ழான் தார்க்´(Jeanne d´Arc) என்ற பெயரை பிரெஞ்சிக்கார்கள் கேட்கும் போதே நினைவுக்கு வருவது வீரமும் தியாகமும் தான்....

 


 

´ழான் தார்க்´ பிரான்ஸ் நாட்டில் தோரெமி (Domrémy)என்ற ஊரில் 1412-ஆம் ஆண்டில் மே மாதத்தில் பிறந்தார். அவரின் பிறந்த தேதி மே ஐய்ந்தா அல்லது ஆறா என்பதில் குழப்பம் உண்டு. இவரின் உடன்பிறந்தவர்கள் 4- பேர். 19-ஆவது வயதிலேயே லண்டன் போர் வீரர்களால் கோரமான முறையில் உயிரோடு நெருப்பில் எரிக்கப்பட்டவர். அவர் வாழ்ந்த மிக குறுகிய காலகட்டத்தில் அந்த வீரப்பெண்ணின் செயல்கள் அபாரமானவை. பிரான்ஸ் நாட்டில் ஒரு போர் குழுவுக்கு தலைவியாக இருந்து லண்டன் போர் வீரர்களுடன் போராடி வெற்றி பெற்றவர். ´ழான் தார்க்´ வெற்றி தான் Charles VII-ராஜாவாக முடிந்தது.

 

பிரான்சில் போரில் ஈடுபட்டு ஆண்களுடன் சமமாக போராடி, போர் குழுவுக்கு மிகச் சிறிய வயதிலேயே தலைமை பொறுப்பும் வகித்த ´ழான் தார்க்´ சமூகத்தில் எதிர் கொண்ட பிரச்சனைகள் அனேகம். ஒரு பெண் போர் வீரராக இருந்தது ஏற்க முடியாத மதவாதிகளும், எதிராளிகளும் எதிர் நாட்டு ராஜாவாலும் ´ழான் தார்க்´ கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அவரை விபச்சாரிக்கு சமமாக பேசினார்கள். வெகுண்ட ´ழான் தார்க்´ அவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்துவ மதத்தில் போப்பாக இருந்த CalixleIII-யிடம் தான் ஆண்களுக்கு மத்தியில் போரிட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் கற்போடு தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை நிறுபிக்க முடியும் என்று சவால் விட்டார். அந்த காலத்து வைத்தியராக இருந்த கன்னியாஸ்த்திரி பெண் ´ழான் தார்க்´கை பரிசோதித்து கற்புடன் இருப்பது உண்மையென நிருபித்தார்.

 

´ழான் தார்க்´ போரிட்டு கிடைத்த வெற்றியால் ராஜாவான Charles VI-க்கு எதிரிகளான ப்ர்குய்யோன் (Bouguignons) என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் லண்டன் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். அவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டு கோம்பியங் (Compiégne) என்ற ஊரில் ´ழான் தார்க்´கை தந்திரமாக பிடித்து லண்டன் போர் வீரர்களிடம் கொடுக்கப்பட்டார். அந்நாட்டு ராஜா பல அவதூரான வழக்குகளை தொடுத்து உயிரோடு நெருப்பு வைத்து கொல்லச் சொல்லி தண்டனை நிறைவேற்றினார். அரச ஆணைப்படி பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ழான் தார்க் 1431-ஆம் ஆண்டு 19-ஆவது வயதில் உயிரோடு நெருப்பில் எரித்து கொடுரமான முறையில் கொல்லப்பட்டார்.

 

´ழான் தார்க்´ படுகொலை பிரான்சு நாட்டு மக்களிடம் கோபத்தை உருவாக்கியது. ´ழான் தார்க்´ மீது லண்டன் அரசபை கூறிய பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வெகுண்டனர். போப் ஊயடiஒடந ஐஐஐ-1456 ஆம் ஆண்டு தவறான தீர்ப்பை மாற்றி புனித தேவைதையாக அறிவித்தார். புனித தேவதையாக ழான் தார்க் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் ´கற்பு´டன் இருந்ததும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
 
இன்றும் பிரான்சில் ஒவ்வொரு வருடம் மே 1-ஆம் தேதி அன்று உழைப்பாளர்கள் தினத்தை ´ழான் தார்க்´ நினைவு நாளாக சிறப்பிக்கின்றனர். பிரான்ஸ் நாட்டு வரலாறுகளில் ´ழான் தார்க்´ முக்கிய இடம் வகிக்கிறார்.


தமிழச்சி
01.05.2009