சமீபத்தில் நடந்த வர்த்தக மற்றும் வரி விதிப்பு பொது ஒப்பந்த ஸ்தாபனத்தின் ( காட்) பேச்சுவார்த்தையின் பொழுது அமெரிக்காவும் ஜரோப்பாவும் பெண்கள் அணியும் உள்ளாடைகள் ஸ்காட்ச் மதுபானத்தையும் இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவை நிர்ப்பந்தித்துள்ளன. இந்தியா ஸ்காட்ச் மதுபானத்தை இறக்குமதி செய்து கொள்ளாவிடில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நாங்கள் மறுத்துவிடுவோம் என ஜரோப்பிய நாடுகள் மிரட்டியுள்ளனர்.

 

ஒப்பந்தப்படி இந்த நாடுகள் இந்தியாவுக்கு இரசாயன மற்றும் மருந்துப்பொருட்களைத் தான் ஏற்றுமதி செய்யவேண்டும். அதை விடுத்து இப்படி மிரட்டுவது தனது தன்மானத்திற்கு விடப்பட்ட சவால். நமது அன்னிய செலவாணியைச் சூறையாடும் மிகப் பெரிய ஊழல் என சில பத்திரிகையாளர்கள் ஏகாதிபத்தியங்களின் இந்த ஆதிக்க-சுரண்டல் நடவடிக்கையை அம்பலப்படுத்தியுள்ளனர்.