பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் முக்கிய பதவியில் இருந்த அபுல்கனி இஸ்ரேலிய உளவாளியாக செயற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அரபாத்தின் நிழல் அமைச்சரவை உறுப்பினர்களில் பதில் உள்நாட்டு அமைச்சராக இருந்துள்ளார். இவரிடமே தற்போது உருவாகும் அரபாத்தின் கைக் கூலித்தனமான பொலிஸ்படையை அமைக்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

 

இவ் உளவாளி கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே பாலஸ்தீன முன்னாள் பாதுகாப்புப் பொறுப்பாளர் அரிவ்யெய்சோ பிரான்சில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வகையில் தனது சுயநலத்தை கொண்டு பல ஆயிரம் பாலஸ்தீன மக்களின் படுகொலைக்கும், போராளிகளின் கொலைக்கும் துணை போயுள்ளார். இது போன்று எம்மண்ணின் இயக்கங்களுக்குள் ஊடுருவிய மாற்று இயக்க உளவாளிகள் நிறையவே இருந்தனர். இயக்கங்களை அழிக்கின்ற காலத்தில் இதை நிறையவே காணமுடிந்தது. போராட்டத்தில் இது போன்ற துரோகிகள் போலிகள் நிறையவே வருவர். இவர்களை இனம் காண எபபோதும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் எமக்கு சுட்டிக்காட்டும் வரலாற்றுப் படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்வோம் போராடுவோம்.