இன்னும் மலராத் தேசமொன்றில்

இருந்து வந்தவன் நான்

இங்கு பிறந்தது

நான் மட்டுமல்ல

நீ மட்டுமல்ல

நாம். சகோரதரர்கள்...

 

தருவதற்கு கை நிறைய

அன்புண்டு என்னிடத்தில்

நானாய் நிறைந்த

அன்பைவிட ஏதுமில்லை.

என்னிடத்தில் ஓர் இதயமும்

அழுகையும் உண்டு

ஆனாலும். அவை

என்னது மட்டுமல்ல...


இன்னும் மலராத் தேசமொன்றில்

இருந்து வந்தவன் நான்.

தருவதற்கு நிறைய

அன்பினைத் தாங்கிய

நான்

இன்னும் மலராத் தேசமென்றின் பிரஜைகள் பலருள் ஒருவன்.

 

-----மொஸாம்பிக் கவிஞர் ஜொஸி. கரவெயின் ஹா