தே.பொருட்கள்:

கருவாடு - சிறிது
மொச்சைக் கொட்டை - 1/2 கப்
முருங்கைகாய் - 1
வாழைக்காய் - 1
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*மொச்சையை முதல்நாள் இரவே வெறும் கடாயில் லேசாக வறுத்து ஊறவைக்கவும்.

*மறுநாள் மொச்சையை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.

*பருப்பை தனியாக வைத்து,அதே நீரில் புளியை ஊறவைத்து 1 கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*கருவாட்டை சுத்தம் செய்யவும்.வெங்காயம்+சீரகம்+கறிவேப்பிலையை நசுக்கவும்.காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தை போட்டு தாளிக்கவும்.பின் நசுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது காய்+கருவாடு+மொச்சை போட்டு இன்னும் நன்கு கொதிக்கவிட்டு,காய் வெந்ததும் இறக்கவும்.

பி.கு:
விரும்பினால் குழம்பு கொதிக்கும் போது பல்லாக நறுக்கிய தேங்காயை குழம்பு கொதிக்கும் போடலாம்.இன்னும் சுவையா இருக்கும்.

 


http://sashiga.blogspot.com/2009/05/blog-post_06.html