்கொடுப்பை மூடிமறைக்க, மரணம் என்ற ஓரு உண்மையைப் பயன்படுத்துகின்றார்.

 

பிரபாகரன் மரணிக்கவில்லை என்ற ஒரு பொய்யைச் சொல்லத் தவறியதற்காக, அவரை துரோகியாக அறிவிக்கின்றனர் மறுதரப்பு. இப்படி இங்கு பிரபாகரனை சரணடைய வைத்த அந்தக் காட்டிக்கொடுப்பை துரோகமாக இனம் காட்டவில்லை. இங்கு பொய் சொல்ல தவறியது தான் துரோகம். இப்படி ஏற்பட்டுள்ள பிளவு எதார்த்தமாகிவிட்டது.  இனி காட்டிக்கொடுப்பை நீ தான் செய்தாய் என்று பரஸ்பரம் கூறும் தகவல்கள் சந்திக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

 

இந்தக் காட்டிக்கொடுப்பு நாடகத்தின் முன் புலித்தலைமை தன்னை பாதுகாத்துக் கொள்ள மக்களை பலியிட்டது. கட்டாயப்படுத்தி பல ஆயிரம் போராளிகளை களத்தில் பலியெடுத்தது.  இவை எல்லாம் தாண்டி தம் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, இது தன் சரணடைவையும் கூட தேர்ந்தெடுத்தது. ஆனால் உயிரை விடும் வண்ணம், இலங்கை அரசிடமல்ல. இந்த நிலையில் தான், இதைப் பயன்படுத்திய வெளிநாட்டு புலித்தலைமை காட்டிக் கொடுப்பைபும்  துரோகத்தையும் அரங்கேற்றியது.

 

இப்படி பிரபாகரனும் ஏனையோரும் வெளிநாட்டில் உள்ள புலித்தலைமையால் சரணடைய வைக்கப்பட்டனர். இதன் மூலம் அவர் நிர்வாணமாக்கப்பட்டு, பலத்த சித்திரவதைக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி, அரசுடன் நிற்கும் துரோகக் குழுக்கள் ஊடாக மெதுவாக கசிந்து வருகின்றது. புலித் தலைவர்களை இப்படி அவமானப்படுத்தி கொல்கின்ற அந்த வேலையை, அரசுடன் நிற்கும் துரோகக் குழுக்கள் முன்னின்று செய்கின்றது. பிரபாகரனின் மகன், மகள்… பிரபாகரன் கண்முன் கொல்லப்பட்டதாகவே தகவல்கள் கசிகின்றது. 

 

இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று கூறி மற்றவர்களை துரோகியாக்குகின்றனர். இப்படி பிரபாகரன் இருப்பதாக கூறுவதன் மூலம், தம் பின் நடந்த இந்த துரோகத்தை, பிரபாகரன் இருப்பதாக கூறுவதன் மூலம் பாதுகாக்கின்றனர்.

இங்கு

 

1. பிரபாகரன் வீரமரணம் அடைந்தாக உரிமை கோருவதன் மூலம், அங்கு காட்டிக்கொடுப்பும் சரணடைவும் நடக்கவில்லை என்று காட்ட முனைகின்றனர். இதன் மூலம் காட்டிக்கொடுத்த, தம் சொந்த துரோகத்தை வீரமரணம் என்றதன் மூலம் பூசி மெழுகுகின்றனர்.

 

2. பிரபாகரன் மரணிக்கவில்லை என்று கூறுவதன் மூலம், தாம் நடத்திய இந்த துரோகத்தையும் காட்டிக்கொடுப்பையும் இல்லை என்கின்றனர்.

 

பிளவுபட்டுள்ள வெளிநாட்டு புலித்தலைமையின் இரண்டு அணியும், காட்டிக்கொடுத்த அந்த நிகழ்வை தத்தம் நிலைப்பாடுகளுடாக மறுக்க முனைகின்றது.

 

இவை அனைத்தும் வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் சேர்ந்து, மிகத்திட்டமிட்ட ஒரு நீண்ட சதியுடன் அரங்கேறியுள்ளது.

 

புலிகள் வைத்திருந்த தம் பலத்தின் மேலும், போராடும் ஆற்றல் மேலுமான நம்பிக்கையை, இந்த துரோகிகள் மூன்றாம் தரப்பு என்ற மாயை ஊடாக அரசியல் ரீதியாக இல்லாததாக்கினர். இதன் மூலம், அவர்களை சரணடைய வைத்துக் காட்டிக்கொடுத்தனர். யுத்த நெருக்கடி அதிகரித்த போது, வேறு மார்க்கங்கள் மூலம் போராடித்  தப்பும் வழிகளை வேறு நம்பிக்கைகளை ஊட்டி தடுத்தனர். தப்ப பல வழிகள் இருந்தபோது, அதை அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை. வெளிநாட்டு புலித்தலைமை அதை சிதைக்கும் வண்ணம், திட்டமிட்ட வகையில் மூன்றாவது அணி மூலமான 'தமிழீழ" மீட்சி என்ற சதித்திட்டத்தின் மூலம், தம் சொந்த போராடும் ஆற்றலை நலமடித்தனர். நாங்கள் மூன்றாவது அணி மூலம் மீட்போம் என்று, நம்பிக்கை ஊட்டினர். இதன் மூலம் அவர்கள் வேறு வழியில் தப்ப முடியாத வண்ணம் கொண்டு வந்ததுடன், தம் திட்டப்படி சரணடைவை வைத்து அழித்துள்ளனர்.

 

இதற்கமைய வெளிநாட்டு போராட்டங்கள், அதன் கோசங்கள் அனைத்தும் அமைந்திருந்தன.  வேறு அரசியல் கோசங்கள், ஒரு அரசியல் மீட்சியை உருவாக்காத வண்ணம் திட்டமிட்டு அவற்றை வழிநடத்தியுள்ளனர். உண்மையில் இதன் பின்னணியில் மேற்கு உளவு அமைப்புகள் முதல் இந்திய உளவு அமைப்புகள் வரை, வெளிநாட்டு புலித்தலைமையின் பின்பாக  இருந்துள்ளது. இவை அனைத்தையும் அவையே அரங்கேற்றியுள்ளனர். புலம்பெயர் நாட்டில் நடந்த போராட்டங்கள் புலியின் மீட்பாக அமையா வண்ணம், அதன் கோசங்களைக் கூட இந்த வெளிநாட்டு புலித் துரோகிகள் ஊடாகவே, உளவு அமைப்புகள் முன்தள்ளியுள்ளனர். 

 

இன்று இந்தத் தலைமை பிளவுபட்ட போதும், தம் துரோகத்தை மூடிமறைக்க முனைகின்றது. ஒன்று தலைவனுக்கு வீரமரணம் அஞ்சலி என்கின்றது, மற்றது உயிருடன் தலைவன் இருப்பதால், எதற்கு வீரமரணம் என்கின்றது.

 

இப்படி காட்டிக்கொடுத்த துரோகிகள் கன்னை பிரிந்து நிற்க, பிழைப்புவாத இந்திய அன்னக் காவடிகள் புலித்தலைமையின் பெயரால் அறிக்கைவிட்டு இதில் பிழைக்க முனைகின்றது.

 

பேரினவாதம் இந்த துரோகத்தையும், அலுக்கோசு தனத்தையும் பார்த்து மகிழ்ச்சி கொள்கின்றது. தனக்கு எதிரான போராட்டம், துரோகத்தால் திசைமாறி சிதைவது கண்டு அதற்குள் தூண்டில் போடுகின்றது. தமிழினமோ இந்த துரோகத்தால் மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகின்றது. இந்த துரோகத்தை தோலுரித்து, மக்களை சார்ந்து அரசுக்கு எதிராக போராட அறை கூவுகின்றோம்.  இது தவிர வேறுவழியில், பேரினவாதத்தின் இனவழிப்பை நாம் எதிர்கொள்ள முடியாது.                  

 

பி.இரயாகரன்
25.05.2009


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ