Mon02242020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ராஜபக்சவுக்கு மாமா வேலை பார்க்கும் 'ஊடகவியலாளர்கள்"

  • PDF

வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். தமிழினத்தை இனப்படுகொலையாகவே அரங்கேற்றும் கொலைகார இராணுவ இயந்திரத்திற்கு, மனித முகம் கொடுக்க முனைகின்றனர் புலம்பெயர் மாமாக்கள்.

 

தங்களைத் தாம் 'நடுநிலைவாதிகளாக", 'அரசியலற்றவர்களாக" 'மனிதாபிமானிகளாக" 'ஊடகவியலாளர்களாக" என்ற பல மூகமுடிகளைப் போட்டுக்கொண்டு தான், இந்த பாசிசக் கூத்தை ஊடகவியலாளர்கள் ஊடாக அரங்கேற்றுகின்றனர். இப்படி மகிந்தாவின் பிசாசுகள், இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் வெளிப்படையாக உலாவத் தொடங்கியுள்ளனர்.

 

மகிந்தாவின் 'மனிதமுகப்" பாசிசம் உருவாக்கியுள்ள நவீனமாக வதைக்கும் அகதி முகாங்களை காட்டி, குறைபாடுகள் இருந்தாலும் அவை மனிதத்தன்மை கொண்டவை என்கின்றனர். அகதி முகாங்களில் சிக்கியுள்ள மக்களைக் காட்டி, ஓப்புக்கு ஐயோ மக்கள் என்கின்றனர். புலம்பெயர் தமிழர்களே, உதவுகள் என்கின்றனர். புலி எடுபிடிகள் நடத்தும்   'வணங்காமுடி" மோசடி ஒருபுறம், புதிதாக அரச எடுபிடிகள் கும்பல் அதே மோசடித்; தொழிலைத் தொடங்க மக்கள் என்கின்றனர். 

 

இந்த புதுக்கும்பல் செய்வது என்ன? இந்த மக்களின் அவலத்துக்கு காரணமான மகிந்தாவின் பாசிசத்தை, வெளித்தெரியாத வண்ணம் அழகுணர்ச்சியுடன் புலம்பெயர் சமூகத்தில் அழகூட்டி திணிப்பதுதான், இன்று பேரினவாத எடுபிடிகளின் தொழிலாகிவிட்டது. பேரினவாத பாசிச அரசுக்கு பின்னால், புலம்பெயர் சமூகத்தை அழைத்துச் செல்ல நாலு காலில்  முனைகின்றனர்.


  
இப்படி தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவரான ரி.கொன்ஸ்ரன்ரைன், பேரினவாத அரசுடன் தான் கூடிக்குலாவி நக்கியதை பற்றி கதை ஒன்றை தேசம்நெற்றில் வெளியிட்டுள்ளார். தன்னை அப்பழுக்கற்ற நேர்மையாளனாக காட்டிக்கொண்டு, நக்கியதை காக்கின்றார்.  


 
தன் அரசியல் தூய்மையை நிறுவ, கண்மூடித்தனமாக அம்பலமாகும் புலியெதிர்ப்பையும், அரசிற்கு பின்னால் ஓடி நக்கும் கும்பலுடானான தன் முரண்பாட்டைக் காட்டி, மக்கள் சேவை பற்றிப் புல்லரிக்கும் கதைகளை சொல்ல முனைகின்றார். புலிகள் போல் அரசு தன் பாசிசத்தை வன்முறை மூலம் மட்டும் நிறுவமுற்படவில்லை. மாறாக தன்னபை;பற்றிய பிரமிப்பை பிரச்சாரம் மூலமும் செய்ய முனைகின்றது. அதற்கு ஏற்ற எடுபிடிகள்தான், இன்று மெதுவாக வெளிபட்டு வருகின்றனர். 

 

இப்போதைக்கு இவர்கள் சுத்தி சுழன்று நிற்பதோ, மனிதத்தை நலமடிக்க உருவான நவீனமான அகதி முகாம். அந்த மக்கள், அவர்களின் கண்ணீர், பேரினவாதிகளின் மனிதாபிமானம், பேரினவாதம் அந்த மக்களுக்காக விடும் கண்ணீர் என்று புலம்புகின்றனர். மோட்டுத் தமிழனால் தான் இவை என்று, பேரினவாதத்துக்கு உதவும் வண்ணம் பாசிசக் கதைகளைச் சொல்லுகின்றனர். 

 

பசில் ராஜபக்ச பற்றியும், அவரை அருமை பெருமையாக சொல்லுகின்ற 'ஊடகவியல்" வக்கிரம்தான், பேரினவாத அரச பாசிசத்தை புலம்பெயர் சமூகத்தில் திணிக்கும் நெம்புகோலாகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளையும், அவர்களின் சுதந்திரத்தையும் வைத்தா, இந்த 'ஊடகவியல்" மூலம் பினாற்றி பிழைக்கமுடியும்.  

 

இந்த 'நடுநிலை ஊடகவியல்" மூலம் பேரினவாத பாசிசத்தை இவர்கள் திணிக்கும் அரசியல் நுட்பத்தைப் பாருங்கள். 'பசில் ராஜபக்சவின் பதில் அனைத்தும் ஆதாரங்களுடன் கூடியிருந்தது. அவர் தனக்கு பக்கத்தில் ஆள் உயரத்திற்கு ஆவணங்களை குவித்து வைத்திருந்து ஒவ்வொரு கருத்திற்கும் அதற்கு தகுந்த ஆவணங்களை எடுத்து எமக்கு காட்டினார். அவரைச் சுற்றி 3 செயலாளர்கள் இருந்த போதும் செயலாளர்களை விட பசில் ராஜபக்ச சகல ஆவணங்களுடனும் மிகவும் பரிட்சயமாக இருந்தார். செயலாளர்கள் ஆவணங்களை ஆலோசகருக்கு சுட்டிக்காட்டுவதைவிட அவரே சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஏன் பக்கங்களைக் கூட தனது செயலாளர்களுக்கு கூறி உதவி செய்தார்." என்கின்றார்.

 

பாசிச அமைப்பின் கட்டமைப்பையும், அதன் ஆற்றலையும் பிரமிப்பூட்டிக் காட்டுகின்றனர். இதன் மூலம் இந்தப் பிரச்சனையை அவர்கள் தீர்க்கும் ஆற்றலுள்ளவர்களாக இனம் காட்டுவதுதான், இந்த பாசிச பிரச்சாரத்தின் அரசியல் உத்தி.

 

இதைத்தான் புலிகளும் முன்பு செய்தவர்கள். அனைவரைப் பற்றிய தகவல்களையும் புலிகள் நன்கு அறிந்து வைத்திருப்பதாக காட்டியவர்கள், மற்றவரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கவும், தம்மால் அனைத்து சமூகப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என்றும், தம் நிர்வாக மற்றம் தகவல் வடிவங்கள் ஊடாக நம்பவைத்தனர். பாசிசம் மீதான நம்பிக்கையையும், பிரமிப்பையும் இது அச்சத்தினுடாகவே விதைத்தது. இதைத்தான் தேசம் ஆசிரியர் பேரினவாத பாசிசத்தை தமிழ் மக்கள் மத்தியில் நிறுவ, இந்த தகவல் மற்றும் நிர்வாகம் பற்றிய பிரமிப்பை கதையாக ஆலாபனையுடன் சொல்லுகின்றார்.   

     

பசில் ராஜபக்ச எல்லாத்துக்கும் தகுந்த ஆதாரங்களுடன், ஆவணங்களின் துணையுடன்  பதிலளித்தார். இப்படி கரடி விடும் 'ஊடகவியல்" கைக்கூலிகள் தாம் கேட்டவைகளையும், அவரின் பதில்களையும் இங்கு முன்வைக்கவில்லை. அவர்கள் கேட்கக் கூடாத கேள்வியும், அவர்கள் கேட்காத கேள்விகளும் தமிழ்; மக்களிடம் நிறையவே உண்டு. எந்த ஆவணம், எத்தனையாம் பக்கத்தில், இதற்கு பதில் இருக்கும் என்பது இந்த 'ஊடகவியலுக்கு" அக்கறை இருப்பதில்லை. உதாரணமாக சில 

  

1. தகவல் மற்றும் ஆவணப்புலிக்கு எதுவும் தெரியாமல், எம் மண்ணில் கடத்தல், காணமல் போதல், சித்திரவதை, படுகொலைகள் நடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த 4 வருடத்தில் நடந்த கடத்தல், காணாமல் போதல், படுகொலையை ஓட்டிய ஆவணங்கள் எல்லாம் அது பற்றி என்ன சொல்லுகின்றது!? அரசு எடுபிடிகளே இதற்கு பதில் சொல்லுவீர்களா?

 

2. யுத்தத்தின் பெயரில் தமிழ் மக்களை சொந்த மண்ணில் இருந்து அடித்து துரத்த, எவ்வளவு ஆயிரம் தொன் குண்டுகளை மக்கள் மேல் போட்டனர்? நீங்கள் பார்க்க, அவர் பார்த்துச் சொன்ன அந்த ஆவணங்கள், அதைப்பற்றி என்ன சொல்கின்றது? சொல்வீர்களா!?

 

3. அரசு அறிவித்த பாதுகாப்பு பிரதேசத்தில் வைத்து இன அழிப்பாக, எத்தனை ஆயிரம் தமிழ் மக்களை கொலை செய்தார்கள்? எத்தனை ஆயிரம் பேரை காயப்படுத்தினார்கள்? எந்தனை பேரை அங்கவீனமாக்கினார்கள்? இதில் எத்தனை குழந்தைகள்? எத்தனை விதவைகள்? எத்தனை அனாதைகள்? உங்கள் நேர்மையான 'ஊடகவியல்" இதைக் கண்டறியவில்லையோ!? அங்க அந்த கொலைகார ஆவணமும் இருக்கவில்லையா!? 

 

புலி பின்பக்கமாக சுட்டதால் முதுகில் காயம் என்று கண்டறிந்த உங்கள் அறிவு, உங்களுக்கு சொந்தமானதல்ல. தமிழ் மக்களை விபச்சாரம் செய்விக்க நடித்து கடைவிரிக்கும் மாமி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் இப்படித்தான் கூறுகின்றார். இந்த முதுகு காயம் பற்றிய பிரச்சாரத் தகவல், உங்களுக்கு அரசால் தரப்பட்டது தெரிகின்றது.

 

நாலு முதுகு காயம் பற்றி பேசும் உங்கள் மனிதாபிமானமும், தர்மமும், மனிதமுகமும், கப்பல் கப்பலாக ஏற்றி இறக்கிய அந்த மனிதர்களுக்கு எங்கு எப்படி ஏன் காயப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள ஏன் முற்படவில்லை?  கப்பல்  மூலம் கொண்டுவரப்பட்ட 10000 பேரின் நிலைக்கு, யார் காரணம் என்று சொல்லத் தவறுகின்ற பிழைப்புவாத பரதேசிக் கூட்டம் தான் நீங்கள். அவர்களை பார்க்கவும், இதற்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ளவும், நாடாத மனம் தான், உங்கள் பாசிச மனம். 70000 மக்களை புலியிடம் இருந்து 'மீட்டுள்ளதாக" அரசு கூறுகின்றது, இதில் 7 இல் ஒருவரை அரசு தன் குண்டைப்போட்டு காயப்படுத்தி கப்பலில்  'மீட்டுள்ளது". இதைத்தான் கொலைகாரன் தொலைக் காட்சியில் தோன்றிய மாமி மனித 'தர்மம்;" என்கின்றார். 


              
4. சரி உங்களை 'நடுநிலை ஊடகவியல்" ஊடக சுதந்திரம் பற்றியும், அதற்காக கூச்சல் எழுப்பும் நீங்கள், சக ஊடகவியலாளர்களை இலங்கையில் கொன்றது யார் என்று, அந்தக் கொலைகாரனின் ஆவணத்தில் பார்க்கவில்லையா!? பக்கம் சொல்லி பாசிசத்தை நிறுவும் அந்த கொலைகாரனிடம் இதை நீங்கள் எத்தனையாம் பக்கத்தில் உள்ளது  என்று கேட்கவில்லையா!? அந்த கொலைகார நாய் என்ன சொன்னது!?

 

5. இலங்கை தமிழ் இனத்துக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை பற்றிய ஆவணம், எத்தனையாயிரம் பக்கத்தில் உள்ளது? அதை அங்கு காணவில்லையோ!? அது தொடருகின்ற நிலையில், அதையாவது புரட்டி பார்க்காது விருந்தில் நக்கினீர்களோ? வடிவாக நக்குங்கள்,  எதிர்காலத்தில் விருந்துடன் மது மங்கை என்று எல்லாம் கிடைக்கும்.

 

இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு? இப்படி இருக்க 'அங்கு தமிழ் உறுப்பினர்களுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நான்கு மணிநேர கலந்துரையாடல் இடம்பெற்றது. மிகமிக சாந்தமாகவும் பொறுமையாகவும் அனைத்துக் கேள்விகளுக்கும் தகுந்த முறையில் ஆதாரங்களுடன் பதிலளித்த பசில் ராஜபக்ச தான் ஒரு hயனெ ழn நபர் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி புலப்படுத்தினார்" அவர்கள் வேடம் போட்டுக் காட்ட, நக்கோ நக்கென்று நக்கினர் என்று சொல்லுங்கோ!.

 

எம் மண்ணில் மனித அவலம் ஆறாக பெருக்கெடுக்கின்றது. என்றுமில்லாத அளவில், தமிழ்மக்களை பேரினவாதம் கொன்று போடுகின்றது. நாசிகள் யூதரை தனிமைப்படுத்தி, அவர்களை முகாமில் அடைத்து வைத்திருந்தவர்களைத் தான் பின் கொன்றனர். 60 லட்சம் யூதர்களை, இப்படி நாசிகள் வேட்டையாடினர்.  இதே போல் சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களை நவீன வதை முகாங்களில் தடுத்து வைத்து, அவர்களின் எஞ்சிய அரசியல் உணர்வுகளையும் நலமடிக்கின்றனர். இதை மீறுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்படுகின்றனர். இனஅழிப்பு, இனச் சுத்திகரிப்பு ஊடாக தமிழ் இனம் இன்று வடிகட்டப்படுகின்றது.

 

இதைத்தான் இந்த புது எடுபிடிகள் 'hands on" (முன்கை எடுக்கும் நபர்) ஊடாக மெச்சுகின்றனர். அவரை தமிழ் மக்கள் பின்பற்றக் கோருகின்றனர். இந்த கொலைகாரனின் திறமை பற்றி, தமிழ் மக்களுக்கு பீற்றுவதைப் பாருங்கள். 'புலம்பெயர்ந்த மக்கள் காணாமல் போவதாக வரும் செய்திகளைப் பற்றியும் இடம்பெயரும் தமிழ் அகதிகளின் நீண்டகால எதிர்காலத்தைக் குறித்து கடுமையான கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நேரடியாக முகம்கொடுத்து தகுந்த பிரதிவாதங்களுடன் பதிலை முன்வைத்தது ஆலோசகர் ராஜபக்சவின் ஆளுமையையும் ஆற்றலையும் மிகவும் தெளிவாகப் புலப்படுத்தியது."

 

இதன் மூலம் என்ன சொல்ல முனைகின்றனர். 'பிரதிவாதம்" மூலம் 'சாந்தமாகவும் பொறுமையாகவும்", தமிழ் மக்களைக் கொன்றுபோடுவதில் தாங்கள் சரியாகவும் நேர்மையாகவும் இருப்பதாக நியாயப்படுத்தினர். அத்துடன் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்பதை 'தகுந்த பிரதிவாதங்களுடன் பதிலை முன்வைத்த"னர். இப்படி தங்கள் எஜமானனின் பெருமையை, 'ஊடகவியலாளர்கள்" தமிழ் மக்கள் முன் பீற்றுகின்றனர். தங்கள் எஜமான் தமிழ் மக்களை ஒடுக்குவதில் உள்ள 'ஆளுமையையும் ஆற்றலையும்" பற்றிக் கூறி, அவர்கள் போடும் பிச்சையை நாயைப் போல் விசுவாசமாக ஏற்றுக்கொள்ளக் கோருகின்றனர்.

 

பி.இரயாகரன்
19.04.2009

Last Updated on Sunday, 19 April 2009 09:35