ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களைஅம்பலப்படுத்தியது எனும் தலைப்பில் தோழர் மதிமாறன் அவர்கள் அவருடைய தளத்தில் கட்டுரையை எழுதியிருந்தார்.அவரின் கட்டுரையில் மிகவும் நியாயமான ஒரு ஆதங்கம்
இருந்தது.அவர் இது வரை எழுதியிருந்த கட்டுரைகளாகட்டும் கேள்வி பதிலாகட்டும் அதில்பெரியார் தத்துவத்தினை உயர்த்திப்பிடிக்கும் முக்கிய அமைப்பு என பெதிக வினை கூறிவந்திருக்கிறார்.ஞானியின் விசயத்தில் பெரியார் திக வின் மீது ஒரு ஆதங்கத்தினை வைத்தார்.
அக்கட்டுரை மிக அதிக விமர்சனத்துக்குள்ளாகியது.அப்போது மக இ க வின் மீது அவதூறினைக்கிளப்ப ஒரு படையே கிளம்பி வந்தது.அதில் அதிஅசுரன் என்ற நபர் முதல் கோழிக்கரையான் வரை உள்ளே புகுந்து குழப்பிவிட்டார்கள். அந்த விவாதத்தில் தமிழச்சியின் கோபத்தில் குளிர் காய்ந்தார்கள் போலி பெரியாரியவாதிகள்.
எப்படியோ சுற்றி எப்படியோ மாறிப்போனதுதான் அவ்விவாதம். அந்த விவாதத்தில் கூட கலகத்தின் சார்பில் இக்கேள்வியையும் கேட்டிருந்தோம் ” எதற்காக ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கு தோள் கொடுக்கிறீர்கள் என்று” ஆனால் தமிழச்சியோ அக்கேள்வி அவரினை கேட்பதாக நினைத்து சில பதில்களை சொல்லிருந்தார்.பெரியாரின் வாரிசுகளாக பெதிக வினர் களத்தில் நிற்பதாகவும் சொல்லியிருந்தார்.
இப்போது பார்ப்பன போயஸ் தோட்டத்தில் மேயப்போன சிங்கங்களை பற்றிய எங்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவரும் இருக்கிறார் . அது இருக்கட்டும் நம்முடைய விமர்சனத்திற்கு வருவோம்.
மக இ கவின் தோழர் பார்ப்பன சாதியில் பிறந்ததாலேயே அந்த ஒட்டுமொத்த அமைப்பே பார்ப்பன சேவை செய்வது போலத்தான் பெதிக சொல்லி வருகிறது. மக இ கவின் எந்த ஒரு கேள்விக்கும் நியாயமான பதில் சொல்லாதுகேட்ட கேள்விக்கெல்லாம் பார்ப்பன அமைப்பு என்ற ஒற்றை வரியிலே பதிலளித்து வருகிறார்கள்.
யார் எந்த சாதியில் வேண்டுமானாலும்பிறக்கட்டும். தற்போது யார் சாதிரீதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை விளக்கவேண்டும் பெதிகவினர். தோழர் மருதையனின் வாழ்க்கை நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காட்டமுடியுமா ஆனால் பெரியார்திகவினரின் நடைமுறையில் பார்ப்பனீயத்தினை காணலாம். இந்த இந்திய தேர்தல் முறை பார்ப்பனீயத்தை வலுப்படுத்துகிறதா இல்லையா?
ம க இ க ஆரம்பித்தது முதல் இன்று வரை பார்ப்பன எதிர்ப்பில் சற்று சமரசம் இல்லாது களத்தில் இயங்கி வருகிறது. ஆனால் பெதிகவோ ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு செல்லாதாம் ஆனால் நல்லவர்கள் யாரென்று கோடு போட்டு காட்டுமாம் மக்கள் ரோடு போடவேண்டுமாம்.
ஏன் கடந்த தேர்தலில் (எம்.பி) காங்கிரசுக்கு ஓட்டுப்போடச்சொன்னார்கள்.கொளத்தூர் மணியின் போட்டோவினை போட்டே கூட சட்ட மன்ற தேர்தல் வரை காங்+திமுக+பாமக+கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வந்தனர். பச்சையால் ஓட்டு பொறுக்கிகள் கூறுவது போல இது எங்கள் தேதல் நிலைப்பாடுதான் என பெருமை கொப்பளிக்க இயம்புகிறார்கள் பெதிகவினர்.
ஈழப்பிரச்சினையில் என்ன நடக்கிறது இந்திய அரசு தனது மேலாதிக்க நலனுக்கான ஈழத்தமிழ் மக்களைகொன்று குவிக்கின்றது. கடந்த மாதம் வரை போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என பார்ப்பன கொழுப்போடு பேசி வந்த செயா தற்போது வேசம் போடுவது கூட தெரியுமாம்.ஆனால் நடிக்கக்கூடத் தெரியாத கருணாநிதி தற்போதுதான் ஈழ துரோகியாய் பரிணமித்திருக்கிறாராம்.
எனவே அவருக்கும் காங்கிரசுக்கும் பாடம் புகட்ட காங்கிரசுக்கு. இங்கு மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் யார் அந்த மாற்று வேட்பாளர் அதிமுகவா அல்லது பாசகவா கொளத்தூர்ர் மணியோ அதிமுகவினை ஆதரிக்க வில்லையென்கிறார். அதிஅசுரனோ பச்சையாக சொல்லுகிறார் துரோகம் செய்த திமுகவுக்கு எளிய எதிர்வினைதான் அதிமுக ஆதரவு என்று.
நேற்று வரை பார்ப்பன எதிர்ப்பு என்று பீலா விட்டுக்கொண்டு தற்போது செயாவுக்கு வால் பிடிப்பதனைஉங்களுக்குக்காக பல முறை குரல் கொடுத்த மதிமாறன் கேள்வி கேட்ட வுடனே அவர் துரோகியாகிவிட்டாரா . யார் துரோகம் செய்தது. இந்தியா மேலாதிக்கத்துக்காக போரை நடத்துகிறது. தினமும் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எப்படி முறியடிப்பது. இந்த இந்திய அரசுக்கு செருப்படியாய் தேர்தல் புறக்கணிப்பு அமைய வேண்டுமா இல்லையா. காங் திமுக துரோகி எனில் செயாவைகோ ராமதாசு எல்லாம் ஈழத்தியாகிகளா உங்களிடம் எப்படி பெரியாரியம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.
இடித்து தள்ள வேண்டிய இந்த இந்தியத்துக்கு பூ வைக்கும் வேலையில் பெதிக இறங்கியிருக்கிறது.ஈழத்தில் கொலைவெறியாட்டம் போடும் இந்தியா வுக்கு தெரியாமல் அதன் தலையில் வெண்ணையை வைப்பார்களாம் அது கண்ணை மறைத்த வுடனே தூக்கி கொண்டு வருவார்களாம்.என்ன கத வுடுறீங்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.
அது எப்படி தன்னலமற்ற வகையில் மக்கட்போராட்டத்தினை அதாவது பெரியார் சிலை உடைப்பின் போதும்,ஏன் ஆதிக்க சாதியினருக்கு எதிராக ரத்தம் சிதிய போதும், தில்லை கோயிலை மீட்கும் போரிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் இந்திய அரசினை முறியடிக்கக்கோரும் போராட்டமாகட்டும்,எல்லாவற்றிலும் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கெதிராக போராடும் அமைப்பு பெதி க வினருக்கு பார்ப்பனஅமைப்பாக தெரிகிறது.
தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.
தோழர் மருதையன் சொன்னது போல“இரண்டு அணிகள் தான் உள்ளன ஒன்று ஈழதுரோகி அணி ,மற்றொன்று ஈழத்தமிழர்களுக்கு எதிரி அணி “ இது தான் இன்றைய நிலவரம் துரோகிகளுக்கு கரசேவை செய்யகிளம்பியிருக்கும் இந்த திராவிட சுயமரியாதை பூசாரிகளை என்னவென்று அழைப்பது ?.