நித்தம் கொல்லப்படும் மக்கள், தாக்குதலினால் அங்கம் இழக்கப்படும் மக்கள், இழந்த அங்கங்களை அகற்றும் வண்டி என மக்களின் அவலங்களை காட்டிப்படுத்தும் காட்சியொழிகள். இந்த துன்பத்திற்கு விடை கிடைக்காதாக என தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருந்து திட்டித் தீர்க்கும் மனங்கள். தமது
துயரங்களை தொலைக்காட்சியில் பகிர்ந்து கொள்ளும் துன்புற்ற மனங்கள். மக்களின் இழப்புகளை தடுப்பதற்கு தம்மால் முடியவில்லை என்ற கையறு நிலையில் இருக்கின்றனர். மக்களை யாராவது தலையிட்டு காப்பாற்றுவார்களா என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இன்று புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களை வெளிக்கொண்டு வருவதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் தகுதியை அல்லது அவர்களுக்கு கொடுக்கக் கூடிய வாழ்வுரிமையை வழங்க மறுக்கின்றதையே சிறிலங்கா அரசு செய்கின்றது.
புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பவர்கள் பல தரப்பட்டவர்கள் இவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு அமெரிக்க உதவியுடன் வெளியேற்றுவதாக கூறப்பட்டது. இருந்த போதிலும் இவைகள் பிராந்திய பங்கீட்டுப் பிரிவின் அடிப்படையில் அவை இடைநிறுத்தப்பட்டன.
இன்றைய சூழலை துல்லியமாக ஆய்வு செய்வது முக்கியமாகும்.
வலதுசாரி தேசியத்திற்கு மாற்றீடான ஒரு அரசியல் நிலை உழைக்கும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
புலிகளின் அடிமட்டத் உறுப்பினர்கள்பால் கொண்ட அணுகுமுறையானது கூட பாட்டாளிவர்க்க கட்சி இருந்திருப்பின் எவ்வாறு அவர்களை அடுத்த நிலைக்கு வழிகாட்ட முடியும் என்ற எல்லைக்குள் இருந்துதான் கோரப்பட்டது.
இன்றைய சூழலில் எவ்வாறான கோசங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும் என்பதில் முரண்பாடான கருத்துக்கள் வந்திருக்கின்றன. இவைகள் அரசியல், இராணுவத் தந்திரோபாய நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வதன் என்பதான பிரச்சனை.
உலக அரங்கானது தீவிர இராணுவவாதத்தில் இருந்து சிந்திக்கும் போக்கில் வீரியம் குறைந்த நிலையில் இருக்கின்ற நிலையில் பிராந்திய நாடுகளில் உள்ள அரசுகளின் போக்கும் மாறுபட்டிருக்கின்றது. இவற்றிற்கிடையோன முரண்பாடுகள் சாதக நிலைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றின் தொடர்ச்சியாக பிராந்திய மட்டங்களில் சந்தையை விஸ்தரிக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் அவ்வவ் பிராந்தியங்களே சுயமாக செய்ய உலக பொருளாதார நிலையானது இன்று அனுமதிக்கின்றது. இருந்த போதும் அது எண்ணை வளத்தை மையம் கொண்ட நலன்களை தானே மேற்பார்வை செய்கின்றது.
இதன் தொடர்ச்சியாக இலங்கை தீவில் ஒரு இனவழிப்பை மேற்கொள்ளும் அரசுக்கு பக்க துணையாக இருப்பது இந்திய பிராந்திய வல்லரசாகும். பிராந்திய வல்லரசானது தனக்குரிய (வேலைப்) பங்கினைப் பிரித்து கற்சிதாக தமக்குரிய பங்கினை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அதாவது அவ்வவ் பிராந்தியங்களே சுயமாக செய்ய உலக பொருளாதார நிலையானது சந்தைப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் நோக்கிலான நிகழ்ச்சி நிரலில் இருந்து செயற்படுவதாகும். நிதி ஆதிக்கம் என்பது சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் நிதிநிறுவனத்தின் ஆதிக்கத்தில் உள்ள மூலதனஉரிமையாளர்களின் நலன்பால் கொண்ட பொருளாதார நலன் கொண்ட அரசியல் இராணுவ ஆதிக்க திட்டத்திற்கு அமைய நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படுகின்றன.
மக்களின் இழப்பைக் காட்டி அனுதாபத்தை பெறுவது
இழப்பை காட்டி மக்களின் ஆதரவைப் பெறுவதே புலிகளின் கடந்த 25 வருடகால யுத்த தந்திரமாகும். சிறுசிறுதாக்குதல்கள் மூலமாக படைகளைக் கொல்வதும் தமது சகாக்களை இழந்த இராணுவம் வெறித்தாக்குதலை மேற்கொள்வதும் பின்னர் இதனால் ஏற்படும் கெடுபிடிகளினால் விரக்தியுற்ற இளைஞர்கள் இயக்கங்களில் சேர வழிவகுத்ததது. மக்களும் இராணுவத்தை வெறுக்கத் தொடங்கினர். அரசியல் ரீதியாக மக்களை திரட்டுவது பற்றிய எவ்வித முனைப்பும் புலிகளுக்கு இருந்ததில்லை. ஆனால் ஏதோ தாம் அரசியல் நடத்துதவாக காட்டிக் கொண்டாலும் எல்லாம் தலைவருக்கு தெரியும், தலைவர் பார்த்துக் கொள்வார், எல்லாம் தலைவரின் வழிகாட்டலில் தான் நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு வெற்று மாயையை புலிகளின் தலைவரைச் சுற்றியே புலிகளின் அரசியல் அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை என்பது இருந்த போதும் ஈழப்போராட்டம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடைந்தது அல்ல. 1983 பின்னரான நிகழ்வில் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடாது. இயக்கங்களை வீங்கி வெடிக்கச் செய்தது. 1987 பின்பகுதியில் இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது.
ஆனால் புலிகளின் பாசீசத்தைக் காட்டி மக்களை அழிவிற்குள்ளாக்கின்ற யுத்தத்தை எதிர்க்காமல் இருக்க முடியாது. இந்த நிலைப்பாடு புலிசார் அல்லது புலியெதிர்ப்பு மார்க்சீயம் பேசுபவர்களின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டதாகும்.
இனவழிப்பை மேற்கொள்ளும் அரசிற்கு இணையாக நாமும் புலிகளை தாக்குகின்ற போது மார்க்சீயவாதிகள் மக்களிடம் இருந்து அன்னியப்பட வேண்டிய நிலைதான் உருவாகும். எமது முதல் எதிரி எம்மை ஆழும் சிறிலங்கா இனவெறி அரசும், அவர்களின் கூட்டாளிகளாக பிராந்திய, உலக வல்லரசுகளும் ஆகும். நாம் இன்றைய நிலையில் கொல்லப்படும் மக்களின் பக்கம் நிற்காது எதிரியுடன் சார்ந்தது போன்ற கருத்து உருவக்கம் என்பதும் இன்னும் பலசகாப்தங்களுக்கு மார்க்சீயத்தை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும்.
இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது. புலிகள் தம் நலன்சார்ந்த யுத்தத்தை மக்கள் நலன் சார்ந்த அதாவது ஆதிக்க இந்திய இராணுவ அரசியல் கருத்து ரீதியாக மாற்றிமைத்துக் கொண்டார்கள். இந்திய இராணுவ காலத்தைப் போலவே இன்று மக்கள் அழிக்கப்படுகின்றனர். இன்று மக்களின் அழிவு மேல் இருந்து அரசியலாற்றும் சக்திகளை இனம் காண்கின்ற வேளையில் இனக்கொலையை மேற்கொள்ளும் அரசை அம்பலப்படுத்த வேண்டிய நிலையும் அதிமுக்கியமாக இருக்கின்றது.
எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.
இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல் இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.
இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பர் மாமா மாமி; சின்னம்மா பெரியம்மர் சித்தப்பா பெரியப்பா, நண்பர்கள், அயலவர்கள் தான்.
ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.
வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.
இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே. ஆனால் புலிகளின் குறுத்தேசியவாதம் என்பது இந்த இக்கட்டான நிலையில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது.
புலிகள் தமது பாதையில் தெளிவாக இருக்கின்றார்கள். நாம் புலிகளை எதிர்க்க வேண்டிய நிலையிலும் இருக்கின்றோம். தமிழ் மக்களின் உள் எதிரி தான். ஆனால் இனத்தை மையமாக வைத்தே மக்களை கொலை செய்கின்றது. மக்களின் அழிவை தடுத்து நிறுத்தும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
புலிகள் இன்று தமது பாதுகாப்பு யுத்தத்தை செய்யும் நிலையில் இருப்பதாக வரையறுக்க வேண்டும். இவ்வளவு நிலப்பரப்பை ஆட்சி செய்தவர்கள் சடுதியாக மக்களை நட்டாற்றில் விடாது தொடர்ந்தும் போராடுகின்றனர். இவற்றை நாம் விரும்பிய சொற்பதம் பாவிக்க முடியும். ஆனால் யதார்த்தமானது தொடர்ச்சியாக போராடுவதாக ஏற்றுக் கொண்டேயாகவேண்டும். இவர்களின் போராட்ட தந்திரோபாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு எவ்வாறாக எதிர்வினையாற்றியிருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இங்கு புலிகள் போராடிச் சாகின்றார்கள் என்பது பொய்யாகாது. மேற்குறிப்பிட்டது போன்று புலிகளின் போராட்டச் சிந்தனை என்பதே அழிவின் மூலம் ஏற்படும் அனுதாபத்தில் இருந்து உருவாகும் மக்கள் பலமும், பாதிப்பினால் ஏற்படும் கோபமுமே மூலதனமாகின்றது. இந்த சிந்தனையே மக்களை பலிகொடுக்க வைக்கின்றது. புலிகளின் தலைமை தனது இருப்பை உறுதி செய்துவிட்டது. இவர்களிடம் இன்று நிலம் பறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் தொடர்ச்சியாகப் போராட பொருளாதார வளர்த்தை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.
ஆனால் இவர்கள் தொடர்ச்சியாகப் போராட பொருளாதார வளர்த்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். புலிகளின் தலைமை தெளிவற்ற முறையில் அரசியல் செயற்பாட்டை நடத்துவதாக எண்ணுவதற்கு இடமில்லை. இவர்கள் இறுதியுத்தம் அல்லது இறுதிக் காலகட்டம்
புலிகளின் பின்னான காலம் இருக்கப்போவதில்லை.
தமது எதிரியை காத்திரமாக என்றும் வரையறுக்க வில்லை. ஆனால் இன்று சர்வதேசம் திரும்பிப் பார்க்கின்றது என மேற்கு வல்வரசுகளையே மக்கள் முன்வைக்கின்றனர்.
இவர்கள் ஐ.நா வரை தம்மைப்பற்றி கவனம் எடுப்பதற்கு இன்றுவரையான இழப்புக்கள் தியாகமாக்க வேண்டிருந்தது (விலை) கொடுக்க வேண்டியிருந்தது எனக் கூறுகின்றனர்.
தமிழக தரகு முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்பது ஈழப்போராட்டத்தின் நியாயத்தை மழுங்கடிப்பதில் முன்னின்று செயற்படுகின்றது. திராவிட தேசியம் பேசியவர்களின் வழித்தோன்றலில் வந்த அரசியல் கட்சிகள், வகுப்புவாதக் கட்சிகள் என்பன போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டில் முதலாளித்துவ சட்டவரையறை கொடுக்கக் கூடிய ஜனநாயக விழுமியங்களைக் கூட தமிழ் நாட்டில் போராடுகின்ற ஈழ ஆதரவுச் சக்திகளுக்கு ஜனநாயகத்தைக் கொடுக்காது அராஜகமாக நடந்து கொள்கின்றது. மத்திய மாநில அதிகாரவர்க்கம். இவர்கள் சொந்த மக்களுக்கு கொடுக்கக் கூடிய ஜனநாயக உரிமைகளை வழங்காது சினிமாப்பாணி அரசியல் நடத்துகின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் போராட்டம் பாமர தேசபக்தர்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கத்தில் புதிய சுரண்டும் வர்க்கத்தின் உருவாக்கம் பெற்றுள்ளது. இவர்கள் திரைமறைவில் செயற்படுகின்றனர். இவர்களின் இலங்கு என்பது தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உருவாக்கிக் கொள்வதன் மூலம் இந்த சமூக அமைப்பில் சலுகை பெறக் கூடிய ஓரு வர்க்கமாக உருவாகிக் கொள்வதாகும். இதனை புலம்பெயர் தீர்மானிக்கும் சக்திகளாக தம்மை வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்கள் புலம்பெயர் நாட்டில் சலுகை பெற்ற வர்க்கப்பிரதிநிதிகளாக உருவாகிக் கொண்டு, ஈழதேசத்தவர்களின் உரிமைக்கான தரகர்களாகதம்மை பிரகடனப்படுத்திக் கௌ;கின்றனர். இந்த வர்க்கத்தவர்கள் தமது சந்தைக்கான தேவையையே தமிழீழ உருவாக்கமாகும்.
ஆனால் மக்களின் உணர்வலைகள் இழப்பினால் ஏற்படும் இரக்கமாகும் ஆனால் இன்று தீவிர வலதுசாரி கோசங்களின் பின்னால் அடிபட்டுச் செல்கின்றனர். இருந்த போதும் போராட்டத் என்பது புலம்பெயர் தேசத்திற்கேயுரியசோர்வு நிலைக்கு உட்பட்டதாகும். சோர்வு நிலை என்பது இந்த பொருளாதார அமைப்பை புரிந்து கொள்ள முடிந்திரான காரணத்தினால் இளையோர் மக்களை மண்டியிட்டு போராட்டத்திற்கு வநது பங்களிக்கும் படி இரந்து வேண்டினர்.
போராட்டம் திசைமாறிப் போய்யுள்ள நிலையில் மார்க்சீய லெனினிய வாதிகள் செய்ய வேண்டியது கடமைகள் பல உள்ளது.
எதிரியை சார்ந்து நிறபவர்கள் யார் என்றாலும் அவர்கள் மக்களின் அழிவிற்கு துணைபோகின்றனர். இவர்கள் மகிந்த சிந்தனையின் படி மக்களை அழிக்க துணைபோகின்றார்கள். எனினும் புலிகளின் குவியல் தத்துவ அரசியல் சிந்தனைப் போக்கினால் உருவாக்கப்பட்டுள்ள துயரநிலைக்கு மக்கள் சொல்லனாத்துயரை அனுபவிக்கின்றார்கள். இந்த வேளையில் மக்கள் சார்ந்த அரசியல் கோசங்கள், கோரிக்கைகளை முன்வைக்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சனைகளை கையாள்வதில் பக்குவம் அற்றவர்களாக இருப்பதையே சிலவாரங்களாக அவதானிக்க முடிகின்றது.
மக்களை அழிக்கும் சிறிலங்கா இனவாத அரச இயந்திரமே எமது முதல் எதரி இவர்களை எதிர்ப்பதற்கு மக்களையும், இருக்கும் இளம் போராளிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றுவது முக்கிய கடமையாகும். உள் எதிரியான புலிகளின் பாசீசப் போக்கை மக்களுக்கும், மடியும் இளம் குருத்துக்களுக்கும் அம்பலப்படுத்த வேண்டியதும் ஒரே நேரத்தில் இடம் பெறவேண்டிய வேலைகளாகும். ஆனால் இன்று அழிவிற்கும் கொடுக்கின்ற வேளையில் அவர்களைப் பாதுகாப்பதுதான் மார்க்சீயவாதிகள் மக்களுடன் இருப்பதற்கான முதல்படி. மாறாக புலியெதிர்ப்பாளர்கள் மகிந்த சிந்தனையுடன் ஒன்றிப் போகும் நிலைப்பாட்டிற்கு இணையாக கோசங்களையும், கோரிக்கைகளையும் முன்வைக்க முடியாது. அவ்வாறு வைக்கின்ற போது அவை மார்க்சீயவாதிகள் இனவழிவிற்கு துணைபோகின்றவர்களாவதுடன் மக்களிடத்தில் இருந்தும் அன்னியப்பட வேண்டிய நிலை உருவாகும்.
புலிகளின் தவறுகள் என்பது எமக்கான படிப்பினை. ஆனால் மக்களின் அழிவு என்பது அந்தத் தவறின் விழைவு. ஆனால் இன்று அழிக்கப்படும் மக்களை பாதுகாப்பதும், புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் நிலையும் கடமையாகின்றது. இன்றைய நிலையில் எதிரிக்கு ஒத்ததான கருத்துக்களை நாம் போராடும் இளம் போராளிகள் மீது வீசுவதும் இன்றைய தந்திரோபாயமாக அமைந்து விட முடியாது. மக்களின் துன்பதுயரங்களிலும், அவர்களின் போராட்ட வடிவத்திலும் இணைவதன் மூலமே அடுத்த கட்டத்திற்கு புரட்சிகரப் பாதையை நடைமுறைரீதியான விளக்கம் கொடுக்கவும் முடியும்.
இளம் போராளிகளைப் பர்துகாப்பதும்இ அடுத்த கட்டத்திற்கான போராட்டத்திற்கு வழிகாட்ட வேண்டிய நிலையில் இருந்துதான் கருத்துக்கள் அமைதல் வேண்டும். புலிகள் பாசீச சக்தி என்பது ஒரு முடிவானதொன்றாகும். இதில் இருக்கும் சக்திகளை அடுத்தநிலைக்கு நகர்த்துவது என்பது கூட ஒரு வரலாற்றுக் கடமைதான். வரலாற்றுத் தவறுகளை வெற்றிப் படிகளாக மாற்ற வேண்டிய பொறுப்பும் பொதுவுடமைவாதிகளுக்கு உண்டு.
பலவர்க்கங்களின் கலவைதான் தமிழ் சமூகம் இதில் ரெடிமேட் புரட்சியாளர்கள் இருக்கப்போதில்லை. வரலாற்றுப் படிப்பினைகள் இவர்களை தமது உண்மை வர்க்க எதிரியை இனம் கொள்ளச் வைக்கின்றது.
ஆனால் புலிகளினால் வளர்க்கப்பட்ட சிந்தனை என்பது படுபிற்போக்கான நிலைப்பாடானது. போராடும் தலைமையை விமர்சிக்கின்ற போது அவர்களின் பின்னால் உள்ள மக்களையும்இ போராளிகளையும் சரியான கருத்துக் களத்திற்கு வந்தடைய வைப்பது எவ்வாறு? இவ்வாறான தேவையில் எவ்வாறு வரையறுப்பது? இங்கு மக்கள் பாதிப்பின் பக்கம் இருந்தா? உள் எதிரியான புலிகளின் பாசீசத்தில் இருந்தா என்பது முக்கியமானதாகும்.
இருக்கின்ற சவால்களை முடியடிப்பது முக்கியமானதாகும். மார்க்சீய லெனினியம் இன்றைய நிலையில் போராட்ட திசையறியாது தன்னியல்பான கோசத்திற்கு உள்ளாக போராடும் புதிய தலைமுறைக்கு போராட்ட யுத்திகளை பரப்புரை செய்வது மாத்திரம் அன்றி அவர்களை வழிகாட்ட வேண்டும். அதற்கு போராடும் புதிய தலைமுறையுடன் ஒன்றித்துப் போகவேண்டிய நடைமுறைத் தேவையும் இருக்கின்றது.
இங்கு தனிமனிதர்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்பது பற்றிய பிரச்சனை அல்ல. மாறாக புறநிலை எவ்வாறு இருப்பது என்பதில் இருந்து இலங்கைக்கான போராட்டப்பாதை அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
சர்வதேச சதுரங்கம்
தமிழ் மக்களின் உரிமை என்பது அன்னியச் சக்திகளின் தயவில் பெறக் கூடியது அல்ல. உரிமைகளை தமிழ் மக்களே தமது பலத்தில் மூலம் போராடிப் பெறவேண்டும். இவற்றின் மூலமே மக்கள் தமது உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க முடியும். இந்த அடிப்படையில் இருந்துதான் போராட்டங்கள் நடைபெறவேண்டும். ஆனால் இன்று காலத்துக்கு காலம் அன்னிய சக்திகளை நம்பியே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் அசைவு வைக்கப்பட்டு வருகின்றது.
1983 பின்னர் இந்திய பிராந்தியவல்லரசு இயக்கங்களை ஊதிப் பெருக்கியது. இதனைக் கண்ட அமெரிக்க வல்லரசு எம்.ஜி.ஆர் மூலம் பணமுடிச்சு வழங்கப்பட்டு அன்னிய சக்திகளிடம் எமது போராட்டம் சரணடைந்தது. ஆனால் இது நடைபெற்று பலமாற்றங்கள் நடைபெற்றன. எதிரிகள் நண்பர்கள் ஆனார்கள் நண்பர்கள் எதிரிகள் ஆகினர்.
இன்று சிறிலங்கா அரசின் இனவழிப்பின் பின்னர் உருவாகிய அரசியல் என்பது மீண்டுமொருமுறை வெள்ளையனிடம் அடிமைகொள்ளும் முயற்சியின் இறங்கியிருக்கின்றனர். இவற்றையே புலம்பெயர் உயர்வர்க்கம் இன்று திரைமறைவில் செய்து கொண்டிருக்கின்றனர்.
களத்தில் மக்களின் பிணங்களைக் காட்டி தமிழர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பும் நிலையை திட்மிட்டே ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஒபாமாக் காச்சலை மையமாகக் கொண்டு வோசிங்டன் பக்கம் ஆலாப்பறக்க முயற்சிக்கின்றனர்.
1. ஐ.நாவில் பிரச்சனை எழுப்பப்படுவது கூட அங்கீகாரமாக கருதும் அரசியல் போக்கு
2. அமெரிக்க அரசியல் உயர்மட்டம் தமிழர்களின் நிலையை அலசுகின்றனர் என்ற அரசியல் கருத்துப் போக்கு
3.மற்றைய நாடுகளின் அரசியல் மட்டத்தில் அலசுவது கூட அங்கீகாரம் கிடைத்தற்கு ஒப்பாக கருதும் அரசியல் போக்கு
மொத்தத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அரசியல் போக்கைத் தான் குவியத்தத்துவவாதிகள் பிணங்களைக் காட்டி வழிகாட்டுகின்றனர்.
சர்வதேசம் தம்மை நோக்கி திருப்பாதா என்ற நிலைப்பாடுகள் அழிவை நிறுத்துவதாகவும், தீர்வை தரும் என்ற நம்பிக்கையிலும், இதிலும் ஒரு படி மேலே சென்று மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.
லண்டன் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் கூட ஏகாதிபத்திய அரசியல் சதுரங்க நாடகத்துக்கு உட்பட்டதே. அங்கு மக்கள் நலன் என்பது மட்டுப்படுத்தப்பட்டதே.
புலம் நாடுகளில் உள்ள போராட்ட வலுவை குறைப்பது அல்லது திசைதிருப்புவதுகுறிப்பிட்ட பிரிவினரை தமது செல்வாக்கிற்கு உட்பட்ட பிரமுகர்கள் ஆக்குவதுபோராட்டத்தின் மூலம் ஏற்படும் கசப்பான அனுபவங்களினால் புரட்சிகர சக்திகளாக இளையவர்கள் உருவாகுவதை தடுப்பது.
இவைகளின் அடிப்படையில் இருந்துத பின்னப்பட்ட அரசியல் சதிகள் தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னால் இருக்க முடியும்.