அம்மா
நண்பர்கள் என்னைத்தேடி வந்து
கதவிலே தட்டும் போதெல்லாம்
தாயே நீ வெம்பிக் கண்ணீர் மல்குவதை
எண்ணி நான் வேதனைப்படுகின்றேன்.
ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என்
சிறையிலே பிறக்கிறதென்று
நான் நம்புகின்றேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாய்
இருக்காதென்று நான் நம்புகின்றேன்
அது பகலாய் தான் இருக்கும்
அது பகலாய் தான் இருக்கும்
---சமீஹ் அல் காசீம்
நன்றி:: பலஸ்தீனக் கவிதைகள்